Sunday, August 19, 2012

ஈ.வெ.கி. சம்பத் அவர்களின் மூத்த மகளும் - மருமகனும் எழுதியுள்ள கடிதம்


இடமிருந்து வலம்: அன்பெழில், வெங்கடேஷ், டாக்டர் ஜெப்ரே, டாக்டர் சுஜாதா, தமிழர் தலைவர், ஜெயன், ரேகா, டாக்டர் நாகம்மாள் வெங்கடேசன்.
Nagu and Venkatesh
4521 Sherman Oaks Avenue, # 1A
Sherman Oaks, CA 91403
nvenk0823@aol.com
August 16, 2012

Dear Professor Veeramani:
It indeed was a pleasure and privilege to have had the opportunity to see you last week. Our daughter's family was truly impressed by the legacy of our grand uncle Periyar. They greatly appreciated your life long dedication in maintaining and propagating that legacy. But for you, the movement of social justice and reform would not have survived, since most of our so called leaders are politicians and therefore, are highly compromised. Needless to say, they are motivated by power and the resulting material gain. Periyar Thidal is an intellectual oasis amidst a vast and what seems to be an endless desert of ignorance and greed. Reading the inscriptions adorning the path to the torch of enlightenment, gives us hope and optimism; makes us believe that finer aspects of human life such as altruism and rationalism do exist. Our grandson Jayan was born on September 17, 2002. He read every plaque and understood almost all. His IQ is high and goes to the gifted and talented program in school. But, the most impressive aspect of the young boy is his genuine nature, extreme modesty and incomparable goodness. When asked, "What was the most attractive statement among the inscriptions?", his reply was "There is No god!". There was no hesitation. Maybe the message is written in his genes! It is a quintessential example of the premise that character, nature and intelligence are prewired in individuals. Having said that, we also believe that nature can only do so much, it is nurture of the right kind that shapes human beings. We, like you, attribute the malfunctioning of humanity in general, to defective nurturing.
Once again thank you for taking the time to talk to us and we look forward to seeing you again in the near future. We spend our time between Los Angeles and Austin, Texas. If you are in or near Los Angeles or Austin, please let us know, so that we can meet.
With best regards
Nagu and Venkatesh

ஆங்கிலத்தின் தமிழாக்கம்:

கடந்த வாரம் தங்களை நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைத்ததை எனக்குக் கிடைத்த பெருமையாகக் கருதி மகிழ்ச்சி அடைகிறேன்.
தந்தை பெரியார் அவர்களின் கொள்கை மாண்பினால் எனது மகளின் குடும் பத்தினர் உண்மையில் கவர்ந்து ஈர்க் கப்பட்டுள்ளனர். அந்தக் கொள்கை, கோட்பாடுகளைப் பரப்புரை செய்யும் பணியைத் தங்களின் வாழ்நாள் கடமையாக ஏற்றுக் கொண்டிருப்பதை அவர்கள் பெரிதும் போற்றிப் பாராட் டுகின்றனர். உங்களது பெருமுயற்சி இல்லாமல் போயிருந்தால், சமூக நீதி இயக்கமும், சமூக சீர்திருத்த இயக் கமும் நிலைத்திருக்கவே முடிந் திருக்காது. நமது தலைவர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்பவர்கள் எல்லாம் அரசியல்வாதிகளே என்ப தால், அவர்கள் தங்கள் கொள்கை, கோட்பாடுகளில் தங்களுக்குத் தேவையானபோதெல்லாம் சமரசம் செய்து கொள்வதற்குத் தயங்குவதே யில்லை. அரசியல் அதிகாரம், பொருளாதார லாபம் ஆகியவையே அவர்களின் குறிக்கோளாக இருக் கிறது என்பதை கூறத் தேவையில்லை.   அறியாமை, பேராசை என்னும் ஒரு நீண்ட, எல்லையற்ற பாலைவனத் தினிடையே உள்ள ஒரு நுண்ணறிவுப் பசுஞ்சோலையாக விளங் குவது பெரியார் திடல்.
அங்கிருக்கும் விழிப்புணர்வுச் சுடருக்குச் செல்லும் பாதையின் இரு மருங்கையும் அழகு படுத்தும் வகையில் பொறிக்கப்பட்டுள்ள  தந்தை பெரியார் அவர்களின் பொன் மொழிகளைப் படிப்பதே நமக்கு நம்பிக்கையையும், உற்சாகத்தையும், ஆக்க பூர்வமான உணர்வையும் அளிப்பதுடன், பகுத் தறிவுக் கோட்பாடு மற்றும் பிறர் நலன் பேணும் பண்பு ஆகிய அருமையான அம்சங்களும் நமது வாழ்க்கையில் இருக்கவே செய்கின்றன என்று நம்மை நம்பச் செய்கின்றது.
எனது பேரன் ஜெயன் 2002 செப்டம்பர் 17 அன்று பிறந்தவன். அங்கிருந்த அனைத்துப் பொன்மொழிகளையும் படித்து அவன் புரிந்து கொண்டான்.  மிக உயர்ந்த அளவினதாக உள்ள அவனது நுண்ண றிவுத் திறன் பள்ளியில் திறமை மிகுந்த செயல்திட்டங்களை நிறைவேற்றுவதற் கான வாய்ப்பை அளித்துள்ளது.  என்றா லும் இச் சிறுவனிடம் அமைந்துள்ள, எவரையும் மிகுந்த அளவில் கவரக் கூடியவை  உண்மையாகவும் இயல்பாக வும் இருப்பது, மிகுந்த அடக்க உணர்வு, ஈடு இணையற்ற நற்தன்மை ஆகிய அவனது பண்புகள்தாம்.
நீ படித்த தந்தை பெரியார் அவர்களின் பொன்மொழிகளில் உன்னை மிகவும் கவர்ந்தது எது என்று அவனிடம்  கேட்ட போது, கடவுள் இல்லை என்பதுதான் என்று உடனே சற்றும் தயங்காமல் பதில் கூறினான்.  ஒரு வேளை அந்தச் செய்தி அவனது மரபணுவிலேயே இருப்பதோ என்னவோ!
குணநலன், இயல்பு மற்றும் நுண் ணறிவு ஆகிய பண்புகள் தனிப்பட்ட மனி தர்களுள் பிறப்பிலேயே இணைக்கப்படு கின்றன என்ற எண்ணத்துக்கு, கருத் துக்கு இது ஒரு மிகச் சிறந்த எடுத்துக் காட்டாகும். இவ்வாறு கூறுவதோடு, ஓரளவுக்குத்தான் இயற்கை இதனைச் செய்ய முடியும் என்பதிலும்,  மிகச் சிறந்த பண்புகள், குணநலன்கள் கொண்டவர் களாக  அவர்களை வடிவமைப்பது மிகச் சரியான முறையில் அவர்களை வழிகாட்டி நடத்திச் செல்வதுதான் என்பதிலும் நாங்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறோம்.  பொதுவாக மனிதர்கள் தவறான செயல் களில் ஈடுபடுவதற்கு அவர்களை வளர்க்கும், வழி நடத்தும் முறையில் உள்ள குறைபாடுகளே காரணம் என்பதை உங்களைப் போலவே நாங்களும் கருதுகிறோம். எங்களுடன் பேசுவதற்கு நீங்கள் தங்கள் பொன்னான நேரத்தை எங்களுக்காக ஒதுக்கியதற்கு மறு படியும் நாங்கள் எங்களது நன்றி யினைத் தெரிவித்துக் கொள்கிறோம். விரைவில் உங்களை மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்.  எங்களது நேரத்தை லாஸ் ஏஞ்சல் சுக்கும் ஆஸ்டினிலும் நாங்கள் செலவழித்தோம். லாஸ் ஏஞ்சல்ஸ் அல்லது ஆஸ்டினுக்கு வரும் வாய்ப்பு இருந்தால், தயவு செய்து எங்களுக்குத் தெரிவிக்கவும். நாங்கள் வந்து உங்களை சந்திக்கிறோம்.
மிக்க அன்புடனும், மிகுந்த மரியாதையுடனும்
நாகு மற்றும் வெங்கடேஷ்
(மறைந்த ஈ.வெ.கி. சம்பத் அவர் களின் மூத்த மகள் நாகு என்ற டாக்டர் நாகம்மை - அவரது இணை யர் டாக்டர் வெங்கடேஷ்,   உச்சநீதி மன்ற முன்னாள் நீதிபதி ஜஸ்டீஸ் ஏ. அழகிரிசாமி அவர்களது மகன் ஆகியோர் எழுதிய கடிதம் இது)


No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...