Sunday, July 29, 2012

தூக்கில் போடலாமே!


தூக்குத் தண்டனை தூக்கி எறியப்படும் வரை - அந்தத் தண்டனை வழங்கப் பெற முழுத் தகுதி உள்ளவர்தான் குஜராத் மாநில முதல்அமைச்சர் நரேந்திர தாஸ் தாமோதரதாஸ் மோடி.
அவருடைய ஆட்சியில்தான் 2000 முசுலிம்கள் படு கொலை செய்யப்பட்டனர். ஒரு லட்சத்து 70 ஆயிரம் வீடுகள் தீக்கு இரையாக்கப்பட்டன. 203 தர்க் காக்கள், 205 மசூதிகள் சாம்பலாக்கப்பட்டன. 4000 கார்கள், 20 ஆயிரம் இரு சக்கர வண்டிகளும் நெருப்பின் பசியை ஆற்றின. ரூ 3,800 கோடி இழப்பு என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 70 ஆயிரம் முசுலிம்கள் சொந்த மண்ணிலேயே ஏதிலிகளாக ஆக்கப் பட்டுள்ளனர். காவல்துறையினர் 10,000 தோட் டக்களைப் பயன்படுத்தி இருக்கின்றனர்.
இவ்வளவும், மோடி முதல் அமைச்சராக இருந்த நிலையில்தான் நடைபெற்று இருக்கின்றன. குறைந்த பட்சம் இவற்றிற்குப் பொறுப்பேற்று, நரேந்திர மோடி முதல் அமைச்சர் பதவியிலிருந்து விலகி இருக்க வேண்டாமா? அரியலூரில் ரயில் கவிழ்ந்ததற்கு லால்பகதூர் சாஸ்திரியும், ஓ.வி.அளகேசனும் பதவி விலகி இருக்கும்போது, இவ்வளவு கொடுமைகள் நடந்திருக்கும் ஒரு மாநிலத்தில் அவற்றிற்குப் பொறுப்பேற்க வேண்டியவர் அம்மாநில முதலமைச்சர் என்பது, அரசியலில் பாலபாடமாகும்.
அதனைக் கூடச் செய்ய முன்வராத ஒருவர் 10 ஆண்டுகளுக்குப் பிறகு, நான் தவறு செய் திருந்தால், என்னைத் தூக்கில் போடுங்கள்! என்று குரல் கொடுப்பது அசல் பசப்பும், நயவஞ்சகமும், நரித்தனமும் கொண்டதே!
மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச் சரும், பிரபல சட்ட வல்லுநருமான கபில் சிபல் கிளப்பிய வினாவுக்கு முதலில் பதில் சொல்லட்டும்.
10 வருடங்களாக மோடி மீது ஒரே ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட அனுமதிக்கப்பட்டுள்ளதா? என்ற கேள்வி நாணயமான கேள்வி அல்லவா?
ஏதாவது நீதிமன்றம் தங்களுக்குச் சாதகமாகத் தீர்ப்பு கூறினால் அதனை வீரவாளாகச் சுழற்றுவார்கள் சோ போன்ற பார்ப்பனர்கள். இதே மோடி மீது உச்சநீதிமன்றம் எப்படிப்பட்ட வார்த் தைகளால் விமர்சனம் செய்தது? முதல் அமைச்சர் மோடியை நீரோ மன்னனுககு ஒப்பிட்டுக் கூற வில்லையா? அப்போது தம் வீரத்தைக் காட்டாமல் மவுனிகள் ஆனது ஏன்?
மனித நேயத்தின் சிறுசிறு துளிகள் சேர்ந்துதான், மனிதம் உண்டாக்கப்பட்டது. இந்த மனிதம் கொடுங்கோலர்களிடம்  வற்றிப்போய்விட்டதோ! ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தில் பிறந்தவர்கள் என்பதற் காகவா, இவர்கள் எரித்துக் கொல்லப்பட்டார்கள்? என்று உச்ச நீதிமன்றம் கேள்வியை எழுப்ப வில்லையா?
மொத்தம் 4,252 வழக்குகளில் 2000 க்கும் மேற்பட்ட  வழக்குகள் விலக்கிக் கொள்ளப்பட்ட நிலையில், இந்த வழக்குகளுக்கும் புலனாய்வு மீண் டும் செய்யப்படவேண்டும் என்று உச்சநீதிமன்றம் வைத்த குட்டு, மோடியின் தலையில் அல்லவா?
மோடியின் அமைச்சரவையில். முக்கியப் பொறுப் பில் இருந்தவர் ஹரேன் பாண்டியா; மக்கள் விசா ரணை ஆணையத்திடம் நடந்தவற்றை அப்படியே வெளியிட்ட நிலையில், அவர் படுகொலை செய்யப் பட்டதன் பின்னணி என்ன?
தனது மகன் படுகொலைக்குக் காரணம், குஜராத் முதல் அமைச்சர் நரேந்திர மோடிதான் என்று ஹரேன் பாண்டியாவின் தந்தையார் நானாவதி ஆணையத்திடம் தெரிவித்தாரே!
குஜராத் கலவரம் நடைபெற்றபோது காவல் துறையில் உயர்ந்த பொறுப்பில் இருந்த அதி காரிகளான ஸ்ரீகுமார், ஷர்மா, சஞ்சீவ் பட் முதலி யோர், வன்முறையின் பின்னணியில் முதல் அமைச்சர் மோடி இருந்தார் என்று கூறி இருக் கிறார்களே - நீதிமன்றத்திலேயே பிரமாணப் பத்திரம் கொடுத்துள்ளனரே!  இவ்வளவுக்குப் பிறகும் நான் தவறு செய்திருந்தால் என்னைத் தூக்கில் போடுங்கள் என்று ஒரு முதல் அமைச்சர் சொல்கிறார் என்றால், எவ்வளவு அசட்டுத் துணிவும், நீதித் துறையின் மீது ஏளன உணர்வும் இருக்க வேண்டும்?
இப்படிப்பட்ட நரவேட்டைப் பேர்வழியை பிரதமராக்க வேண்டும் என்று சிலர் சொல்லு கிறார்கள் - எழுதுகிறார்கள் என்றால் அவர்கள் எத்தகைய காட்டு மிருக உணர்வைக் கொண்ட வர்களாக இருக்க வேண்டும் என்று எண்ணிப் பாரீர்! - வாய்ப்பு இருந்தால் முதலில் இத்தகையவர்களைத் தூக்கில் போட வேண்டுமே!

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
அடுத்து >>


JULY 16-31

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...