Tuesday, August 14, 2012

தவறைக் கண்டிக்க உரிமை வேண்டும்


உயர்நீதிமன்றத் தீர்ப்புகளைப் பற்றிய பொதுமக்கள் கருத்துத் தெரிவிப்பது, கோர்ட்டை அவமானப் படுத்துவதாகும் என்ற பூச்சாண்டியை இனியாவது அம்பலப் படுத்தவேண்டும். உயர்நீதிமன்றத்து நீதிபதிகளும் மனிதப் பிறவிகளாதலால், ஆசாபாசங்களுக்கும், சமுதாய உணர்ச்சி களுக்கும், தவறுகளுக்கும் கட்டுப்பட்ட வர்கள். இவர்களை நியமிக்கின்ற இந் தியக் குடியரசுத் தலைவரையும் அவருக்கு அடுத்தபடியாக உள்ள இந்திய தலைமை அமைச்சரையும் கண்டிக்கவும், கொடும்பாவி கட்டிக் கொளுத்தவும்,  இவர்கள் எல்லோருக்கும் மேம்பட்டதாகக் கூறப்படுகின்ற இந்திய அரசியல் சட்டம் என்பதையும்,அதற்கும் மேம்பட்டதாகக் கூறப்படுகிற தேசியக் கொடி என்பதையுமே கிழித்துப் போட்டுத் தீ வைக்கவும், ஜனநாயக சமூகத்தில் உரிமையிருக்கும்போது, சாதாரண சர்க்கார் உத்தியோகஸ்தர்களில் ஒருவரான நீதிபதியின் தீர்ப்பைத் தவறு என்று கண்டிப்பதற்கு மக்களுக்கு உரிமையிருக்க வேண்டாமா?
- 6-11-1956 விடுதலை தலையங்கத்தில் தந்தை பெரியார் கருத்துரை.


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...