Monday, July 16, 2012

புரோகித சூழ்ச்சி!

மனித இனத்தின் மகத்தான முதல் கண்டுபிடிப்புகளில் ஒன்று தீ. இன்றும் அது மனிதர்களால் ஒதுக்கி வைக்க இயலாததாக உள்ளது; என்றும் அப்படித்தான் இருக்கவும் செய்யும். காட்டுவாசிகளாக இருந்த நம்முடைய முன்னோர்கள் இருளை அகற்றவும், வனவிலுங்குகளை அச்சுறுத்தி விரட்டவும், குளிரிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ளவும் தீயை பயன்படுத்தத் தொடங்கினர். பிறகு உணவை வேகவைத்து உண்ண தீ பயன்படுமென்பதை அவர்கள் தெரிந்து கொண்டனர். களிமண்ணைச் சுட்டுப் பாத்திரங்கள் செய்யவும், செங்கல் செய்யவும் தீயைப் பயன்படுத்தத் தொடங்கியது நாகரிகத்தின் மற்றொரு வளர்ச்சிக் கட்டத்திலாகும். உலோகங் களைக் கண்டுபிடித்ததும் ஆயுதங்கள் செய்யவும் தீ பயன்படுமென்பதை அவர்கள் புரிந்து கொண்டனர்.
இயற்கையை வெல்வதற்கு தீ மனி தர்களுக்கு செய்த உதவி கொஞ்சமல்ல. உணவைப் பக்குவப்படுத்தவும், குளிரை அகற்றவும் மட்டுமல்ல, இயந்திரங்களை இயக்கவும், வாகனங்களை ஓட்டவும், விமானங்களைப் பறக்கச் செய்யவும், வான்வெளிக்கு விண்கோள்களை அனுப்பவும் இன்று தீ பயன்படுகின்றது. தீ எரிக்க முன்பு விறகை மட்டுமே பயன்படுத்தினரென்றால், இன்று கேஸ், பெட்ரோல், மண்ணெண்ணெய் முதலிய பலவற்றையும் பயன்படுத்துகின்றனர். எந்தச் சமயத்திலும் எங்கேயும் கொண்டு செல்லவும் எங்கே வைத்தும் தீ உண்டாக்கவும் கூடிய பல கருவிகள் இன்று நமக்கு உண்டு. அவற்றில் சர்வ சாதாரணமான ஒன்று தீப்பெட்டி. கார் ஓட்டுவது பெட்ரோலையோ டீச லையோ எரிய வைப்பது  என் றாலும், அதற்கு தீப்பெட்டி கூடத் தேவையில்லை. ஸ்டார்ட் செய்யும் பொழுது அதற்காகப் பயன்படுத்துகின்ற எரி பொருளில் தீ பிடிப்பதற்கான வசதிகள் அதற்கு உள்ளேயே செய்யப்பட்டுள்ளன. சமையலறையில் கேஸை எரியச் செய்வதற்குக் கூட இன்று அதிகமாக எவரும் தீப் பெட்டியைப் பயன்படுத்துவதில்லை. எந்தவித சிரமமுமின்றி தீயை உண்டாக்கவும் கொண்டு செல்லவும் பாதுகாக்கவும் இன்று நம்மால் முடிகின்றனது. ஆனால் 200 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த நிலை அதுவல்ல. கி.பி. 1828 இல் ஜான்வால்கர் தீப்பெட்டியைக் கண்டுபிடிப்பதற்கு முன்பு தீ உண்டாக்க மனிதர்கள் மிகவும் சிரமப்பட்டனர். உலோகங்களை உராயச் செய்தோ, சில வகை மரத் தடிகளைப் பயன்படுத்திக் கடைந்தோ தீ உண்டாக்க வேண்டியிருந்தது. அது மிகவும் சிரமமான வேலையாக இருந் தது. அதனால் தீயை அணைக்காமல் பாதுகாக்க அன்றைய மக்கள் முயன்றனர்.
கோத்திர நாகரிகம் உருவாவதற்கு முன்புள்ள காலத்தில் குகைகளில் வாழ்ந்திருந்த மனிதர்கள் குகையின் ஒரு பகுதியில் நிரந்தரமான நெருப்புக் குண்டங்களை அமைத்தனர். காய். கனிகளைச் சேகரிக்கவோ வேட்டை யாடவோ செல்லும்பொழுது தீ அணையாமல் பாதுகாப்பதற்காக குகையில் எவரேனும் இருக்க வேண்டி இருந்தது. சிறு குழந்தைகளின் பாதுகாப்புக்குப் பொறுப்பேற்ற பெண், ஆரம்பகாலத்தில் அந்தப் பொறுப் பையும் ஏற்றாள். உணவைப் பக்குவப் படுத்துவதும் குழந்தைகளின் பாது காப்பும் வரலாற்றுக்கும் முந்தைய காலத்திலேயே பெண்களுடைய பொறுப்பில் வந்தது அவ்வாறுதான். பெண்களுடைய அடிமை நிலை அங்கிருந்தே ஆரம்பிக்கிறது.
பண்டைய மனிதர்களைப் பொறுத்தவரை அவர்களால் விவரிக்க இயலாத ஒரு திவ்ய படைப்பே தீ. அதனை உண்டாக்குபவர்களும், பாதுகாப்பவர்களும் அதனாலேயே சமூகத்தில் முக்கியத்துவம் பெற்றனர். இந்தத் தீயைப் பாதுகாப்பவர்களே பிற்காலத்தில் புரோகிதர்களாக ஆனார்கள். நெருப்புக்கு அவர்கள் திவ்யத் தன்னமையைக் கொடுத்தனர். தீயில் இடுகின்ற பொருள்கள் எரிவதைக் கண்டதும், தீ உணவு உண்பதாக இயல்பாகவே அவர்கள் சங்கல்பித்தனர். அந்தத் திவ்ய சக்தியை மகிழ்விப்பதற்காக எதைக் கொடுக்கவும் அவர்கள் தயாரானார்கள். உணவுப் பொருள்கள், நெல், விலங்குகள், மனிதர்கள் முதலிய பலவற்றையும் அவர்கள் நெருப்புக்கு உணவாக அர்ப்பணித்தனர். இவ்வாறு நெருப்புக்கு அர்ப்பணிப்பதில் ஒரு பங்கு தீயை பாதுகாப்பவர்களுக்கும் கிடைத்தது. பின்னர் தீயின் மகத்துவத்தைச் சொல்லி வழிபாடுகளை ஏற்கவும் தீயின் பாதுகாவலர்களான புரோகிதர்கள் முயற்சியை ஆரம்பித்தனர். படிப்படி யாகப் புரோகித சூழ்ச்சி ஆரம்பிக்கப் பட்டது.
- ஜோசப் இடமருகு


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...