Tuesday, August 7, 2012

அறிவியல் சிந்தனை - முதுமை அடைவது எப்படி?


நேரம் என்பது தொடர்புடைய ஒரு கோட்பாடு என்பதும், கடல் மட்டத்திற்கு மேல் எவ்வளவு உயரத்தில மனிதர்கள் வாழ்கிறார்களோ அவ்வளவு வேகமாக அவர்கள் முதுமை யடைகிறார்கள் என் பதுமான விஞ்ஞானி ஆல்பர்ட் அய்ன்ஸ் டீன் அவர்களின் 100 ஆண்டு பழமையான கோட்பாடு உலகின் மிகத் துல்லியமான கடிகாரத்தால் தெளி வாக மெய்ப்பிக்கப்பட் டுள்ளது.
அன்றாட வாழ்க்கை உணர்த்துவது போல நேரம் என்பதும் இடைவெளி என்பதும் நிலையானது அல்ல என்று கூறும் அய்ன்ஸ்டீன் அவர்களின் தொடர்புக் கோட்பாடு கூறுகிறது. ஒளியின் வேகம் ஒன்றுதான் உண் மையில் நிலையானது என்று கூறும் அவர், நீங்கள் கடல் மட்டத்தில் இருந்து எவ்வளவு உயரத்தில் வாழ்கிறீர்கள் என்பதைப் பொறுத்தோ அல்லது எவ்வளவு வேகமாக நீங்கள் பயணம் செய்கிறீர்கள் என்பதைப் பொறுத்தோ நேரமும் வேகமாகவோ, தாமதமாகவோ ஓடக்கூடியது என்று கூறியுள்ளார்.
பூமியில் உயிரினம் தோன்றி வாழ்ந்து வரும் காலத்துக்கு ஏறக் குறைய சமமான காலமான 3.7 பில்லியன் ஆண்டுகளில் ஒரு வினாடி வேறுபாட்டை மட்டுமே காட்ட இயன்ற ஒரு மின்னணு கடிகாரத்தின் மூலம் அய்ன்ஸ்டீன் கோட்பாட்டின் இயல்புத் தன்மையை மிகமிகத் துல்லியமாக, முதன் முறையாக, ஆராய்ச்சியாளர் கள் சோதனை மூலம் மெய்ப்பித்துக் காட்டியுள்ளனர்.
கொலர்டோ போல்டரில் உள்ள அமெரிக்க தேசிய தரங்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் ஜேம்ஸ் சின் வென் சூ மற்றும் அவரது தோழ ரும் இரண்டு கடிகாரங்களை கடல் மட்டத்தில் இருந்து ஒரு அடி உயர இடைவெளியில் அமைத்து சோதனை செய்ததில் அய்ன்ஸ்டீன் கூறியபடி எவ்வளவு உயரத்தில் இருக்கிறோமோ அவ்வளவு வேகமாக நேரம் ஓடுகிறது என்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.
இந்தத் துல்லியமான கடிகாரங்கள் புவிஈர்ப்பு விசை ஆற்றலையும் மிகச் சரியாக வெளிப்படுத்துகிறது. எனவே, ஒரு கோளுக்கு அருகில் ஒரு கடிகாரத்தை வைத்தால், புவி ஈர்ப்பு விசை அதிகமாக ஆவதுடன்,  அதனை விட அதிக உயரத்தில் வைத்திருக்கும் மற்றொரு கடிகாரத்தை விட மெதுவாக ஓடுகிறது என்று சூ கூறினார். ஒரு மின் மண்டலத்தில் அடைக்கப்பட்ட அலுமனிய அணுக் களின்  நுண்ணிய அதிர்வுகளை அடிப்படையாகக் கொண்ட இந்த மின்னணு கடிகாரங்கள் ஆய்வுக்குப் பயன்படுத்தப்பட்டன. லேசர்களால் கண்டுபிடிக்கப்பட இயன்ற புறஊதாக் கதிர் ஒளியின் அதே அலைவரிசை யில் இந்தத் துடிப்புகளும் இருந்தன. ஒரு வினாடியின் நூறுகோடியில் ஒரு பங்கு நேரத்தைத் துல்லியமாக அள விடும் ஆற்றல் கொண்ட மின்னணு கடிகாரங்கள் இவை என்பதே இதன் பொருள்.
தரைக்கு மேல் இருக்கும் உயரத் தைக் கொண்டு காலத்தின் விரி வாக்கத்தைக் கண்டுபிடிக்க இயன் றவை இந்த கடிகாரங்கள்.  ஒவ்வொரு அடி உயரத்திற்கும்  ஒரு வினாடியில் 90 பில்லியனில் ஒரு பங்கு நேரம் என்ற விகிதத்தில், 79 ஆண்டு கால வாழ்வில் மனிதர்கள்,  வேகமாக முதுமை அடைவார்கள் என்று சூ கூறுகிறார். அது மட்டுமன்றி, விண் வெளியில் பயணம் செய்யும் பாதிப்பை வேறுவழிகளில் ஏற்படுத்தும்போது, இந்த கடிகாரங்களில் அய்ன்ஸ்டீனின் தொடர்புக் கோட்பாடு கூறுவதைப்போல நேரம் மெதுவாக செல்கிறது என்பதை யும் இடந்த விஞ்ஞானிகள் சோதனை மூலம் எடுத்துக் காட்டியுள்ளனர்.


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...