Saturday, September 1, 2012

மோடிகள் பேசலாமா?


காங்கிரஸ் தலைமையில் அமைந்த அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 2004,2009 பொதுத் தேர்தலின் போது அளித்த வாக்குறுதியை காப்பாற்றவில்லை என்று குஜராத் மாநில முதல் அமைச்சர், உச்சநீதிமன்றத்தால் நீரோ மன்னன் என்று அர்ச்சனை செய்யப்பட்ட நரேந்திரமோடி கூறியுள்ளார்.
மத்தியில் பி.ஜே.பி. ஆண்டதுண்டே; அந்தக் கால கட்டத்தில் பிஜேபி காப்பாற்றிய வாக்குறுதி கள் என்ன, சாதனைகள் என்ன என்று பட்டியல் போட்டுக் காட்ட மோடி தயார்தானா?
அயோத்தியில் பிஜேபி சங்பரிவார்க் கும்பலால் பாபர் மசூதி இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து மும்பையிலும் கலவரம் ஏற்பட்டதே! அந்தக் கலவரத்திற்குக் காரணம் சிவசேனா - சங்பரிவார் என்று கூறப்பட்டதே - அது குறித்து நியமிக்கப் பட்ட நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா ஆணையம் அளித்த அறிக்கையின் பேரில் சிவசேனா பி.ஜே.பி. அரசு எடுத்த நடவடிக்கை என்ன?
ஒற்றை வரியில் அந்த ஆணையத்தின் அறிக்கையை நிராகரிக்கிறோம் என்று அவ்வாட்சி நிராகரித்து விட்டதே! அதற்குப் பின் அமைந்த காங்கிரஸ் ஆட்சி நடவடிக்கை எடுக்க முனைந்தபோது பால்தாக்கரே நீதிமன்றத் திற்குச் சென்றபோது அந்தக் கூட்டம் பெரும் கலவரத்தில் ஈடுபடவில்லையா? இன்றுவரை அந்த வழக்கின் நிலை என்ன? யாருக்குத் தெரியும்?
பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி, வினய் கட்டியார் உள்ளிட்டோர் மீதான வழக்கு என்னவாயிற்று?
சாதனைகள் ஒருபுறம் இருக்கட்டும் - சட்ட விரோதமான செயல்பாடுகளில் ஈடுபட கொஞ்சம் கூடத் தயங்காதவர்கள் சவால் விடலாமா?
சட்ட விரோத ஆட்சியை, சட்டத்தைக் கையில் எடுத்துக் கொள்ள சங்பரிவார் கும்பலுக்கு அதிகாரம் வழங்கிய மோடி அரசியல் சவால்களை வெளியிடுவது வெட்கக் கேடானதாகும்.
சர்தார் சரோவர் அணைத் திட்டத்தை 2010இல் முடிப்பதாக பிஜேபி வாக்குறுதி அளித்ததே! இதுவரை முடிக்கப்பட்ட துண்டா?
விவசாயத்திற்கான மின் இணைப்பு விண்ணப் பங்கள் 3 லட்சம் நிலுவையில் உள்ளன என்பது தான் மோடி அரசின் சாதனையா?
கிராமங்களில் வறுமையை ஒழிப்போம் என்றாரே மோடி. நிலைமை என்ன? வறுமைக்குட்பட்ட குடும்பங்கள் ஆறு லட்சம் குஜராத் கிராமங்களில் உள்ளன என்பதற்கு என்ன பதில்?
பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத் தாமல் மக்களைத் திசை திருப்பும் வழியில் மத வாதத்தின் பக்கம் கவனம் திருப்பப்பட்டது; எந்த அளவுக்குச் சென்றது குஜராத் பிஜேபி ஆட்சி?
குஜராத்தில் ஒரு கிராமத்திற்குள் நுழையும் போது நீங்கள் இந்து ராஷ்டிரத்தில் நுழை கிறீர்கள் என்ற அறிவிப்புப் பலகை உங்களை வரவேற்கும். இதுதான் பிஜேபி ஆட்சியின் விளம்பரப் பலகை சாதனை!
பொய்யான வாக்குறுதிகளை அளித்திட சற்றும் கூச்சப்படாதவர்கள், டில்லியில் 2008 ஜூலையில் முஸ்லிம் பெண்கள் மாநாட்டினை நடத்தி என்னென்ன வாக்குறுதிகளைக் கொடுத்தனர்? உண்மையில் முஸ்லீம்கள்மீது  நன்னம்பிக்கை பிஜேபிக்கு இருந்தது உண்டா?
பாபர் மசூதியை இடிக்க மாட்டோம், வெறும் கரசேவை, பஜனை மட்டும் செய்வோம்; - மசூதிக்குத் தொல்லை கொடுக்க மாட்டோம் என்று நீதிமன்றத்தில் பிஜேபியின் உத்தரபிரதேச முதல் அமைச்சர் வாக்குறுதி கொடுத்தாரே. அதுபோல நடந்து கொண்டாரா?
மசூதியைத் தரைமட்டமாக்கினார்களே! அதன் காரணமாக உ.பி. முதல் அமைச்சர் நீதிமன்றம் கலையும்வரை நின்றுகொண்டே இருக்கவேண்டும் என்று தண்டனை கொடுக்கப்பட்டதே - இதன் பொருள் என்ன?
வாய்மைக்கும் நடப்புக்கும் அறவே சம்பந்த மில்லாத கட்சி பி.ஜே.பி.யே! வரவேற்கிறோம்

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...