Sunday, July 29, 2012

பா.ஜ.கட்சி தலைவர்களின் கேலி கிண்டலுக்கு உள்ளாகும் ஆர்.எஸ்.எஸ்.


கடந்த கோடை காலம் காவிக் குடும் பத்திற்கு மிகவும் முக்கியம் வாய்ந்ததாக இருந்தது. தொடர்ந்து வர உள்ள தேர்தல் பணிகளுக்கு முன்பு அமைதியுடன் மூச்சு விடுவதற்கான நேரமாக அது இருந்தது.
2012 நவம்பர்-டிசம்பரில்   தேர்தல் நடைபெற உள்ள குஜராத், இமாசல பிரதேச மாநில அரசுகளை தக்க வைத்துக் கொள்ளவேண்டும். 2013 மார்ச் ஏப்ரலில் நடைபெற உள்ள கர்நாடக மாநில ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளவேண்டும். 2013 நவம்பர் டிசம் பரில் தேர்தல் நடைபெற உள்ள சத்தீஷ்கர், மத்தியபிரதேச மாநில அரசுகளைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும். அது மட்டுமன்றி ராஜஸ்தான், டில்லி மாநிலங் களையும் கைப்பற்ற வேண்டும். இந்த மாநிலங்களில் எல்லாம் பெருமளவில் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று விட்டு, 2014 ஏப்ரலில் நடக்க உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வரவேண்டும்.  தவறாக ஒரு அடி எடுத்து வைத்தாலும் இந்த கனவு நொறுங்கிப் போய்விடும்.
இது மட்டுமன்றி பா.ஜ.க. தலைவர் களிடையேயும், ஆர்.எஸ்.எஸ். தலைவர் களிடையேயும் உட்கட்சிச் சண்டைகள் முன் எப்போதும் இல்லாத அளவில் நிலவி வருகின்றன. ஆர்.எஸ்.எஸ்.சுக்கு வெளிப் படையான எதிர்ப்புகள் தோன்றுகின்றன; வெளிப்படையான கேலி கிண்டலுக்கு அந்த அமைப்பு உள்ளாகிறது. முன்பு எப்போதும் இவ்வாறு நடந்ததில்லை. இதற்கெல்லாம் காரணம் என்ன?
2004 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய முன் னேற்றக் கூட்டணி ஆட்சியை இழந்தது; 2005 ல் வாஜ்பேயி அரசியலில் இருந்து விலகி இருக்க முடிவு செய்துவிட்டார். ஜின்னாவைப் புகழ்ந்து பேசிய அத் வானியின் நிலை பலவீனமடைந்து விட்டது. ஆர்.எஸ்.எஸ். இந்த நேரத்தில் பா.ஜ.கட்சியின் தலைமையில் ஏற்பட்ட வெற்றிடத்தைப் பயன்படுத்திக் கொண்டு அக் கட்சியின் கட்டுப் பாட்டைக் கைப்பற்றிக் கொண்டது. இரண்டாம் நிலை பா.ஜ.க. தலைவர்களை ஒருவருடன் ஒருவரை மோதவிட்டது.
பா.ஜ.கட்சி விவகாரங்களில் ஆர். எஸ்.எஸ். தலையிட்டு வந்ததை பா.ஜ. கட்சியினர் பொறுமையுடன் இது வரை சகித்து வந்தனர்; ஆனால் இப்போது திருப்பித் தாக்கத் தொடங்கிவிட்டனர். அத்வானியும் வாய்மூடி இருக்கவில்லை. மோடியை பா.ஜ.க.வின் அடுத்த பிரதமர் வேட்பாளராக  பெரும்பான்மையான ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் பார்க்கின்றனர். ஆனால் முக்கியமான ஆர்.எஸ்.எஸ். பொறுப்பாளர்களுடன் மோடியின் உறவு சுமுகமானதாக இல்லை. குஜராத் மாநிலத்தில் உள்ள ஆர்.எஸ்.எஸ். பொறுப்பாளர்களும், பா.ஜ.க.மோடி எதிர்ப்பாளர்களும் பரிவார் தங்களைக் கைவிட்டுவிட்டதாகவே கருதுகின்றனர். இவ்வாறு தேவையானபோது தங்களைப் பயன்படுத்திக் கொண்டு, மற்ற நேரங் களில் தங்களை தூக்கி எறியும் ஆர்.எஸ். எஸ்.சின் மீது அவர்கள் இப்போது கோப மாக உள்ளனர். என்றாலும்  இவர்களையும் சமாதானப்படுத்தி தேர்தல் வெற்றி பெற ஆர்.எஸ்.எஸ். முயல்கிறது.
இந்த முயற்சியில் ஆர்.எஸ்.எஸ். வெற்றி பெறுகிறதா இல்லையா என்பது முக்கியமல்ல. பா.ஜ.கட்சியில் ஆர்.எஸ். எஸ். தனது செல்வாக்கை, நம்பகத் தன்மையை இழந்துவிட்டது. கட்சிக் காரர்கள் தங்களுக்குள் தனிப்பட்ட முறையில் பேசிக் கொள்ளும்போது ஆர்.எஸ்.எஸ்.சைப் பற்றி கேலியும் கிண்டலும் செய்கின்றனர்; இதுவரை அவர்கள் அவ்வாறு செய்ததில்லை.
பா.ஜ.கட்சியின் தேசிய அமைப்பு மற்றும் மாநில அமைப்புகளின் அன்றாட விவகாரங்களில்  தலையிட்டு வரும் ஆர்.எஸ்.எஸ். தான் ஓர் அரசியல் கட்சியல்ல, சமூக அமைப்பு என்று பேசி வருவதைக்  கேலி செய்கின்றனர். நமது கட்சித் தலைவரை அவர்கள் நம்மீது திணிக்கின்றனர். பிரதமர் வேட்பாளரை யும் அவர்கள் அறிவிக்கின்றனர். கட் சிக்குள் இருக்கும் கருத்து வேறுபாடு கொண்டவர்களையும் அவர்களே கையா ளுகின்றனர். அப்படியிருந்தும் தான் அரசியல் கட்சியல்ல என்று ஆர்.எஸ்.எஸ். கூறிக்கொள்கிறது என்று ஒரு மூத்த பா.ஜ.க. தலைவர் கிண்டலடித்தார்.
கடந்த மே, ஜூன் மாதங்களில் ராஜஸ் தான், கருநாடகா மாநில பா.ஜ.கட்சியில் உட்கட்சி மோதல்கள் உச்ச கட்டத்தை எட்டின. தனது விருப்பப்படி முதல்வரை நியமிக்க வைத்துவிட்டார் கருநாடக மாநில முன்னாள் முதல்வர் எடியூரப்பா. குஜராத் முன்னாள் பா.ஜ.க. முதல்வர் கேசுபாய்படேல் கட்சி உறுப்பினர் பதவியைப் புதுப்பிக்கவில்லை.  மற்றொரு முன்னாள் அமைச்சர் ஜடாபியா மூன்றா வது அணி ஒன்றை உருவாக்க முனைந் துள்ளார். அனைத்துக்கும் மேலாக குஜராத் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் பலர் கேசுபாய் படேலுக்கும் ஜடாபியாவுக்கும் உதவி செய்ய உறுதி அளித்துள்ளனர்.
கேசுபாயின் எதிர்ப்பைப் பற்றி ஆர்.எஸ்.எஸ். கவலைப் பட்டாலும், அவரது எதிரி மோடியை எந்த அளவிற்கு ஆதரிப்பது என்பதில் ஆர்.எஸ்.எஸ். இரு கருத்துகளைக் கொண்டிருக்கிறது. ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுக்கு மோடி யுடன் தனிப்பட்ட முறையிலும் பிரச் சினைகள் உள்ளன. 2011 இல் அகமதா பாதில் சத்பாவனா பட்டினிப் போராட்டம் நடத்தியபோது  மோடி  ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் அனுப்பப்பட்ட ராம் லால் மற்றும் சுரேஷ் சோனியைக் கண்டு கொள்ளாமல் அலட்சியப்படுத்தி விட்டார். சுரேஷ் சோனிக்கும் மோடிக்கும் உள்ள பகை அவர்கள் இருவரும் பிரசாரகர் களாக இருந்த காலத்தில் தொடங்கிய தாகும்.
பா.ஜ.கட்சியை விடவும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பையும் விட தனக்கு ஒரு பெரிய தோற்றத்தை உருவாக்கிக் கொள்ளவே மோடி முயல்கிறார் என்று சுரேஷ் சோனி அறிக்கை அளித்தள்ளார். தனிப்பட்ட வர்கள் செல்வாக்கு பெறுவதை விரும்பாத ஓர் அமைப்பு இதனை செரிமானம் செய்து கொள்வது அவ்வளவு எளிதானது அல்ல.
அருண்ஜேட்லி அல்லது சுஷ்மா ஸ்வராஜை விட மோடியையே பிரதமர் வேட்பாளராகக் கொள்ள ஆர்.எஸ்.எஸ். விரும்புகிறது.  அத்வானி தீவிர அரசி யலில் இருந்து ஓய்வு பெற்ற வழிகாட்டும் தலைவராக இருக்க வேண்டும் என்று அது எதிர்பார்க்கிறது. கட்சியை விட உயர்வாக உங்களை நீங்களே நினைத் துக் கொள்ள வேண்டாம் என்று மறை முகமான எச்சரிக்கையை மோடிக்கு ஆர்.எஸ்.எஸ்.அளித்துள்ளது.
இதில் உள்ள பிரச்சினை என்ன வென்றால், ஆர்.எஸ்.எஸ்.சே எந்தப் பிரச்சினையிலும் நிலையான கருத்தைக் கொண்டிருக்கவில்லை என்பதுதான். இந்துத்துவா, நாட்டின் முன்னேற்றம், ஊழலற்ற அரசியல் என்ற எந்த விஷயத் திலும் அது தீவிரமாக இருக்கவில்லை. மோடி, எடியூரப்பா, வசுந்தராராஜே ஆகியோரை ஆர்.எஸ்.எஸ். எதிர்ப்பது, தனிப்பட்டவர்களை புகழும் கலாசாரத் திற்கு எதிரான கொள்கையினால் அல்ல;  இந்த அதிகார விளையாட்டில் தாங்கள் வெளியே தள்ளப்பட்டு விடுவோம் என்ற அச்சம்தான் காரணம். நன்றி: தெகல்கா 14 ஜூலை 2012 தமிழில்: த.க.பாலகிருட்டினன்
ராணா அயூப்

(தொடரும்)



இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:






JULY 16-31


No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...