Monday, July 23, 2012

வெறும் பொம்மைகள்தான் அங்கே . . . !


அன்பே கடவுள் என்றார்கள்! கல் கடவுள்கள் அத்தனையும் காணாமலா போய்விட்டன? உனக்கு நீயே கடவுள் என்று உளறியதும், கடவுளைக் கற்பிப்பதில்தான் முடிந்தது. செய்யும் தொழிலே தெய்வம் என்று சொல்லி திருத்த முயற்சித்தவர்களும் ஏமாந்துதான் போனார்கள். மாதா, பிதா, குரு, தெய்வம். அவர் மலரடி தினம் வணங்குதல் செய்வோம் என்று பாடி வளைக்கப் பார்த்தார்கள். வணங் குதல் அத்தனையும் கோயில் பொம் மைகளுக்குத் தான்! அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்று சொன்னார்கள். அத்துடன் நின்றி ருக்கலாம். அடுத்து ஆலயம் தொழு வது சாலவும் நன்று என்று முரண் பட்டு, நேற்று விழுந்த அதே இடத் தில் மறுபடியும் இடறி விழு கிறார்கள்.
கூச்சமோ, குற்ற உணர்வோ கொஞ்சமும் இல்லாமல் கோவி லுக்குப் போகச் சொல்லும் குருட்டுப் புத்தி அவாள்களிடம் இன்றுவரை இருந்து கொண்டுதான் இருக்கிறது என்பதற்கு சான்று 11.-7.-2012 துக்ளக் இதழில் வேளுக்குடி கிருஷ்ணன் என்பவர் எழுதிய பாகவதத் தொடரைப் படித்தாலே போதும்!
மகான்களுடைய திருவடி பட்டால் எந்தக் குறைதான் நீங்காது? நம் வீட்டிலும் பகவான் உள்ளான். உள்ளத்திலும் உள்ளான். அங்கேயே இறைவனைத் தொழுதுகொள்ளலாம். ஆனால் எதற்காக கோவிலுக்குப் போகிறோம்? அதுவும் புராதனக் கோவில்கள், பாடல் பெற்ற கோவில்கள் என்று எதற்குத் தேடித் தேடிப் போகிறோம்? இதன் பின்னணியில் முக்கியமான கருத்து ஒன்று உண்டு. பல ஆயிரம் வருடங்களாக இருந்து வரும் கோவிலுக்கு எத்தனை மகான்கள் எழுந்தருளியிருப்பார்கள்? அவர்களுடைய திருவடிகளெல்லாம் பதிந்திருக்கும் இடமன்றோ அது? அவர்களாலே இந்தப் பெருமான் எத்தனை பொங்கும் பரிவோடு வணங்கப்பட்டிருப்பான்? அவர்கள் பக்தியோடு தங்கள் தாமரைக் கண்களால் பகவானைப் பார்த் திருப்பார்கள் அல்லவா? மேலும் எத்தனை ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் இந்தக் கோவிலுக்கு வந்திருப்பார்கள்! இவர்கள் அனைவருடைய பெருமை, பாததூளி, அருள் ஆகிய அனைத்தும் புராதனக் கோவில்களில் இருக்குமே! நாம் அந்தப் பெருமானை தரிசிக்கச் செல்லும்போது அவர்களது மன உருக்கத்தை நாமும் பெறலாமே! இது தனிமையில் இருக்கும் நம் வீட்டில் கிட்டுமா? அதற்காகத்தான் கோவில் களைத் தேடித் தேடிப் போகிறோம் என்கிறார்.
கோவில்களுக்குள் மகான்கள் எழுந்தருளுவதால் அவர்களுக்குக் கூடுதல் பலம் கிடைத்துவிடுகிறதா? நோயற்ற வாழ்வும், சாகா வரமும் கிடைத்துவிடுகின்றனவா? கொலையர், கொள்ளையர், சமூக விரோதிகள் கோவிலுக்குள் நுழைவதே இல்லையா? உலக நன்மை வேண்டி கடவுளைப் பிரார்த்திக்கும் ஒரு பக்தனையாவது காட்ட முடியுமா? சுரண்டல் தொழிற் சாலைக்குள் அடியெடுத்து வைப்பவர்கள் சுயநலப் பேர்வழிகள் அல்லாது வேறு யார்? கோவில் கருவறைக்குள்ளேயே திருவிளையாடல்களை அரங்கேற்றும் தேவநாதன்களின் பாததூளிகளால் சன்னதி புனிதம் கெட்டுவிடாதா?
சாமி ஒன்னும் இல்லே. வெறும் பொம்மைகள்தான் அங்கே. போவதினால் இலாபம் ஏதுமில்லை என்பதற்கு அதே தேதியிட்ட (11.-7.-2012) குமுதம் இதழில் மரணத்தை தொட்டுவிட்டு வந்திருக்கிறேன் என்ற தலைப்பில் எழுத்தாளர் பாலகுமாரன் தரும் தகவலே போதும்.
மதுரைக்கு சற்று தள்ளி அழகர் கோவில் போகும் வழியில்  வனாந் தரத்தில் கட்டப்பட்ட ராகவேந்திரர் கோவிலுக்கு கும்பாபிசேகத்திற்காகப் போயிருந்தேன். கொஞ்சம் இருமல் இருந்தது. பேசினால் இருமல் அதி கரித்தது. இருந்தாலும் பொறுத்துக் கொண்டு அழகர் கோவிலை அணுஅணுவாய் ரசித்துவிட்டு சென்னை திரும்பினேன். இருமல் உச்ச கட்டத்தை எட்டிவிட்டது. அத்தோடு மூச்சுத் திணறலும் சேர்ந்து கொண்டது. நோய் எதிர்ப்பு மாத்திரைகளில் இருமல் குறைய வில்லை. தெரிந்த டாக்டரே மருத் துவமனைக்குப் போய் உள் நோயாளியாகச் சேர்ந்துவிடுங்கள் என்று சொன்னார். (நோய் தீர்க்கும் வல்லமை வாய்ந்த, பாடல் பெற்ற, புராதனக் கோவில் ஒன்றுக்குப் போகச் சொல்லவில்லை!) மருந் துகளின்  உதவியால் மெல்ல மெல்ல அமைதியாக இருபத்தாறு நாட்கள் அங்கே தங்கியிருந்துவிட்டு வீடு வந்து சேர்ந்தேன். வீட்டோடுதான் இருக்கிறேன். கண்களில் கொஞ்சம் கோளாறு. காதும் கேட்காதபடியால் எழுதவோ, பேசவோ, படிக்கவோ முடிவதில்லை. தரை ஒட்டி படுக்கவும் முடிவதில்லை என்று நொந்து கொள்கிறார். கோவில்களுக்குப் போகச் சொல்லும் கொடியவர்களுக்கு பாலகுமாரன் பதில் சொல்லி விட்டார். இப்போதைக்கு இது போதும். நோயின் தாக்குதலுக்கு இலக்கான இவர் குமுதம் பக்தியில் இனி எழுதப்போகும் கட்டுரைத் தொடரின் தலைப்பு என்ன தெரியுமா?  இது போதும்!
உலகப் பகுத்தறிவாளர்கள் கேட்ட பன்னூறு கேள்விகளில் சிலவற்றை நினைவு படுத்துவோம்.
கடவுள் நல்லவர் என்றால் அவரை நினைத்து நாம் ஏன் அஞ்சவேண்டும்?
அவர் மிகவும் அறிவுக்கூர்மை உள்ளவர், சகலமும் அறிந்தவர் என்றால் எதிர்காலம் பற்றி நாம் ஏன் கவலைப் படவேண்டும்?
அவருக்கு எல்லாமே தெரியும் என்றால் நாம் ஏன் பிரார்த்தனை மூலம் நம் தேவைகளை, குறை களை அவரிடம் தெரிவிக்க வேண்டும்? அவர் எங்கும் இருக் கிறார் என்றால் நாம் ஏன் கோவில்களைக் கட்ட வேண்டும்?
கேள்விகள் அப்படியே இருக்கின்றன.
பதிலைத் தான் காணோம்!
-  சிவகாசி மணியம்

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

JULY 16-31



No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...