Monday, August 27, 2012

அரசுக்கு விரோதமாக அரசு விளம்பரமா?


இப்படி ஒரு விளம்பரம் ஏடுகளில் வெளி வந்துள்ளது. சேது சமுத்திரத் திட்டத்தை செயல் படுத்தக்கூடாது- ராமன் பாலத்தை இடிக்கக் கூடாது. 17 லட்சத்து 25 ஆயிரம் ஆண்டுகளுக்குமுன் ராமன் கடலில் பாலம் கட்டினான் என்று சங்பரிவார்க் கும்பலும் சுப்பிரமணியசாமிகளும், அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் செல்வி ஜெய லலிதாவும் அடம் பிடிக்கிறார்கள் -  உச்சநீதிமன்றம் சென்று இடைக்காலத் தடையும் பெறப்பட்டுள்ளது. தொல்லியல் துறையோ அது ராமர் பாலம் அல்ல மணல்திட்டுதான். உலகின் பல பாகங்களிலும் உள்ள கடலுக்குள்ளும் இத்தகைய திட்டுகள் உண்டு என்று அறிவியல் ரீதியாகச் சொல்லி விட்டன.
உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு ஆறாவது வழித் தடத்தில்தான் திட்டத்தை நிறைவேற்ற முடியும்- ராமன் பாலம் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று எழுத்து மூலம் திட்டவட்டமாகக் கூறிவிட்டது. இந்தநிலையில் மத்திய அரசு நடத்தும் டி.டி. நேஷனல் தொலைக்காட்சி சார்பாக இப்படி ஒரு விளம்பரம் வந்துள்ளதே! ராமன், பாலம் கட்டுவது போல ஒரு படத்தை விளம்பரமாக வெளியிட்டுள் ளனரே - இது எப்படி? அரசின் முடிவுக்கு எதிராக அரசின் தொலைக் காட்சி. அரசு செலவில் இப்படி நடந்து கொள்ளலாமா?
பார்ப்பன ஊடுருவல்தான் இதற்குக் காரணமா? நிருவாகத்தில் ஆர்.எஸ்.எஸ்.காரர்களின் சித்து விளையாட்டா? இதற்குக் காரணமானவர்கள்மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமா?


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

ஆகஸ்ட் 16-31

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...