Tuesday, July 17, 2012

கருநாடகத்தில் ஜாதி அரசியல் ஒழிந்திட தந்தை பெரியார் போன்ற தலைவரும் திராவிடர் கழகம் போன்ற இயக்கமும் தேவை!


கருநாடக பகுத்தறிவாளர் கழக மாநாட்டில் பகுத்தறிவு மழை!


கருநாடக மாநிலம் சரவண பெலுகோலா, ப.க. அமைப்புச் செயலாளர் பேராசிரியர் பூ.சி. இளங்கோவன் உரையாற்றுகிறார்.
எச்.ஆர். சுவாமி, பாபுகோகினேனி (IHEU),இந்திய ப.க. கூட்டமைப்பு தலைவர் நரேந்திர நாயக், பெங்களூரு சுப்பாராவ் உள்ளிட்டோர்.
சரவண பெலு கோலா, ஜூலை 16- கருநாடகத்தில் நிலவும் ஜாதி அரசியல் ஒழிக்கப் பட தந்தை பெரியார் கருநாடக மாநிலத்திற் குத் தேவைப்படுகிறார். திராவிடர் கழகம் போன்ற இயக்கமும் தேவை என்று கருநாடக மாநிலத்தில் நடை பெற்ற பகுத்தறிவாளர் கழக மாநாட்டில் கருத் துத் தெரிவிக்கப்பட் டது.
கருநாடக மாநில பகுத்தறிவாளர் கூட்டமைப்பு சார்பில், இரண்டு நாள் மாநாடு பெங்களூரிலிருந்து 180 கிலோ மீட்டர் தூரத் திலுள்ள ஹாசன் மாவட் டம், சரவண பெலு கோலா நகரில் மே மாதம் 18,19, ஆகிய நாட் களில் நடைபெற்றது. கருநாடகத்திலுள்ள அனைத்து மாவட்டங் களிலிருந்தும் பிரதி நிதிகள் கலந்து கொண் டனர். (சரவணபெலு கோலா நகரில்தான், நூறு அடி உயரமுள்ள சமண முனிவர் கோம தீஸ்வரர் சிலை உள்ளது) நிகழ்ச்சியை, ஹாசன் மாவட்ட விசாரவாதி கள் ஒக்கூட்டு அமைப் பின் தலைவர் வழக் கறிஞர் சீனிவாசநெட் டேகர் ஏற்பாடு செய் திருந்தார். கருநாடகா முழுவதிலிருந்து சுமார் 200 பேர்கள் கலந்து கொண்டனர்.
மே 18ஆம் நாள் காலை 10 மணிக்குத் தொடங் கிய நிகழ்ச்சியை டி.கே. சிவபிரசாத் தலைமை யில், அகில இந்திய பகுத்தறிவாளர்கள் கூட்டமைப்பின் தலை வர் பேராசிரியர் நரேந் திரநாயக் தொடங்கி வைத்தார்.

விசாரவாதிகள் (பகுத்தறிவாளர்கள்) நோக்கில் அம்பேத்கர் என்ற தலைப்பில், திரைப்பட இயக்குநர் டாக்டர் என்.எஸ். சங்கர், பேராசிரியர் மண்டியாசேகர், முதலியோர் உரையாற்றினார். அடுத்த அமர்வில், டாக்டர் என்.ஆர். சுவாமி, சுப்பாராவ் ஆகியோர் இந்தியாவின் தீண்டாமை என்ற தலைப்பில் உரையாற்றினர். ஒவ்வொரு நிகழ்ச்சியும் கேள்வி பதில், முறையில் சிறப்பான ஆய்வரங்கமாக நடைபெற்றது.
இரண்டாம் நாள் நிகழ்ச்சி
19.5.2012 இரண்டாம் நாள் நிகழ்ச்சி காலை 10 மணிக்குத் தொடங்கியது. முதல் அமர்வாக, சோதிடத்தில் விஞ்ஞானத்தை ஒப்பிடுவது எவ்வளவு சரியாகும்? என்ற தலைப்பில் எஸ்.என். நடராஜ் தலைமையில், குடகு மாவட்டம் டாக்டர் ஜி. சோமண்ணா உரையாற்றினார். சோதிடத்தில் விஞ்ஞானத்தைச் சேர்ப்பது மிகவும் தவறு என்று உரையாற்றினார்.
காரணம் பெரியார்
அடுத்து 12 மணிக்குத் தொடங்கிய அமர்வில், விசாரவாதிகள் (பகுத்தறிவாளர்கள்) எதிர் நோக்கும் சவால்கள் மற்றும் நம் நோக்கம் என்ற தலைப்பில் மைசூரு ஜி. துக்காராம் தலைமையில், சிக்மகளூர் பேராசிரியர் டாக்டர் கணேஷ் அவர்கள் உரையாற்றினார். பேராசிரியர் கணேஷ் தமதுரையில், இந்தியாவின் மிகப் பெரிய தடைக் கல் சாதி அமைப்பு முறை என்றும் - திராவிட சளுவளி (போராட்டம்) தமிழ்நாட்டில்தான் வெற்றி பெற்றுள்ளது. இதற்குக் காரணம் பெரியார் ஈ.வெ.ரா. என்றுரைத்தார். கருநாடகத்தில் இன்று சாதி அரசியல் விசுவரூபம் எடுத்துள்ளதற்குக் கார ணம் தந்தை பெரியாரின் கருத்துக்கள் கருநாட காவில் அதிகம் பரவாமையே காரணமாகும் என்றார்.
சாயிபாபாவின் நிலை என்ன?
பெல்லாரி கிரிதர், தமதுரையில், சாதி, மதம், மூடநம்பிக்கை ஒழிய வேண்டுமானால், மதவெறி ஒழிய வேண்டும் என்றார். சாதி சங்கத்தில் உறுப்பினராக இருப்பவர், விசாரவாதியாக (பகுத் தறிவாளராக) ஆக முடியாது என்றார். பகவானின் மறு அவதாரம் என்று பக்தர்களால் கூறப்பட்ட சாய்பாபா நிலை என்னவாயிற்று? அவரும் சாதாரண மனிதர் போல்தானே இறந்தார் இவ்வாறு குறிப்பிட்டார். மைசூரு பல்கலைக் கழக கன்னடத்துறைப் பேராசிரியர் டாக்டர் எம்.எஸ். சேகரா தமதுரையில் குறிப்பிட்டதாவது:
விசாரவாதிகள் (பகுத்தறிவாளர்கள்) முதலில் தன் குடும்பத்தில் வைதீக சடங்குகளை கைவிட வேண்டும். வெளியில் பகுத்தறிவு பேசிக் கொண்டு, வீட்டில் புரோகிதம் செய்தால், விசாரவாதம் (பகுத்தறிவுவாதம்) எவ்வாறு பயன் பெறும் என்று கேள்விக்கணை தொடுத்தார்.
தமிழ்நாட்டில் திராவிடர் கழகம்
தமிழகத்தில் பெரியார் ஈ.வெ.ரா. இயக்கம் திராவிடர் கழகம் வெற்றி பெற்றதுபோல கருநாட கத்தில் ஓரியக்கம் இல்லை. தமிழகத்திலுள்ள பெரியார் இயக்கம் போல் கருநாடகத்தில் அமைப்பு இல்லாததால்தான், இங்கு சாதி அரசியல்  தலை தூக்கியுள்ளது என்று உரையாற்றினார். மைசூரு பல்கலைக்கழக கன்னடத்துறை பேராசி ரியர் சி. லிங்கையா அவர்களும் உரையாற்றினார்.
பல்வேறு அறிஞர்கள் பங்கேற்பு
நிகழ்ச்சியில் ஒவ்வொரு மாவட்ட சார்பிலும் கலந்து கொண்டு உரையாற்றினர். பெங்களூரு மாநகரம் சார்பில், சுப்பாராவ், தார்வாட் சிவயோகி, தாவண்கெரே வெங்கடேஷ், சிக்கபல்லாபுரா சிறீராமையா, மண்டியா மகாதேவப்பா, சாம்ராஜ் நகர் லிங்கையா, ஹாசன் வெங்கடேஷ், கோப்பா சுப்ரமண்யா, நாகமங்கலா நரசிம்மபிரசாத், பெல் லாரி ராதாகிருஷ்ணா முதலியோர் உரையாற்றினர்.
நிகழ்ச்சிகள் அனைத்தும் கன்னடத்தில் மட்டுமே நடைபெற்றன. மேடையில், தந்தை பெரியார், டாக்டர் கோவூர், பேராசிரியர் பிரேமானந்தா, டாக்டர் அம்பேத்கர், முன்னாள் பெங்களூரு பல்கலைக் கழகத் துணைவேந்தர் டாக்டர் எச். நரசிம்மையா, கன்னட பேராசிரியர் குவெம்பு ஆகியோரின் படங்கள் வைக்கப் பெற்றிருந்தன.
பேராசிரியர் பூ.சி. இளங்கோவன்
நிகழ்ச்சியில் பகுத்தறிவாளர் கழக அமைப்புச் செயலாளர் பேராசிரியர் பூ.சி. இளங்கோவன், நிகழ்ச்சி அமைப்பாளர் வேண்டுகோளை ஏற்று தந்தை பெரியார் குறித்து 45 நிமிடங்கள் கன்ன டத்தில் உரையாற்றினார் அவர் தமதுரையில்,
மேல்நாட்டு சிந்தனையாளர்கள் எல்லாம், நம் நாட்டு லயன்ஸ் கிளப் ரோட்டரி கிளப் போல அரங்கத்தினுள் மட்டும் சிந்தனைக் கருத்துக்கள், பகுத்தறிவுக் கருத்துகளை விவாதித்தனர். ஆனால், தந்தை பெரியார் அக்கருத்துக்களை வீதிக்கு எடுத்துவந்து, பொதுக் கூட்ட மேடையில் முழங்கி அனைவருக்கும் சொந்தமாக்கினார். தந்தை பெரியார் மேல் நாட்டுச் சிந்தனையாளர்களின் நூல்களைப் படித்துவிட்டுப் பேசவில்லை. தானே சிந்தித்து தனக்கு சரி எனப்பட்டதை யாருக்கும் பயப்படாமல் கூறினார். ஏனெனில், தேர்தலைப் பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாதவர் பெரியார். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும், யாராலும் செய்ய முடி யாத செயலாக, 1971ஆம் ஆண்டு சேலம் மாநாட்டு ஊர்வலத்தில் இராமன் உருவம் செருப்பால் அடிக்கப்பட்டது. காரணம் தந்தை பெரியாரின் உழைப்பு பலன் அளித்தது. அந்த நேரத்தில் தமிழ்நாடு சட்டசபை தேர்தல் நடைபெற இருந்தது. தந்தை பெரியாரால் ஆதரிக்கப்பட்ட தி.மு.க. ஆட்சி தோற்றுவிடுமோ? என்ற பயம், சேலம் நிகழ்ச்சியால் வந்தது. அத்தேர்தலில், தி.மு.க. காங்கிரசோடு தேர்தல் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியை வைத்து தி.மு.க.வைத் தோற்கடிக்க பார்ப்பனர்கள் ராஜாஜி தலைமையில் சேர்ந்து முயன்றனர். பார்ப்பன ஏடுகள் இச்செயலை வைத்து தி.மு.க.வை ஒழிக்கத் திட்டமிட்டன.
லூதியானாவில் தேர்தல் பிரச்சாரத்திலிருந்த, அன்றைய பிரதமரும், காங்கிரஸ் தலைவருமான இந்திரா காந்தியிடம், செய்தியாளர்கள், தமிழ் நாட்டில் இராமனை செருப்பால் அடித்த பெரியார் ஆதரிக்கும் தி.மு.க.வுடன் கூட்டணிவைத்துள்ளீர் களே? என்று கேட்டனர். இந்திரா காந்தி அவர்கள் பெரியார் ராமசாமி இன்றைக்கு நேற்றல்ல; என் தாத்தா காலத்திலிருந்தே அதை செய்கிறார் என்று பதிலளித்தார். அத்தேர்தலில் தி.மு.க. மிக மிக அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது. அதுதான் பெரியாரின் வெற்றியாகும். தந்தை பெரியாரின் எளிமை  - தனிப்பட்ட வாழ்க்கை நிகழ்ச்சிகளைப் பற்றிப் பேசக் கேட்டுக் கொண்டனர்.
தந்தை பெரியார் வெளியூர் சுற்றுப் பயணம் செல்லுமிடங்களில் பெரும்பாலும் கழகத் தோழர் கள் இல்லத்தில்தான் தங்குவார்; உணவு உண்பார். அந்த உணவுகள் நன்றாக இல்லாதிருந்தாலும், மிக நன்றாக இருந்தது என்று கூறுவார், ஏனெனில், கழகத் தோழர்கள் மனம் புண்படக் கூடாது என்ப தற்காகவே இவ்வாறு கூறுவார். அக்காலத்தில் பெரியார் அவர்கள் ரயிலில் பயணம் செய்யும் காலங்களில், மூன்றாம் வகுப்பில்தான் செல்வார். பெரியாரிடம் சிலர், தாங்கள் ஏன் மூன்றாம் வகுப்பில் வருகிறீர்கள்; தாங்கள் முதல் வகுப்பில் வரலாமே என்று கேட்டனர். அதற்கு பெரியார் ரயிலில்  நான்காம் வகுப்பு இல்லாததால் மூன்றாம் வகுப்பில் வருகிறேன் என்று கூறினார். அந்த அளவு சிக்கனமானவர் பெரியார் அவர்கள்.
பிள்ளையார் உடைப்புப் போராட்டம்
பிள்ளையார் உடைப்பு போராட்டம் நடத் தினார். அதற்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பெரியார், அவர்களுக்கு பதிலுரையாக பின் வருமாறு கூறினார்.
என் சொந்த செலவில், பிள்ளையார் வாங்கி, அப்பொம்மையை உடைப்பேன் என்றார். அந்த அளவு அறிவு நாணயம் உடைய தலைவர் பெரியார். தன்னைக் காண சிறுவர்கள் வந்தாலும், அவர்களை வாங்க உட்காருங்கள் என மரியாதை கொடுத்து உபசரிக்கும் பண்பு உடையவர்   என்று  தமதுரையில் குறிப்பிட்டார். இதுபோன்ற கருத்துக்கள் தமிழே தெரியாத, கன்னட விசாரவாதிகளுக்கு (பகுத்தறி வாதிகளுக்கு) புதிய செய்திகளாக இருந்தன.
நிகழ்ச்சித் தொகுப்பு:
பேராசிரியர் பூ.சி. இளங்கோவன்
அமைப்புச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...