Tuesday, July 17, 2012

டெசோ தலைவர் கலைஞர் வெளியிட்ட கருத்துரு

ஆகஸ்ட் 12ஆம் தேதி டெசோ ஈழத் தமிழர் வாழ்வுரிமை பாதுகாப்பு மாநாடாக சென்னையில் நடைபெறும்!


ஆகஸ்ட் 12ஆம் தேதி டெசோ ஈழத் தமிழர் வாழ்வுரிமை பாதுகாப்பு மாநாடாக சென்னையில் நடைபெறும்!

டெசோ தலைவர் கலைஞர் வெளியிட்ட கருத்துரு
சென்னை, ஜூலை 17 - சென்னையில் ஆகஸ்ட் 12 அன்று ஈழத் தமிழர்  வாழ்வுரிமை மாநாடு நடைபெறுகிறது. இம்மாநாட்டில் விவாதிக் கப்பட உள்ள பொருளடக்க  கருத்துருவை  நேற்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற  செய்தியாளர்கள் கூட்டத்தில் டெசோ தலைவர் கலைஞர் அவர்கள்  வெளியிட்டார்.   கலைஞர் அவர்கள் நேற்று செய்தியாளர்கள் மத்தியில் ``டெசோ மாநாட்டில் விவாதிக்க விருக்கும் பொருளடக்கம் குறித்த (கூநஅந-ஞயயீநச கடிச கூநுளுடீ ஊடிகேநசநஉந) கருத்துருவை வெளியிட்டார். அது வருமாறு:-
இலங்கை அரசு அதன் சொந்த மக்கள் மீதே தொடுத்த இனப் படுகொலைப் போரின் பேரச் சங்கள், நாதியற்ற தமிழ் மக்களை இன்னும் நீண்ட காலத்திற்கு  அச்சுறுத்திக் கொண்டிருக்கும். ஆனால் வரலாற்றின் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தால் காலம் காலமாக இலங்கையில் தமிழர் கள் அவர்களுக்குரிய உரிமைகளும், வாய்ப்புகளும் மறுக்கப்பட்டு இரண்டாம் தரக் குடிமக்களாகவே நடத்தப்பட்டு வந்துள்ளனர் என்பதை நாம் காணலாம்.
தமிழர்கள் தங்களது கவுரத்தையும், கலாச்சார அடையாளத்தையும் பாதுகாக்க பேச்சு வார்த் தைகள் மூலம் ஏற்பட்ட ஒப்பந்தங்கள், நாடாளு மன்ற விவாதங்கள், அமைதியான போராட்டங்கள், மூன்றாம் தரப்புத் தலையீடுகள் மற்றும் ஆயுதம் தாங்கிய போராட்டங்கள் உட்பட தமிழர்கள் பல்வேறு முயற்சிகள் செய் துள்ளதை நாம் காண முடியும். ஆனால் இலங்கை அரசால் மீண்டும் மீண்டும் அவர்களது நம்பிக்கை பொய்ப் பிக்கப்பட்டு துரோகம் இழைக்கப்பட்டுள்ளது.
சிங்களவர் குடியேற்றம்
20,000-க்கும் மேற் பட்ட சிங்களவர்கள் தமிழர் பகுதி களுக்குக் குடிபெயர்ந்துள்ளனர். முன்பு சிங்கள மக்கட் தொகை இல்லாத வடக்குப் பகுதியில் 33 சதவீத சிங்களவர்கள் தமிழர்கள் முழுவதுமாக வாழும் பகுதிகளில் குடிபெயரக் கேட்டுக் கொள் ளப்பட்டுள்ளனர்.
1983ஆம் ஆண்டு சிறைக் கோட்டத்துக்குள் தமிழர்களை தாக்கிப் படுகொலை செய்த சம்பவம் நடந்தபோது, அப்போதைய இந்தியப் பிரதமர் திருமதி. இந்திராகாந்தி நாடாளுமன்றத்தில் அதை அரசு நடத்திய இனப்படுகொலை என்று அறுதி யிட்டுக் கூறினார்.
போர் முடிந்த பிறகும் எந்த வசதியுமின்றி பாதுகாப்பு  முகாம்களில் வைக்கப்பட்டுள்ளனர்
அந்தச் சம்பவம் தமிழ்ப் போராளிகளுக்கும், இலங்கை இராணுவப் படைகளுக்கும் இடையி லான ஆயுதம் தாங்கிய மோதலாக உருவெடுத்து ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் கொல்லப் பட்டனர். உடல் ரீதியாகவும், மன ரீதியிலும்சிதைக்கப்பட்டனர்.
பயங்கரவாதிகளையும், பயங்கரவாதத்தையும் எதிர்த்துப் போராடுவது என்ற போர்வையில் இலங்கை அரசு பட்டப் பகலில், உலக சமுதாயத்தின் முழுப்பார்வையில் தமிழினத்துக்கு எதிராக இனப்படு கொலையைத் தொடுத்தது. அய்க்கிய நாடுகள் அமைப்பின் அறிக்கையும், பல மனித உரிமை அமைப்புகளின் உண்மை அறியும் அறிக்கைகளும் இலங்கை அரசும், இராணுவமும் பல மோசமான போர்க் குற்றங் களை இழைத்துள்ளதை உறுதி செய்கின்றன.
`தமிழர்களுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட - அரசு கட்டவிழ்த்து விட்ட கொடுமைகளுக்குச் சாட்சியாக இருக்கக் கூடாது என்பதற்காக ஊடகங்களும் தன்னார்வ சேவை அமைப்புகளும் வெளி யேற்றப்பட்டன. போர் முடிந்த பிறகுகூட தமிழர்கள் வாழ்க் கைக்கான அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் பாதுகாப்பு முகாம்களில் வைக்கப் பட்டுள்ளனர்.
முகாம்களும், தமிழர்கள் வாழும் பகுதிகளும் கூட எல்லா இடங்களில் இராணுவத்தினர் காணப் படுவதுடன் இராணுவப் படைவீரர்கள் பகுதி போல உள்ளது. உள்ளாட்சி வசதிகள் இல்லாததால் அங்குள்ள தமிழர் களுக்கு தங்களது குறைகளை எடுத்துக் கூறவும், பேசுவதற்கும் அமைதியான முறையில் போராடவும் அவர்களுக்கு ஜனநாயக இடமில்லை. அவர்கள் எப்போதும் அச்சத்திலும், பீதியிலும் நிம்மதியின்றி கவலையுடன் வாழ் கின்றனர் என்ற நிலைமை தான் உள்ளது.
கண்ணிவெடிகள்!
எல்லா இடங்களிலும் புதைக்கப்பட்டுள்ள கண்ணி வெடிகளை அகற்ற வேண்டும் என்று காரணம் கூறும் அரசு, அதற்கு மாறாக சாத்திய மான வகைகளில் எல்லாம் தமிழர் பகுதிகளையும், தமிழ் மக்களையும் தொடர்ந்து வலுவிழக்கச் செய்தும், அழித்தும் அவற்றை மென்மேலும் சிங்களக் குடியிருப்புப் பகுதிகளாக மாற்றி வருகிறது.
பல தமிழ் இளைஞர்கள் எந்தவிதமான அறிகுறியும் இன்றி காணாமல் போயுள்ளனர். அவர்களில் பலர் சித்ரவதை முகாம்களில் சொல்ல முடியாத வேதனைகளுக்கும், துயரத்துக்கும் ஆளாக்கப் பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. தமிழ்ப் பெண் கள் இராணுவப் படையின ரின் சகலவிதமான வன்முறைகளையும் சந்திக்க வேண்டியுள்ளது.
தமிழ் குழந்தைகள் துப்பாக்கிகள், இராணுவப் படையினர் கட்டவிழ்த்து விடும் வன்முறை ஆகியவற்றைப் பார்த்துக்கொண்டே வாழ்கின்றனர்.
உலகம், குறிப்பாக இந்தியாவின் முன்முயற்சியில் நடைபெறும் நிவாரண நடவடிக்கைகள் அல்லலுறும் தமிழ் மக்களைச் சென்றடை வதில்லை என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
கடந்த இரண்டு ஆண்டுகளில், அந்த நாட்டில் தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிக்கவும், பாதிக்கப்பட்ட தமிழர் பகுதிகளின் முன் னேற்றம், வளர்ச்சிக்காகவும், ரயில்வே நவீன மயமாக் கலுக்கும், சாலைக் கட்டமைப்புகள், மீன்பிடி படகுகள் தரம் உயர்த்தல், பள்ளிகள், கல்லூரிகள் போன்ற கல்வி நிறுவனங்களின் கட்டுமானப் பணியை மேற்கொள்ளவும், பாதிக்கப்பட்ட தமிழர் பகுதிகளில் வீட்டு வசதி, மருத்துவமனை வசதிகளை அளிக்கவும் இந்தியா ஆயிரம் மில்லியன் டாலர் பொருளாதார உதவி வழங்கியுள்ளது.
ஆனால் இந்த நிவாரண நடவடிக்கைகளில், நிதி உதவிகளில் பெரும்பாலானவை பாதிக்கப்பட்டத் தமிழர்களுக்கு இல்லாமல் சிங்களர்கள் வசிக்கும் பகுதிகளில் பயன்படுத்தப்படுவதாகத் தெரிகிறது.
இலங்கைத் தமிழர்களின் நிலைப்பாடு!
போர் முடிந்த பிறகும், அய்க்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சில் கண்டனம் தெரிவித்தும் உள்விசா ரணை நடத்தக் கோரியும் தீர்மானம் நிறை வேற்றிய பிறகும் கூட இலங்கைத் தமிழர்களின் நிலைமை பின்வருமாறு உள்ளது:-
1. இலங்கை அரசு கூறுவது போல மெனிக் தோட்டத்தில் 6,000 பேர் மட் டுமே மீதமுள்ளனர் என்பது உண்மை தான். பெரும் பாலான மக்கள் அடிப் படை வசதிகள் இல்லாத அவர்களது கிராமங்களுக்கு அனுப் பப்பட்டுள்ளனர். சிலர் மரங்களின் அடியில் தங்கியுள்ளனர். மற்றவர்கள் அவர்களது உறவினர்களின் தயவில் உள்ளனர்.
2. முகாம்களை விட்டு வெளியேறும் குடும்பங் களுக்கு அளிக்கப்படும் உதவி மிகக் குறைவாக உள்ளது. சில மாதங்களுக்குப் பிறகு, அக்குடும்பங் கள் அடிப்படைத் தேவைகளுக்குப் போராட வேண்டியுள்ளது. கிடைப்பதற்கு வேலை ஏதும் இல்லாததால், மறுகுடி யமர்த்தப்பட்ட தமிழர்கள் மிக மோசமான நிலையில் உள்ளனர்.
3. இராணுவம் குடிமக்கள் வாழ்க்கையிலும் அனைத்துப் பகுதிகளிலும் வியாபித்து பொரு ளாதாரத்தை மேற்கொண்டுள்ளது. முடிதிருத் தங்கள் கூட இராணுவத்தால் நடத்தப்படு கின்றன. எனவே தமிழர்களின் பொருளா தார மீட்சிக்கான வாய்ப்பு இல்லை.
4. தமிழர் பகுதிகள் சிங்கள மயமாக்கப்படு வது உண்மை. யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு செல்லும் ஏ-9 நெடுஞ்சாலையில் முன்பு பல தமிழர் களின் பெட்டிக் கடைகளும், வியாபாரிகளும் இருந்தனர். தற்போது அவை அனைத்தும் சிங்கள முன்னாள் இராணுவப் படைகளுக்கு அளிக்கப் பட்டு விட்டன.
5. இராணுவம் அதன் நடவடிக்கைகள் தமிழர் பகுதிகளில் ஏராளமான வீடுகளை எடுத்துக் கொண்டுள்ளது. காலியாக உள்ள வீடுகளை மேற்கொள்ளும் இராணுவம் காலி செய்ய மறுக்கிறது.
6.இராணுவத்தின் அனுமதியின்றி வடக்கு, கிழக்கு பகுதிகளில் எந்த சமூக நிகழ்ச்சி களும் நடத்த முடியாது. இராணுவம் அனுமதிக் காமல் தமிழர்கள் அவர்களது வீடுகளில் வேறு எவரையும் தங்க வைக்க முடியாது.
7. இராணுவம் பெரும் பரப்பிலான நிலங் களை எடுத்துக் கொண்டுள்ளது. இதனால் சமீபத்தில் மன்னாரில் ஒரு போராட்டம் நடை பெற்றது. வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் எங்கும் வியா பித்துள்ள சிங்க இராணுவம் பற்றி யாழ்ப்பாணத் திலிருந்து `வாஷிங்டன் போஸ்ட் ஏட்டுக்கு சைமன் டென்பெர் என்ப வர் அனுப்பி, வெள்ளிக்கிழமை வெளியிடப்பட் டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ள தாவது:-
``நாட்டின் வடக்குப் பகுதியில் வேளாண்மை மற்றும் காய்கறி விற்பனை, ஓட்டல்கள், ரெஸ் டாரண்டுகள், முடித்திருத்தகங்களைக் கூட நடத்தல் போன்ற பொருளாதார வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் இராணுவம் தன்னைத்தானே நுழைத்துக் கொண் டுள்ளது.
அப்பகுதியிலுள்ள வட் டாரங்கள் தெரிவித்ததைப் பற்றிய அந்தச் செய்தியில் நில அபகரிப்புகள், அன்றாடத் துன்புறுத்தல், மக்கள் கூடுவதற்கான உரிமை தடுப்பு, பொது நிகழ்ச்சிகளில் வலுக்கட்டாயமான குறுக்கீடுகள் என தமிழர் தாய் மண்ணில் இராணுவம் எப்படி அவசரகால நிலை மையை நடத்துகிறது என்பதைப் பற்றி விரிவாகக் கூறப்பட்டுள்ளது.
சமீபத்தில் `போருக்குப்பிறகு சமரச நடவடிக் கைகளை மேற்கொள்ளுமாறு இலங்கை அரசை வலியுறுத்தும் தீர்மானம் ஜெனீவாவில் நிறைவேற்றப் பட்ட பிறகு, அச் சுறுத்தல் அதிக ரித்துள்ளது என்று `அமைதி மற்றும் சமரசத்துக்கான மையத்தைச் சேர்ந்த பாதிரியார் எஸ்.எம்.பிரவீன் என்பவர் கூறிய தாக அந்தச் செய்தியாளர் தெரி வித்துள்ளார்.
நிலைமை இப்படி இருக்கையில் இலங்கை மண் ணில் தமிழர்கள் எப்படி கவுரவத்துடனும், சம உரிமையுட னும் வாழ முடியும்? தனது சொந்தக் குடி மக்களைப் பாதுகாக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பை நிறைவேற் றாத ஒரு அரசால் சகல விதத்திலும் மனிதாபிமானமற்ற முறையிலும் சமத் துவமின்றியும் நடத்தப்படும் ஒரு இன, கலாச்சார, மொழி இனத்தைக் காப்பாற்ற - வழிமுறை களைக் காண்பதற்காக  இந்த மாநாடு நடைபெறுகிறது.
மாநாட்டில் பரிசீலிக்கப்பட இருப்பவை!
இந்த மாநாட்டில் பரிசீலிப்பதற்காக இலங்கைத் தமிழர்களுக்கு சமத்துவம், கவுரவம், அமைதியான வாழ்வு ஆகியவற்றை உறுதி செய்ய நிவாரண நடவடிக்கைகளாக சில பரிந்துரைகள் இங்கு தரப்பட்டுள்ளன:-
அ) மேற்கூறிய பிரச்சினைகளை கவனிக் காமலும், அடிப்படை உரிமை கள் மீறப்படு வதற்கு முற்றுப் புள்ளி வைக்காமலும், இலங் கைத் தமிழர் களின் மறுவாழ்வு என்பது ஒரு கண் துடைப்பாகவும், தொலைதூரக் கனவாக வுமாகவே இருக்கும்.
ஆ) இலங்கையில்; ஐக்கிய நாடுகள் அமைப்பு தேர்தல் நடத்த வேண்டும். அது தெற்காசிய மனித உரிமைகள் பிரச்சினையைப் பிரதானப்படுத்த வேண்டும்.
இ) இந்தியாவிலுள்ள அனைத்து இலங்கை அகதி களுக்கும் இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும். அதன் பிறகுதான் அவர்கள் இங்கு நிம்மதி யாக வாழ முடியும். இதன் மூலம் இலங்கை அகதிகளிடையே ஆள் கடத்தல் கட்டுப்படுத்தப்படும்.
ஈ.) கலாச்சார மறுவாழ்வு மற்றும் தமிழ் பாரம் பரிய இடங்கள், கலாச்சார முக்கியத் துவம் கொண்ட இடங்களின் பாதுகாப்பு ஆகியவை அவசியம். கலாச்சாரத்தை இழந்து விட்டால் எந்த இனமும், மக்களும் வாழவோ, தங்களது மொழியையும், அடையாளத்தையும் பாதுகாக்க முடியாது. இலங்கை அரசு தமிழர் கலாச்சாரமும், மொழியும் பாதுகாக்கப்படு வதை உறுதி செய்ய வேண் டும். ஆனால் அவற்றை அழிப்பதற்கு எந்த முயற்சியையும் விட்டு வைக்கவில்லை. ஓர் அரசாட்சி மொழி என்ற முறையில் தமிழ் வலுவிழக்கச் செய்யப்பட்டு வருகிறது. தமிழர்களின் பாரம்பரியத்தை அழிக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.
உ) ஆயிரக்கணக்கான தமிழர்கள் பிடிக் கப்பட்டு இலங்கை சிறைகளில் அடைக்கப்படுகின்றனர். வழக்குகள் இல்லாத அனைவரும் விடுதலை செய் யப்பட வேண்டும்.
ஊ) தமிழ் குழந்தைகளின் எதிர் காலத்துக் கும், தமிழர் பகுதிகளில் கல்வி அறிவை மேம்படுத்தவும், வடக்கு, கிழக்கு மாவட்டங்களில் முழுமையாகச் செயல்படும் பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆசிரியர் பணி இடங்களை நிரப்புதல் ஆகியவை முக்கிய மாகும்.
எ) கல்வி நிறுவனங்கள், மருத்துவ வசதி கள் ஆகியவற்றை அமைக்கவும், இதர நடவடிக்கைகளில் பங்கேற்கவும் முன்வர விரும்பும் பல நிறுவனங்கள், பெருந்தொழில் நிறுவனங்களின் (கார்ப்பரேட்கள்) ஆகியவை உள்ளன. தமிழர் பகுதிகளில் வசதிகளை மீண்டும் கட்டுவதற்கு உதவிப் பங்களிப்பதற் காக அவர்களை ஈடுபடுத்தலாம். போரில் பாதிக்கப்பட்ட வர்களுக்கு நிபுணத்துவ சேவைகளுடன் மருத்துவ வசதிகள் உறுதி செய்யப்பட வேண்டும். குறிப்பாக போர் / குடும்ப இழப்பு ஆகிய வற்றால் ஏற்பட்டுள்ள மன ரீதியிலான / நரம்பியல் ரீதியான அழுத்த நிலைமைகள் கவனிக்கப்பட வேண்டும். மனச் சோர்வு, அழுத்தம் ஆகியவை நிச்சயமாக போரின் நினைவுகளாகும்.
ஏ) அங்குள்ள தமிழர்களுக்கு நீதி, மறு வாழ்வு அளிக்கும் நடைமுறையில் இந்திய அரசு தீவிரமாக தங்களை ஈடு படுத்திக் கொள்ள வேண்டும். இலங்கை அரசு மீது நேரடியாகவும், மறைமுகமாகவும் அரசியல் மற்றும் பொருளாதார நிர்ப்பந்தங்களைக் கொண்டுவர இந்திய அரசு ஒத்த கருத்துள்ள நாடு களுடன் விவாதித்து சாத்தி யமான பேச்சுவார்த் தைகளை நடத்த வேண்டும்.
ஐ) தமிழர்களுக்கு அதிகாரம் அளிக்கவும், நில தாவாக்களை தீர்த்து வைப்பதில் ஈடுபடவும், பாரம் பரிய வாழ்க்கை முறையைப் பேணவும் முயலும் நாடுகளின் குழுவை உருவாக்கு வதற்கு இந்தியா முன்னிலையில் இருக்க வேண்டும்.
ஒ) இலங்கையில் மாற்றத்தை நோக்கி முழு மையான ஈடுபாட்டுடன் பணியாற்றும் நபர்களின் குழுவை இந்திய அரசு உருவாக் கலாம்.
ஓ) இலங்கைத் தமிழர்களுக்கு பாது காப்பையும், நிவாரணத்தையும் உறுதி செய்யும் போது, இலங்கை கடற்படை யினால் இந்திய மீனவர்கள் மீது தொடுக்கப்படும் கொடுமை களிலிருந்து அவர் களைப் பாதுகாப்பது நமது கடமையாகிறது. இலங்கை கடற்படையால் அப்பாவியான, நிராயுத பாணியான மீனவர்கள் ஈவிரக்கமின்றி தாக்கப் படவும், சுட்டுக் கொல்லப்படவும், அவர்களது மீன்பிடி படகு கள் மூழ்கடிக்கப்பட்டும், அவர்கள் பிடித்த மீன்கள் கைப்பற்றப்பட்டும், ஓர் மனி தாபிமானமற்ற முறையில் நடத்தப்படுகின்றனர்.
இந்தக் கொடுமைக்கு முடிவு கட்ட, இந்திய அரசு வெற்று நிலமான தனுஷ்கோடி அல்லது மண்டபம் கேம்ப்பில் இந்திய கடற் படைப் பிரிவு ஒன்றை இந்திய அரசு நிறுவ வேண்டும்.
ஔ) தங்களது நாட்டை விட்டு உயி ருக்குப் பயந்து, தங்களது வீடுகளை விட்டு  உலகம் முழு வதும் பல்வேறு நாடுகளில் வாழும் இலங் கைத் தமிழர்கள் தங்களது தாய் நாட்டுக்கு பத்திரமாகவும், சவுகரிய மாகவும் திரும்ப தாராளமாக அனுமதிக்கப் பட வேண்டும்.
கலைஞர் அவர்களது தலைமை யிலும் வழி காட்டுதலிலும் 12 ஆகஸ்ட் 2012 அன்று சென்னையில் நடைபெறவுள்ள ``டெசோ மாநாட்டில் விரிவாக விவாதிக்கப்படவுள்ள கருத்துருவில் இந்தப் பிரச்சினைகள் அடங்கும்.
இந்த மாநாட்டில் உருவாக்கப்படும் தீர்வு களும், ஆலோசனைகளும் இலங்கை அரசின் போக்கை மாற்றாமல், தமிழர்கள் இதே சிரமங்களுக்கும், மனிதாபிமானமற்ற முறை யில் நடத்தப் படுவதற்கும் ஆளாக்கப்பட்டால், அதன் பிறகு எதிர்கால நடவடிக்கையை முடிவு செய்ய இந்த மாநாடு மீண்டும் கூடும்.
- டெசோ
(தமிழ் ஈழ ஆதரவாளர்கள் அமைப்பு),
அண்ணா அறிவாலயம், சென்னை - 600018



இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
அடுத்து >>



JULY 01-15

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...