உத்தரகாண்டம் பொய்யா?
சம்புகனின் சாவு பற்றி பல மாறுபட்ட கருத்துக்கள் இருக்கின்றன. இராமாயணம் பட்டாபிஷேகத்துடன் முடிவடைந்துவிடுகிறது. இதன் பிறகு நடந்தவை உத்தர ராமாயணத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. ஆனால் பல்வேறு உத்தர ராமாயணங்கள் இருக்கின்றன. ஆனால் வால்மீகி இவற்றை எழுதவில்லை.
ஒரு உத்தர ராமாயணத்தில் சம்புகனின் கதை இருக்கிறது. அதில் இராமன் கொன்ற காரணம் பின் வருமாறு சொல்லப்படுகிறது. சம்புகன் தன் உடலுடனேயே தேவர் ஆக வேண்டும் என்று கடுந்தவம் மேற் கொண்டான். அது குறித்து தேவர்கள் அஞ்சினர். அவர்கள் மனிதர்களை அச்சப்படுத்த மழை பெய்யாமல் செய்தனர். சம்புகன் இராமனை வணங்கினான் என்றே கூறப்பட்டி ருக்கிறது. இராமன் தேவர்களின் அச்சத்தைப் போக்க சம்புகனின் தலையைக் கொய்தான். உடனே, தேவர்கள் மகிழ்ச்சி கொண்டு மழை பெய்யச் செய்தனர். மேலும் அந்த குழந்தை உயிர் பெறச் செய்தனர்.
இவ் வாறு போகிறது அந்தக் கதை. ஆனால், புத்த சமண இராமா யணங்களில் இந்தக் கதை இல்லை. கதை உண்மை என்று கொண்டாலும் இராமன் இதை மழை பெய்வதற்காக பொது நலனுக்காக செய்தான் என்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. அந்தக் காலத்தில் மழை பெய்ய தேவர்களை மகிழ்விக்க வேண்டும் என்று நம்பிக்கை இருந்தது. ஆகவே, இந்தக் கதையை அந்தக் காலத்தில் நிலவி வந்த நம்பிக்கை சூழ்நிலையை கருத்தில் கொண்டு பார்க்க வேண்டும். இந்தக் காலத்து விஞ்ஞான அறிவை வைத்து அல்ல. சம்புகன் கொலை இந்தக் காலத்தில் யாரும் ஆதரிக்க வில்லை. அப்படி செய்ய வேண்டும் என்று யாரும் சொல்லவில்லை.
இப்படி ஒரு செய்தி ஊடகத்தில் உலவ விடப்பட்டுள்ளது. மிகச் சாமாத்தியமாக! சம்புகவதை இடைச்செருகல் என்று சொல்லி விட்டு, பிறகு அதை நியாயப்படுத்தும் கேவலத்தைக் கவனிக்கத் தவறக் கூடாது; நம்பிக்கை என்னும் பதுங்கு குழியில் ஒளிவதையும் கவனிக்கவும். தமிழ்நாட்டில் தந்தை பெரியாரும், திராவிடர் கழகமும் மூட்டிய பிரச்சாரத் தீயில் சம்புகன் கொலையை இன்று ஏற்கவில்லை என்று கூறும் நிலை ஏற் பட்டு விட்டது. எதை எதையெல்லாம் நியாயப்படுத்த முடியாதோ அவற்றை யெல்லாம் கைகழுவ வேண்டிய அவசியம் அவர்களுக்கு ஏற்பட்டுள் ளது என்பது உண்மையானால் ஒட்டு மொத்தமாக இராமாயணத்தையே கைவிடவேண்டியிருக்கும். பாரதத்தில் கீதை இடைச்செருகலென்றால் ஏற்கமாட்டார்கள். ஆனால் இராமா யணத்தில் உத்தரகாண்டம் என்பதோ இடைச் செருகல் என்பார்கள். அவர்களின் வசதியைப் பொறுத்தது.
இராமன் பிறப்பை மட்டும் நியாயப் படுத்த முடியுமா? வால்மீகி கூறும் புத்திரகாமேஷ்டி யாகம் ஆபாசத்தின் எல்லையல்லவா? வெட்டுண்ட குதிரையோடு தசரதனின் பத்தினி மார்கள் படுத்துப் புரண்டனர் - அதன்பின் யாகப் புரோகிதர்களிடம் அப்பெண்கள் ஒப்படைக்கப்பட்டனர்; இவர்கள் தசரதனின் மனைவிகளைப் புணர்ந்தனர் என்பதை நியாயப் படுத்திப் பேசப் போகிறார்களா?
இந்தியாவில் இராமாயணம் ஒன்றா இரண்டா? வால்மீகிதானே மூலம். அவன் உத்தரகாண்டத்தை எழுத வில்லை என்று எதை வைத்து எழுது கின்றனர்?
சம்புகனை இராமன் கொல்ல வேயில்லை என்றே வைத்துக் கொள் வோம் - அப்படியானால் இராமன் வருணாசிரம தர்மத்தை ஆதரிக் காதவன் என்று சாதிக்கப் போகி றார்களா?
எத்தனை எத்தனை இடங்களில் பார்ப்பனர்களின் பாதந்தாங்கியாக தன்னை வருணித்துக் கொள்கிறான்?
அனுமன் பார்ப்பன வடிவத்தில் வந்தபோது கூட காலில் விழுந்து வணங்குகிறானே இராமன்; - நான் பார்ப்பனன் அல்லன், குரங்கு வம்சத்தவன் என்று அனுமன் ஒப்புக் கொண்டபோது கூட அது எனக்கு முக்கியமல்ல. பிராமணன் உருவத்தில் உம்மைக் கண்டேன் -உம் காலில் பணிவது என் கடமை என்று இராமன் சொல்லவில்லையா?
ஒரே ஒரு வரியில் இராமன் பொய்யன், இராமாயணம் உண்மை அல்ல என்று ஒப்புக் கொண்டு இரண்டு கைகளையும் தூக்கி சரண் அடையவேண்டியதுதானே!
சக்ரவர்த்தி திருமகன் எழுதிய ராஜாஜியே இராமாயணம் பொய் என்று சொல்லிவிட்ட பிறகு வேறு எந்த அம்மாஞ்சிகள் அலறி என்ன பயன்?
வால்மீகி முனி அல்லது யார் முதலில் பாடினாரோ அந்தக் கவிஞர் ஓர் அரக்கனைக் கற்பித்தார். உள்ளும் புறமும் மகா பயங்கரமாக விரிந்த ஒரு பிரகிருதியை சிருஷ்டித்தார். தமிழர் சிலர் அந்த அரக்கனே தம் குல புருஷன் என்று வைத்துக் கொள்ள முற்படுகிறார்கள்.
கதையைச் சரித்திரமாக்கி, அதி லிருந்து பகைமையை உண்டாக்கிக் கொண்டு, ஒருவரை ஒருவர் தாக்கி, இல்லாத துக்கத்தை சம்பாதிக்கப் பார்க்கிறோம் என்கிறார் ராஜாஜி. (ராஜாஜியின் கட்டுரைகள் எனும் நூலில் பொருளற்ற சண்டைகள் எனும் தலைப்பில் எழுதப்பட்ட கட்டுரையில் இருந்து.)
இராமாயணத்தில் உத்திர காண்டம் மட்டுமல்ல. இராமாயணத்தையே காப்பாற்றிட முடியாது என்ற நிலை ஏற்பட்டு விட்டது ராஜாஜியின் கட்டுரை மூலம்.
இராமாயணத்தைக் காப்பாற்றிடத் துடிக்கும் அண்ணாவின் தம்பிகள்
ஆளானப்பட்ட ஆச்சாரியாரா லேயே இராமாயணத்தைக் காப்பாற்ற முடியவில்லை என்கிற போது, இராமாயணத்தைத் தீயிட்டுப் பொசுக்க வேண்டும் என்று சூளுரைத்த அறிஞர் அண்ணாவின் பெயரைக் கட்சியில் வைத்துக் கொண்ட அண்ணா தி.மு.க.வினர் அனுமாராகத் தாண்டிக் குதிப்பதுதான் வேடிக்கை.
செங்கோட்டையன் அவர்களை அமைச்சர் பதவியில் இருந்தும், கட்சிப் பதவியிலிருந்தும் வெளியேற்றினார் முதல் அமைச்சரும் கட்சியின் பொதுச் செயலாளருமான மாண்புமிகு செல்வி ஜெயலலிதா. அந்தக் கட்சியில் இதெல்லாம் சர்வ சாதாரணம்.
ஓராண்டுக்குள்ளேயே அமைச் சரவை ஆறுமுறை மாற்றப்பட்டுள்ளது. அனேகமாக எல்லா சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் ஓர் சுற்று அமைச்சர் பதவி கிடைத்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அது எப்படியோ போகட்டும்! வெளியேற்றப்பட்ட செங்கோட்டையன் என்ன பேசுகிறார்? நான் உண்மை யான தொண்டன் என்பதை நிரூபிக்க அனுமான் மார்பைப் பிளந்து காட் டியது போல இயக்கத்துக்காக மார்பைப் பிளந்து காட்டுவேன் என்று பேசி இருக்கிறார்.
எப்படியோ தன்னை அனுமன் என்று காட்டிக் கொண்டு விட்டார் செங்கோட்டையன். இராமாயண காலத்திலிருந்து இன்று வரை அனுமார்கள் ஆரியர்களுக்கு மிக மலிவாகவே கிடைத்து விடுகிறார்கள்.
நல்லமுத்து கம்பன் அறநிலையப் பொன்விழா ஆண்டு விழாவில்தான் இவ்வாறு பேசியிருக்கிறார்.
கம்ப இராமாயணத்தையும், பெரிய புராணத்தையும் தீயிட்டுக் கொளுத்த வேண்டும் என்று வாதம் புரிந்து இரா.பி. சேதுப்பிள்ளையையும் நாவலர் சோமசுந்தரபாரதியையும் வாதில் வென்றவர் அண்ணா. கம்பனைக் காட்டிக் கொடுக்கும் துரோகி என்று தோலுரித்துக் காட்டினார் அண்ணா. அந்த அண்ணாவின் பெயரில் ஒரு கட்சி. அதில் இப்படிப்பட்ட தள(ர்)பதிகள்!
பதவியைத்தான் பறி கொடுத்தார்; அண்ணாவின் கொள்கையையும் கூடவா பறிகொடுக்க வேண்டும்? இன்னொரு தகவலையும் இந்த நவீன அனுமார்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த வால்மீகி மூல இராமாயணத்திலேயே கூட அனுமார்களுக்குக் கடைசியில் கிடைத்த பரிசு என்ன தெரியுமா?
இதோ!
வால்மீகி இராமாயணம் (உத்தர காண்டம். சமஸ்கிருதத்தில் உள்ளதை பதத்துக்கு பதம் தமிழ் வசன நடையில் காலம் சென்ற ராவ் சாகேப் பி.எஸ்.கிருஷ்ணசாமி அய்யரால் மொழி பெயர்க்கப்பட்டுள்ள புத்தகத் தில் எழுதி உள்ளதை கீழே அப் படியே ஆதாரமாகத் தருகிறோம். இராமாயணப் பிரியர்கள் படித்துப் பார்ப்பார்களாக!)
மேற்கண்ட புத்தகம் பக்கம் 555-ல் ராமபட்டாபிஷேக காலத்தில் வெகு மானிக்கப்பட்டவர் பட்டியல் தரப்பட்டுள்ளது. புருஷோத்தமர் (இராமர்) லட்சம் குதிரைகளையும், அப்படியே அப்போது ஈன்ற பசுக்களையும் நூறு காளை மாடு களையும் முதலில் பிராமணர்களுக்குத் தானம் செய்தார். (பக்கம் 556)
மீண்டும் இராமர் பிராமணர்களுக்கு முப்பது கோடி பொன் நாணயங் களையும், மிகவும் விலையுயர்ந்த பொன் ஆபரணங்களையும் வஸ்திரங் களையும் தானம் செய்தார்.
தன்னுடன் இராவணன் மீது நடத்தப்பட்ட போரில் உதவிய சுக்ரீவனுக்குப் பொன் ஆரம் ஒன்றைக் கொடுத்தார். அங்கதனுக்குத்தான் வளையம் கொடுத்தார். அனுமானுக்கு சீதை இரண்டு வஸ்திரங்களைக் கொடுத்தார். சீதைக்கு ஒரு முத்தாரத்தை இராமர் கொடுத்தார். இலங்கை பக்கமே தலை எடுத்து வைத்துப் படுக்காத, போர்க் களத்தின் பக்கமே தலைகாட்டாத பார்ப்பனர்களுக்கு முப்பது கோடி பவுனாம், லட்சம் குதிரைகளாம், பசுக்களாம், கடைசிவரை எல்லாக் களத்திலும் துணை நின்ற அனுமா னுக்கு இரண்டு வஸ்திரங்களாம்.
சூத்திரனுக்கு ஒரு நீதி; தண்டச் சோறுண்ணும் பார்ப்பானுக்கு ஒரு நீதி. இதுதான் இராமாயணம்.
மார்பைப் பிளந்து தன்னை அனுமார்களாக வரித்துக் கொள்ளும் செங்கோட்டையன்கள் இதனைத் தெரிந்து கொள்வதோடு மட்டுமல் லாமல் புரிந்து கொள்ளவும் வேண்டும். இப்பொழுது அவருக்கு ஏற்பட்டுள்ள நிலைமை உட்பட!
தமிழன் தலையில் மிளகாய் அரைக்கும் கூட்டம்
புதுவையை அடுத்த ஆரோவில் அருகே உள்ள இடையஞ்சாவடி கிராமத்தில் வர்ணமுத்து மாரியம்மன் கோயில் திருவிழாவில் பக்தர்களுக்கு மிளகாய் தூள் கரைசல் மூன்று கைகள் கொடுக்கப்பட்டது. அதனை அவர்கள் வாங்கிக் குடித்தவுடன் அவர்களின் தலையில் அக்கரைசல் ஊற்றப்பட்டது (3-.7.-2012).
ஏமாந்தவன் தலையில் மிளகாய் அரைப்பது என்பது நம் நாட்டுப் பழமொழி. பக்தியில் புத்தியைப் பறி கொடுப்பவனும் ஏமாந்தவன்தானே! அதுதான் இங்கும் நடந்திருக்கிறது.
பக்தி என்று வந்துவிட்டால் புத்தி போகிறது என்பது மட்டுமல்ல; மான அவமானம் பற்றியும் கவலைப் படுவதில்லை.
சேலம் அன்னதானப்பட்டியில் செருப்படி திருவிழா நடைபெறுகிறது. தட்சணை கொடுத்தல்லவா படித்த வர்களும் கோயிலுக்குச் சென்று செருப்படி படுகின்றனர்.
பெண்கள் கூட பெரிய பாளையத் தம்மன் கோயிலுக்குச் சென்று சாமி கும்பிடும்போது வேப்பிலையை மட்டும் உடலில் கட்டிக் கொண்டு கிட்டத்தட்ட நிர்வாணமாக நிற்கி றார்கள். இவ்வளவுக்கும் அக்கோயில் அர்ச்சகர்கள் ஆண்கள்தான்.
பார்ப்பான் பஞ்சகவ்யம் என்று கூறி, மாட்டு மூத்திரம், சாணம், பால், தயிர், வெண்ணெய் இவற்றைக் கலக்கிக் கொடுத்தால் பயபக்தியோடு தட்சணை கொடுத்தல்லவா, முகம் சுளிக்காது மொடக்கு மொடக்கு என்று குடிக் கிறான். கீழே அது சிந்தினால், அதனை அப்படியே கையில் வாங்கித் தலையில் அல்லவா தடவிக் கொள் கிறான். நமது முட்டாள்தனத்தை அளக்கும் தர்மா மீட்டர் என்று தந்தை பெரியார் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை.
ராஜமரியாதை ஒரு பொழுதுதானா?
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை அடுத்த திருவரங் குளம் அரங்குளலிங்கநாதர் திருக் கோயிலில் ஆடிப் பூரத் தேரோட்டம் நடந்தபோது வடம் தொட்டுக் கொடுப்பதற்காக தாழ்த்தப்பட்ட இனத்தவர் வெண்கொற்றக் குடை பிடித்து ராஜமரியாதையுடன் அழைத்து வரப்படும் காட்சி.
தேவகோட்டையில் தேர் இழுக்க தாழ்த்தப்பட்டவர் வந்தால் உயர் ஜாதியினர் உறுமுகின்றனர். புதுக் கோட்டையில் தாழ்த்தப்பட்டவர் களுக்கு இப்படி ராஜமரியாதை - ஏன் இந்த முரண்பாடு?
ஏதோ ஒரு நாள் கோயில் திருவிழா வின்போது ராஜமரியாதை கொடுத்தால் போதுமா? அந்தத் திருவிழா முடிந்த அடுத்த நொடியில் அந்தத் தோழருக்கு அளிக்கப்படும் மரியாதை என்ன என்பதுதான் கேள்வி.
ஒரு நாள்தான் உனக்கு மரியாதை - மற்ற நாளில் மரியாதையாக ஒதுங்கிப்போ என்று சொல்லாமல் சொல்லுவதுதானே இதற்குள் புதைந்திருக்கும் சம்பிரதாயம்?
நந்தனைக் கூட தீக் குளித்து விட்டு தானே நடராஜன் வரச் சொன்னான்? அதன் பொருள் என்ன? நந்தன் பறை ஜாதி! -தீக்குளிக்கச் செய்தால்தான் தீண் டாமையைப்போக்க முடியும் என்று கட வுளே கருதுவதாகத்தானே பொருள்?
இந்து மதக் கண்ணி வெடியைக் கண்டு ஏமாற வேண்டாம்! எச்சரிக்கை!
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
No comments:
Post a Comment