Sunday, July 22, 2012

நீதிக்கட்சியின் திருமகன் ஓ.தணிகாசலம் (செட்டியார்) (2


சட்டமேலவை உறுப்பினராக ஓ. தணி காசலம் அநேக முக்கிய குழுக்களில் பணியாற்றியிருக்கிறார். தனது சட்ட மேலவை உறுப்பினர் பதவிக்காலம் முழு வதும் நிதிக்குழு, சிக்கனக் குழு மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட எல்லாக் குழுக்களி லும் உறுப்பினராகப் பணியாற்றியிருக் கிறார். அவரது சட்ட அறிவும், பரந்த அனுபமும் தேர்ந்தெடுக்கப்பட்ட குழுக் களில் அநேக சட்ட முன் வரைவுகளை பரிசீலிக்கவும், பின்பு சட்டமாக இயற்றவும் பேருதவியாக இருந்தன.
இந்து சமய அறக்கட்டளை மசோதா அப்போதைய முதன் மந்திரியான பனகல் அரசர் அவர்களால் சென்னை சட்ட மேலவையில் அறிமுகப்படுத்தப்பட்ட போதும், 1923இல் சட்டமாக்கப்பட்ட போதும் சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து பலத்த எதிர்ப்பு இருந்தது. சில வாரங்கள் முன்பு வரை நீதிக்கட்சியின் முக்கியமான உறுப்பினராக இருந்தவரும், திறமை வாய்ந்த பேச்சாளரும், அப்போதைய சட்ட மேலவை எதிர்க்கட்சித் தலைவரும் எல்லோராலும் சி.ஆர்.ரெட்டி என்று அழைக்கப்பட்ட திரு.சி.ராமலிங்க ரெட்டி அவர்கள் இப்போது பனகல் அரசர் அவர்களை முதன் மந்திரியாகக் கொண்ட நீதிக்கட்சி மந்திரி சபையைக் கவிழ்த்து விடடு தானே முதன் மந்திரியாகப் பதவியேற்க மிகச் சரியான சந்தர்ப்பம் வாய்ந்திருப்பதாக நினைத்தார். நீதித் துறையில் அதிருப்தியாளர்கள் சிலர், சுயராஜிகள், தேசிய வாதிகள், மற்றும் சில சுயேச்சைகள் அவரது ஆதரவாளர்கள் அடங்கிய கூட்டத்தின் துணையோடு சட்டமேலவையில் ஆளும் கட்சியான நீதிக்கட்சி மற்றும் அதன் தலைவராக முதன் மந்திரி பனகல் அரசர்  அவர்கள் மீது ஒரு நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தார்.
இந்த நெருக்கடியான தருணத்தில் தணிகாசலம் செட்டியார் அவர்கள் பனகல் மந்திரி சபைக்கு ஆதரவாக ஏராளமான புள்ளி விபரங்களுடன் தனது மிகவும்  ஆற்றல் வாய்ந்த விவாதத்திறமையான சொற்பொழிவினால், நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்த திரு.சி.ஆர். ரெட்டி அவரது ஆதரவாளர்களும் முன் வைத்த அநேக வாதங்களையும் நொறுக்கி தள்ளினார்.
நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோற்கடிக்கப்பட்டு நீதிக்கட்சி மந்திரிசபை காப்பாற்றப்பட்டது. மறுநாள் 27.11.1923 இல் தீர்மானம் மீது ஓட்டெடுப்பு நடைபெற்று தீர்மானம் தோற்றதாக அறிவிக்கப்பட்டது. ஓட்டு விபரம்:- தீர்மானத்திற்கு  ஆதரவாக 43 உறுப்பினர் எதிராக 65 உறுப்பினர், நடுநிலை  10 உறுப்பினர்.(தணிகாசலனார் ஆற்றிய சொற்பொழிவின் பெரும்பகுதி இந்த வரலாற்றின் இறுதியில் (எண் 4) இணைக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிகழ்ச்சி ஒ.டி.செட்டியார் அவர்களின் வாக்கு வன்மைக்கும் பனகல் அரசர் அவர்கள் செட்டியார் மீது கொண்டி ருந்த மதிப்பிற்கும் மரியாதைக்கும் சிறந்த சான்றாகும். நம்பிக்கையில்லாத் தீர்மானம் சபைக்கு வருவதற்கு முந்திய நாள் முதன் மந்திரி திரு.பனகல் அரசர் அவர்கள் ஒ.டி.செட்டியார்வீட்டிற்கு வருகை தந்து தீர்மானத்தை தோற்கடிக்கச் செய்ய தன்பக்கம் இருக்க வேண்டும் என்று  கேட்டுக் கொண்டார் என்பதும் இந்த  சந்தர்ப்பத்தில் நினைவு கொள்ளத்தக்கது.
சமுதாயஇட ஒதுக்கீட்டுத் திட்டத்தின் முன்னோடி
1921ஆம் ஆண்டு ஆகஸ்டு சென்னை சட்ட மேலவையில் திரு.தணிகாசலனார் அவர்களால் கொண்டு வரப்பட்ட வர லாற்று முக்கியத்துவம் வாய்ந்த இரண்டு தீர்மானங்களுக்காக தமிழ்நாட்டில் உள்ள லட்சக்கணக்கான பிராமணரல்லாத சமு தாய மக்கள்  தணிகாசலனார் அவர்களது பெயரை எப்போதும் பாசத்துடனும் நன்றி யுடனும் நினைத்துக் கொள்வார்கள்.
திரு.தணிகாசலனாரால் கொண்டு வரப்பட்டு திரு.சி.நடேச முதலியார் அவர் களால் வழி மொழியப்பட்ட முதலாவது தீர்மானத்தின்படி கிறிஸ்துவர்கள், முஸ்லீம்கள், இதர நலிவடைந்த பிரிவினர் கள் உள்ளடங்கிய பிராமணரல்லாத சமுதாயங்களைச் சேர்ந்தவர்களே  இனி மேல் சென்னை அரசாங்கத்தின் எல்லாத் துறைகளிலும் எல்லா பணியிடங்களுக்கும் அவர்கள் அந்தப் பணிகளுக்கு என்று விதிக்கப்பட்ட குறைந்த பட்ச தகுதியே பெற்றிருந்தாலும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் (பிராமணர்கள் அதிகத் தகுதி வாய்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களைத் தேர்ந்தெடுக்கக் கூடாது).
மற்றும் அவரது தீர்மானம் கூறிய தாவது:- மேலே கூறப்பட்டவைகளை உள்ளடக்கி அரசாங்கம் ஒரு நிலை ஆணை பிறப்பிக்க வேண்டும். அந்த நிலை ஆணை மாதம் ரூ.100க்கு குறைந்து சம்பளம் பெறும் பணிகளில் 75 சதவீதமும் மாதம் ரூ.100 க்கு மேல் சம்பளம் பெறும் பணிகளில் 66 சதவீதமும் பிராமணரல்லா தாரால் நிரப்பப்படும்வரை செயல்படுத்தப் பட வேண்டும். குறைந்தபட்சம் இந்தநிலை ஆணை 7 ஆண்டுகள் செயல்படுத்தப்பட வேண்டும்.
இந்த தீர்மானம் அவையில் இருந்த போது ஆளுநரது அமலாக்கக் குழுவில் அப்போதைய நிதி உறுப்பினரான திரு.எ. ஆர்.நாப் அவர்கள்  1854ஆம் ஆண்டு வருவாய் குழு மாவட்ட ஆட்சியாளர் களுக்கு அனுப்பிய நிலை ஆணை எண். 128(2)அய் அவையின் கவனத்திற்கு  கொண்டு வந்தார்.  அந்த நிலை ஆணை மாவட்ட ஆட்சியர்கள் தமது மாவட் டங்களில் கீழ்நிலைப் பணியிட நியமனங் களை ஒரு சில செல்வாக்குள்ள குடும் பங்களே ஏகபோகமாக அனுபவிக்காமல் எச்சரிக்கையாகக் கவனிக்க வேண்டும் என்றும் எப்போதும் தமது மாவட்டங்களில் உள்ள பணியிட  நியமனங்களை மாவட் டத்தில் உள்ள முக்கிய சமுதாயத்தினர்களி டையே பிரித்துக் கொடுக்க முழு முயற்சி செய்ய வேண்டும் என்றும் கூறிற்று.
திரு.எ.ஆர்.நாப் அவர்கள் ஆலோ சனைப்படி ஒ.டி.செட்டியார் கொண்டு வந்த தீர்மானம் திருத்தப்பட்டது. திருத்தப்பட்ட தீர்மானமாவது:- 1854ஆம் ஆண்டு வருவாய்க் குழு பிறப்பித்த நிலை ஆணை எண் 128(2) அரசாங்கத்தின் எல்லாத் துறைகளுக்கும் அரசாங்கப் பணிகளின் எல்லா நிலைகளுக்கும் விரிவுப்படுத்தப்பட வேண்டும் என்று  இந்த சபை அரசாங் கத்திற்குச் சிபாரிசு செய்கிறது. அரசாங் கம் இதன்படி ஒரு நிலை ஆணை பிறப் பித்து அரசாங்கத்தின் எல்லாத்துறைத் தலைவர்களும் இந்த ஆணையைச் செயல் படுத்த வேண்டுமாறு கட்டாயப்படுத்த வேண்டும்; மற்றும் 6 மாதங்களுக்கு ஒரு முறை இது சம்பந்தமாக அடைந்த முன் னேற்றம் பற்றிய அறிக்கையைச் சமர்ப் பிக்கச் செய்ய வேண்டும்; இந்த அறிக்கை சட்ட மேலவை உறுப்பினர்களுக்குக் கிடைக்க செய்ய வேண்டும்.
ஒ.தணிகாசலம் செட்டியார் அவர்கள் முன்மொழிந்த முதலாவது தீர்மானத்தைப் போல திருத்தப்பட்ட தீர்மானம் உறுதி ஆக இல்லாத போதிலும், சட்ட மேலவையில் அது ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது என்பதே ஒ.டி.செட்டியார் அவர்களின் சட்ட நுணுக்க அறிவுக்கும் பிறரை ஏற்றுக் கொள்ளச் செய்யும் திறமைக்கும் ஒரு சிறந்த புகழாரம் ஆகும்.
அன்றையதினமே அவரால் சட்ட மேலவையில் முன்மொழியப்பட்ட இரண்டாவது தீர்மானம்:- சென்னை தலைமைச் செயலகத்தில்  உள்ள எல்லாப் பணிகளுக்கும் (அய்.சி.எஸ் அலுவலர்கள் தவிர) பிராமணரல்லாதார் மட்டுமே நியமிக்கப்பட வேண்டும் என்பதாகும். ஒ.டி.செட்டியார் அவர்களின்இந்த தீர்மானமானது திரு.பி.சிவராவ் மற்றும் திரு.எல்.எ.கோவிந்தராஜ அய்யர் போன்ற பிராமண உறுப்பினர்களால் முழு மூச்சாக எதிர்க்கப்பட்ட போதிலும், சர்.ஆர்.கே. சண்முக செட்டியார் போன்ற பிராமண ரல்லாத  தீவிர ஆதரவாளர்களால் உறுதி யாக ஆதரிக்கப்பட்டது. மேலவையில் தனது உரையின்போது சர்.ஆர்.கே. சண்முகம் செட்டியார் அவர்கள் கூறிய தாவது: இந்த மாவட்டத்தின் எதிர்கால சந்ததியினர் அவர்களது நியாயமான உரிமைகளை இந்த வரலாற்று சிறப்பு வாய்ந்த தீர்மானத்தை நிறைவேற்றுவதன் மூலம் உறுதி செய்தவர்களாக நம்மைக் கருதுவார்கள். இந்தத்தீர்மானம் மேலவையில் மிகத் தெளிவான வாக்கு வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தை ஆதரித்து 49 உறுப்பினர்கள் வாக்களிக்க அதனை எதிர்த்து 22 உறுப்பினர்கள் மட்டுமே வாக்களித்தனர்.
1921இல் திரு.ஒ.தணிகாசலம் செட்டி யார் அவர்களால் கொண்டு வரப்பட்டு சென்னை சட்ட மேலவையில் நிறைவேற்றப் பட்ட இந்த இரு தீர்மானங்களுமே பின்பு அரசாங்கப் பணியிடங்களை சமுதாயப்படி பகிர்ந்தளிப்பது என்ற (எல்லோராலும் சமுதாய அரசாணை என்றழைக்கப்பட்ட) புகழ் வாய்ந்த திட்டத்திற்கு அடிப்படையாய் அமைந்து 1928இல் அப்போதைய மந்திரி யான திரு.எஸ்.முத்தையா முதலியார் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது என்பதும் இங்கு குறிப்பிடதக்கது.
நீதித்துறையில் நீதிக்காக போராட்டம்
1914ஆம் ஆண்டு சென்னை ராஜதானி யில் மொத்தம் இருந்த மாவட்ட முன்சீப்களில் 121 பேர் பிராமணர்கள், 35பேர் மட்டுமே பிராமணரல்லாத இந்துக் கள்   என்ற நிலைமை தணிகாசலனாருக்கு வியப்பையும் வேதனையையும் அளித்தது. ஏழு ஆண்டுகளுக்குப் பின்பும் அதாவது 1921இல் பிராமண முன்சீப்கள் எண் ணிக்கை 31பேர் அதிகரித்து 121இல் இருந்து 152 ஆகியிருந்த சமயத்தில் பிரா மணரல்லாத முனிசீப்கள் எண்ணிக்கை வெறும் 3 மட்டுமே அதிகரித்து, 35இல் இருந்து 38 ஆகியிருந்தது என்ற நிலமை அவருக்கும் பேரதிர்ச்சியாக இருந்தது. இவ்வாறாக நீதித்துறையில் பிராமண சமுதாயத்தினர்கள் நிலைமை மேலும் மேலும் பலம் வாய்ந்ததாக ஆகிக் கொண் டிருந்தபோது பிராமணரல்லாதார் நிலை மையோ மோசமாகிக் கொண்டே வந்தது. அந்த நாட்களில் மாவட்ட முன்சீப்களை நியமிக்கும் அதிகாரம் உயர்நீதிமன்றத் திற்கு அளிக்கப்பட்டிருந்தது. மேலே குறிப்பிட்ட புள்ளி விபரங்களை ஆராய்ந்த தணிகாசலானார் உயர்நீதிமன்றம் எல்லாச் சமுதாயத்தினருக்கும் பாசம்மிக்க பெற்றோரைப் போல் இருப்பதற்குப் பதிலாக ஒரு சமுதாயத்தினருக்கு மட்டும் ஞானத்தந்தையாகவும் மற்ற அனைத்து சமுதாயத்தினர்களுக்கும் மாற்றாந்தாய் ஆகவும் இருக்கிறது என்ற முடிவுக்கு வந்தார்.
எனவே பிராமணரல்லாத சமுதாயத் தினர்களுக்கு மாவட்ட முன்சீப் நியம னங்களில் நியாயம் கிடைக்கும் பொருட்டு தணிகாசலனார் 1921 ஏப்ரல் முதல் தேதியன்று  சென்னை சட்டமேலவையில் இப்போது சென்னை உயர்நீதிமன்றத்திடம் அளிக்கப்பட்டிருக்கும் மாவட்ட முன்சீப் நியமன அதிகாரத்தை அரசாங்கமே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று சென்னை அரசாங்கத்திற்குச் சிபாரிசு செய்து ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.
ஆளுநரது அமலாக்க குழுவில் உள்ளாட்சி அங்கத்தினர் ஆக இருந்த சர் லயோனல் டேவிட்சன் விவாதத்தின் முழு சாராம்சமும் உயர்நீதிமன்றத்திற்குத் தெரிவிக்கப்பட்டு முழு விஷயமும் உயர்நீதிமன்றத்தாலும் அரசாங்கத்தாலும் ஆராயப்படும் என்று அளித்த வாக் குறுதியின் பேரில் தணிகாசலனார் அந்த தீர்மானத்தை திரும்ப பெற்றுக் கொண்ட போதிலும் தீர்மானம் கொண்டு வந்த மையும் அதனை விளக்கி தணிகாசலனார் சட்டமேலவையில் ஆற்றிய சிந்தனையைத் தூண்டும் சொற்பொழிவும் பிராமணரல் லாத சமுதாயத்தினருக்கு நீதித்துறையில் இழைக்கப்பட்ட தவறுகளை உடனே சரி செய்ய வேண்டும் என்ற சிந்தனையை சம்பந்தபட்டவர்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ள செய்தது.(அவரது பேச்சில் பெரும் பகுதி இவ்வரலாற்றின் பிற்பகுதி யில் 1,2 ஆக இணைக்கப்பட்டிருக்கிறது)
(நூல்: ஓ. தணிகாசலம் செட்டியார் சமுதாய நீதியின் மகத்தான தலைவர் - மா. இளஞ்செழியன், ச. ரத்னசாமி)


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
அடுத்து >>


1புரியும் வரை
2வரைந்து பழகுவோம்
3சுடோகு
4சுடோகு
5ஜூலை மாதத்தில்.......
6படப்புதிர்
7விளையாட்டு
8சின்னக்கை சித்திரம்
9சிந்தனை செய்!
10லண்டன் ஒலிம்பிக் 2012
11ராகுல் வென்றது எப்படி?
12உங்களுக்குத் தெரியுமா?
13சேதி தெரியுமா?
14Funny Facts of English
15உலகில் புதுசு சூரிய ஆற்றல் விமானம்
16இரு சக்கர மகிழுந்து
17சூழல் காப்போம்
18பெரியன கேட்கின் உலகின் மிக உயர்ந்த தங்கும் விடுதி கிரேக்க ராயல் வில்லா
19சேதி தெரியுமா?
20தலைவர்கள் வாழ்வில்........
21கடலின் வரலாறு
22விளையும் பயிர் வீரத்துடன் நேர்மை
23விந்தைக் கணக்கு
24உலக புகழ் பெற்றவர்கள் பசுமை வெளி இயக்கம் கண்ட வாங்கரி மாத்தாய் 1940 -2011
25ஞாயிற்றைக் கடந்த வெள்ளி....
26தகுதி-திறமை-மோசடி:தகர்த்த மாணவன்
27விளையும் பயிர்


No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...