Monday, July 23, 2012

மந்திரத்தால் மழை பெய்யுமா?


கருநாடக மாநிலத்தில் மழை வேண்டி வருண  ஜெபம் நடத்தவும், பிரார்த்தனை செய்யவும் ரூபாய் 17 கோடியைக் கொட்டி அழுதுள்ளது. தமிழ்நாட்டில் நாமக்கல் மாவட்டம், குமாரகவுண்டன்பட்டியைச் சேர்ந்த விதவைப் பெண்கள் மண்பானைகளை ஏந்தி வீடுவீடாகச் சென்று பிச்சையெடுத்து அந்த அரிசியைக் கொண்டு உள்ளூர் கோயில் முன்பு உப்பில்லாத கஞ்சியைக் காய்ச்சிக் குடித்தனராம். அவ்வாறு செய்தால் மழை பெய்யும் என்று யாரோ கட்டிவிட்ட கதை. ஆனால் மழை பெய்வதாகக் காணோம். இந்தமூட நம்பிக்கைகளைத் தொலைப்பதற்காகத்தான் இந்தக் கட்டுரை.
இந்திய நாட்டின் விஞ்ஞான தொழில் நுட்பத் துறை (டி.எஸ்.டி.) மழையினை வரவழைக்கும் பரிசோதனைக்கு என நிதி ஒதுக்கீடு செய்யும் கோரிக் கையை ஆதரித்து தனது கருத்தைத் தெரிவித்துள்ளது.
இந்துமத வேதங்களிலும், இதிகாசங்களிலும் மழையை வரவழைக்க வருணதேவனின் கவனத்தை ஈர்க்க நடத்தப்படும் யாகத்தை வரவேற்றுள்ளது.
இந்தச் சடங்கு - யக்ஞம் என்று அழைக்கப்படுவது - வருண தேவனின் மந்திரங்களைப் பாடிப் புகழ்ந்து நடத்தப்படும். யாகக் குண்டத்தில் தீ வளர்க்கப்பட்டு அதில் மூலிகைகள் போடப்பட்டு, ஏராளமாக நெய்யும் ஊற்றப்படும்.
அதிகாரபூர்வமாக, அதாவது அரசின் சார்பாக, புதுடில்லியிலிருந்து நூறு கி.மீ.க்கு அப்பாலுள்ள மதுரா நகரில், சென்ற வாரம் யக்ஞம் நடத்தப்பட்டது. ஒரு 86 வயது பெரியவர், இந்த யாகத் திற்குத் தலைமை தாங் கினார். கடந்த எட்டு வருடங்களில், தான் 12 யக்ஞங்களை நடத்தி யுள்ளதாகவும், அதில் 9 யக்ஞங்கள் மழையைக் கொண்டு வந்தன என்றும் கூறினார்.
யாகத்தீயின் முன்பு சர்மா சாம வேத சுலோகங்களைப் பாடினார். தினமும் ஆறுமணி நேரம் தீ வளர்க்கப்பட்டு எரிக்கப்பட்டது. 100 கிலோ சந்தனக் கட்டைகளும், 15 வித மூலிகைகளும் இவற்றின் எடைக்குச் சமமான நெய்யும் தீவில் வார்க்கப்பட்டது. ஒலிபெருக்கிகள் வேத சுலோகங் களை பெருத்த சப்தங்களுடன் முழங்கின.
இந்தச் சமயத்தில், இந்திய வானிலை ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் (அய்.எம்.டி.) விஞ்ஞானக் கருவிகளைக் கொண்டு வானத்தில் மேகமூட்டங்களை உருவாக்கி சூழ்நிலையில் சில மாற்றங்களை உண்டாக் கினர். சர்மா இதைத்தான் தன்னுடைய சாதனை என்று கூறிக்கொண்டார். விஞ்ஞானிகள், யாக குண்டத்தில் இருந்து தீயில் வெந்துகிடந்த கரிக்கட்டைகளையும் மற்ற பொருள்களையும் (இலைகள்தான் மேகங்களை மழை நீருடன் பூமிக்குக் கொண்டு வருகின்றன என்று கூறப்பட்டது) சேகரித்து எடுத்துச் சென்றனர்.
விஞ்ஞான தொழில்நுட்பத் துறை (டி.எஸ்.டி.) யின் பேச்சாளர் ஒருவர், தங்களுடைய பரி சோதனைத் திட்டத் தின் படி, பூமியிலுள்ள ஜென ரேட்டர்களை உபயோகித்து வானத்திலிருந்து மேகவிதைகளை (ஊடடிரன -ளுநநனடபே)  பூமிக்குக் கொண்டு வர முடியுமா என ஆராய்வதே, யக்ஞத்தின் ஒரு பகுதியாக தாங்கள் இத்திட்டத்தை சோதித்து வருவதாகக் கூறினார்.
சர்மாவின் யாகத்தை நடத்தத் தேவைப்படும் நிதி உதவி முதலியவற்றைச் செய்ய பவுதீகத் துறை விஞ்ஞானிகளும், வானிலை ஆராய்ச்சி அதிகாரிகளும்தான் முடிவு செய்ததாக கூறியதுடன், இந்த உதவியின் மூலமாக இந்து வேதங்களில் கூறப்படும் மழையைக் கொண்டு வரும் யாகச் சடங்குகளைப் பற்றி ஆராய வாய்ப்புக் கிடைக்கும் எனவும் அவர்கூறினார்.
மதுராபுரியில் நடந்த யாகத் தீயினால் ஒரு சொட்டு மழை கூட பெய்யவில்லை. ஆனால், இந்திய விஞ்ஞான தொழில்நுட்ப ஆராய்ச்சிக்கு தீ வைத்து விட்டது. இத் தகைய யாகங்கள் மூடநம்பிக்கைகளை வளர்க்கவே பயன்படும் என்று பரவலாகப் பேசப்பட்டது.
அதுவும் (முன்னாள்) பிரதமர் ராஜீவ் காந்தி இந்தி யாவை இருப்பத்தோராம் நூற்றாண்டிற்கு எடுத்துச் செல்லும்படி விஞ்ஞானிகளைக் கேட்டுக் கொண்டபோதே இந்த யாகம் நடத்தப்பட்டுள்ளது.விஞ்ஞான தொழில் நுட்பத் துறை அதிகாரிகள், இந்த யாகப் பரிசோத னையை ரகசியமாகவே, பத்திரிகையாளர்களுக்குத் தெரியாமல்தான் வைத்திருந்தனர். ஆனால், வெளிப் படையாக இத்தகைய பரிசோதனைகள் விஞ்ஞானக் குறிக்கோள்களைப் பயன்படுத்தவும், திறந்த மனதுடன் ஆராய்ச்சிகளைச் செய்யவும் பயன்படும் என்று நம்புவதாக இத்துறை அதிகாரி ஒருவர் கூறினார்.
கே.எஸ்.ஜெயராமன்,  புதுடில்லி
Nature Vol. 333, 16 June 1988


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
அடுத்து >>


JULY 16-31



No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...