Tuesday, August 7, 2012

படித்தாலும் பணி புரிந்தாலும் மீண்டும் வலம் வருவேன் தடகள வீராங்கனை சாந்தி பேட்டி


புதுக்கோட்டை மாவட்டம் கத்தக்குறிச்சியைச் சேர்ந்தவர் சாந்தி. 2006-ஆம் ஆண்டு கத்தார் நாட்டில் தோகாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் 800-மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொண்டு வெள்ளிப் பதக்கம் பெற்று வந்து உலக அளவில் இந்திய மானத்தைக் காப்பாற்றியவர். அவர் அந்தப் பதக்கம் பெறவில்லை என்றால் பதக்கப் பட்டியலில் இந்தியா விடுபட்டுப் போயிருக்கும். அந்தப் பதக்கத்தைப் பெற்று வந்த சாந்தி இப்போது செங்கற்சூளையில் ரூபாய் 200-க்கு வேலை பார்த்து வருகிறார். இது குறித்து ஊடகங்கள் செய்தி வெளி யிட்டன என்றாலும் பரபரப்புக்குக் குறைவில்லை. அவரைப் பற்றி அனைவரும் கிட்டத்தட்ட மறந்திருந்த வேளையில் இப்படி ஒரு பரபரப்பு செய்தி வெளியானதால் பத்திரிகை உலகின் மத்தியில் மீண்டும் தலைப்புச் செய்தியாகிப் போனார். அவருக்கு இழைக்கப் பட்டது வருணாசிரம தருமத்தின் விளைவுதான் என்பதை தெள்ளத் தெளிவாக விடுதலையில் தலையங்கமாக வெளி வந்தது. அந்தச் செய்தியைப் படித்த சாந்தி உண்மையை வெளியில் கொண்டு வந்ததற்கு நன்றி தெரிவித்தார்.
மேலும் நடந்த சம்பவங்கள் குறித்து விளக்கினார். அப்போது அவர் 'என்ன காரணமோ தெரியவில்லை வெற்றி வாகை சூடி வந்த நேரங்களில் என்னை வரவேற்பதற்குக் கூட யாரும் வருவ தில்லை. ஆனால் தேசிய விளை யாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு வந்து இறங்குபவர்களைத் தோளில் சுமந்து வருவார்கள். அதைக் கண்டு என் மனம் வெதும்பும். என்றாலும் சாதிக்க வேண்டும் என்கிற வெறி மேலும் மேலும் ஏறிக் கொண்டேயிருக்கும். அதுதான் ஓடவைத்துக் கொண்டு இருக்கும். கலந்து கொண்ட அத்தனை போட்டி களிலும் பதக்கங்கள் வாங்கியிருக் கிறேன். தோகாவில் வெள்ளிப் பதக்கம் வாங்கி வருவதற்கு விளையாட்டு ஆணையத்திற்கு என் உதவி தேவைப் பட்டிருக்கிறது. ஆனால் பாலினம் குறித்த பிரச்சினை வந்தபோது என்னைக் கை விட்டு விட்டார்கள். ஆப்பிரிக்கா வீராங்கனை கோஸ்டர் சமன்யாவிற்கு இதே பிரச்சினை வந்தபோது அந்த நாடும் அந்த நாட்டு விளையாட்டுத்துறையும் ஒன்றாக கைகோர்த்து நின்றது. எனக்கு பிரச்சினை என்று வந்தபோது உதவிக்கு வரவேண்டியவர்கள் ஒதுங்கிக் கொண் டார்கள். எனது பிறப்பு குறித்து மனதை நோகடித்துக் கொண்டேயிருக்கிறார் கள். நான் என்ன தவறு செய்தேன்?
புதுக்கோட்டையில் தற்காலிகப் பயிற்சியாளராகப் பணிபுரிந்தபோது பேப்பர் போடும் பையன்கள் பால்பாக்கெட் போடும் பையன்கள் கடைகளில் வேலை செய்து வந்த பையன்கள் என்று தேடித்தேடிப்பிடித்து அவர்களுக்குப் பயிற்சியளித்தேன். சுமார் 70-பேர் பயிற்சி பெற்றனர். அவர்களில் பலர் இப்போது இந்திய தேசிய அளவில் நடக்கும் போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களும் பரிசுகளும் பெற்று வருகிறார்கள். அவர்களின் பயிற்சிக்காக என் சம்பளம் முழுவதையும் செலவு செய்திருக்கிறேன். அந்த மாணவர்களுக்கு உடைகள் விளையாட்டு ஷூக்கள் போன்ற வற்றிற்கு மற்றவர்களிடம் உதவி பெற்று செய்திருக்கிறேன். அதனால் வந்த வெறுப்புதான் பணியை உதறியதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக செங்கற்சூளையில் வேலை செய்ததும். அவற்றை எல்லாம் கசப்பான அனுப வங்களாக எடுத்துக் கொண்டு இனி படிப்பும் பணியும் விளையாட்டுத்துறை நாட்டுக்குப் பெருமை சேர்க்க பாடுபட வேண்டியதுதான்.
நான் விளையாட்டுத்துறையை ஏமாற்றுகிறேன் என்றால் எனது பிறப்புச் சான்றிதழைக் கொடுத்த டாக்டர் குற்றவாளியா? இவ்வளவு நாள் படித்திருக்கிறேனே கல்விச் சான்று கொடுத்த ஆசிரியர்கள் அலுவலர்கள் எல்லாம் குற்றவாளிகளா? மனதைக் குத்திக் குதறுகிறார்கள் என்கிறபோது சோர்வு ஏற்பட்டு விடுகிறது. அடுத்ததாக என்னைத் தேற்றிக் கொள்ள படாதபாடு பட வேண்டியிருக்கிறது.
சமீபத்தில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களுக்குப் பின் ஊடகச் செய்திகளுக்குப் பின் சென்னையில் ஒரு கல்வி நிறுவனம் ரூபாய் 25-ஆயிரம் சம்பளம் தருவதாக பணிக்கு அழைத் திருக்கிறார்கள். விளையாட்டுத்துறை அமைச்சர் அஜய்மாய்கான் பெங்களூ ருவில் விளையாட்டுத்துறையில் மேற்படிப்பு படிக்க வைப்பதாக உறுதியளித்திருக்கிறார். அதை உறுதிப் படுத்தும் விதமாக சாய் (ஸ்போரட்ஸ் அத்தாரிட்டி ஆப் இந்தியா) அமைப்பு என்.அய்.எஸ் (நேசனல் இன்ஸ்டிட்யுட் ஆப் ஸ்போரட்ஸ்) படிக்க வைக்க உறுதி யளித்திருக்கிறது. செங்கற்சூளையிலேயே என் காலம் கடந்து விடுமோ என்று கவலையில் இருந்த எனக்கு விளை யாட்டுத்துறை அமைச்சரின் வாக் குறுதியால்  இப்போது கொஞ்சம் நம்பிக்கை பிறந்திருக்கிறது.
நான் படித்தாலும், பணி புரிந்தாலும் மீண்டும் அனைத்துப் போட்டிகளிலும் கலந்து கொண்டு நம் நாட்டிற்கு வெற்றிகளைக் குவிப்பேன். விளையாட் டுத்துறையின் ஒத்துழைப்பு இருந்திருந் தால் எனக்கு இது இரண்டாவது ஒலிம்பிக் போட்டியாக இருந்திருக்கும். என்னால் சில பதக்கங்களை இந்தியா விற்குக் குவித்திருப்பேன். ஆனாலும் மறுபடியும் விளையாட்டுத்துறையில் ஒளிர்வேன் என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார். மீண்டும் விடுதலைக்கு நன்றி தெரிவித்தார்.
- ம.மு.கண்ணன்


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...