Saturday, August 11, 2012

உலகில் எந்தவொரு அமைப்பிலும் செய்யாத அளவுக்கு விஷயங்களைச் சேகரித்து வைக்கும் கருவூலமாக வீரமணி திகழ்கிறார்











நம்முடைய தமிழர் தலைவர் வீரமணி அவர்களுடைய அரும்முயற்சி இன்னும் நூறாண்டுகளுக்குப் பிறகு திராவிட இயக்கத்தைப் பற்றி தெரிந்துகொள்ள - தந்தைபெரியாரைப் பற்றி தெரிந்துகொள்ள - அண்ணாவைப் பற்றி தெரிந்து கொள்ள எங்கெங்கு இருந்து ஆதாரங்கள் திரட்டப்பட்டன, எப்படியெல்லாம் நம்முடைய வரலாறு முன்னால் இருந்தது, பின்னால் அமைந்தது என்பதையெல்லாம் இன்னும் நூறாண்டு களுக்குப் பிறகு தெரிந்துகொள்ள வேண்டுமென்றாலும், அதற்கான கருவூலமாக நம்முடைய வீரமணி அவர்கள் விளங்குகிறார்கள் என்று சொன்னால்,அதை யாராலும் மறுக்க முடியாது.
இதோ என் கையிலே உள்ள இந்தப் புத்தகம் செங்கல்பட்டு முதல் தமிழ்மாகாண சுயமரியாதை மாநாடு, 1929-ஒரு வரலாற்றுத் தொகுப்பு. நான் நிச்சயமாகச் சொல்கிறேன் அவர் மாத்திரம் இன்றைக்கு திராவிடர் கழகத்திலே தந்தை பெரியாருடைய வழித் தோன்றலாக அமையாமல் இருந்திருப்பாரேயானால், இந்தப் புத்தகம் எனக்குக் கிடைத்திருக்காது (கைதட்டல்).
இதிலே உண்மைகள் வரலாற்றுச் சான்றுகள், இங்கே நடைபெற்ற மாநாடு, அந்த மாநாட்டிலே கலந்து கொண்டவர்கள், அவர்களைப் பற்றிய விவரங்கள் எதுவும் எனக்குக் கிடைத்திருக்காது. இதிலே சவுந்தரபாண்டிய னாருடைய உருவத்தைப் பார்க்கிறேன். வி.வி.ராமசாமி நாடார் உருவப் படத்தைப் பார்க்கிறேன், அவ்வளவு ஏன்? இதே செங்கல்பட்டிலே இருந்த வேதாசலம் முதலியார் படத்தையும் அதிலே பார்க்கிறேன். வேதாசல முதலியார் உங்களுக்குத் தெரியும்.
வேலைக்காரி படத்திலே அறிஞர் அண்ணா அவர்களால் உருவாக்கப்பட்ட ஒரு கதாபாத்திரம். அந்த வேதசால முதலியார் அந்த மாநாட்டிலே கலந்துகொண்டார். ஒரு முக்கிய பொறுப் பேற்றார் என்கின்ற இந்தச் செய்தியெல்லாம் எங்கள் சிந்தனையைச் செதுக்கச் செய்கின்ற செய்திகளாகும்.
விஷயங்களை சேமித்து வைப்பதிலே வீரமணி யிடத்திலே பாடம் படிக்க வேண்டும்.
இந்தச் செய்திகள் எல்லாம் காணாமல் போயிருக்கும். இப்படிப்பட்ட புத்தகத் தொகுப்பு மாத்திரம் இல்லாவிட்டால், நான் உலகத்தில் உள்ள எல்லாக் காட்சிகளையும் ஒப்பிட்டு இப்படிச்சொல்ல வேண்டுமே யானால், அவர் என்னைப் பாராட்டியதற்காக, நான் அவரை பாராட்டுவதாக அர்த்தமல்ல. உலகத்திலே உள்ள எல்லா கட்சி அமைப்புகளைப் பற்றியும் சொல்ல வேண்டுமேயானாலும், எந்த ஒரு அமைப்பிலும் இவ்வளவு விஷயங்களை சேகரித்து வைத்து, அதை எதிர்காலத்திற்குத் தரக்கூடிய இந்த ஆற்றல், நம்முடைய வீரமணியாருக்கு இருப்பதைப் போல வேறு யாருக்கும் இருப்பதாக நான் ஒப்புக்கொள்ளமாட்டேன்.
அவரிடத்திலே எங்களைப் போன்ற கட்சிகளெல்லாம் இதற்காகப் பாடம் படிக்க வேண்டும் என்று எங்க ளுடைய முன்னோடிகள்கூட இங்கே வந்திருக் கிறார்கள். மூத்த தம்பிமார்களெல்லாம் வந்திருக் கிறார்கள். அவர்களெல்லாம்கூட இன்று முதல் பயிற்சியை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அடக்கத்தோடு அவர்களை எல்லாம் நான் கேட்டுக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.





இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...