Friday, July 27, 2012

டெசோவும் பார்ப்பனர்களும்


தனியீழம் தேவைதான் என்று துக்ளக்-சோ போன்ற பார்ப்பனர்கள் கருதுவார்களேயானால் டெசோவை ஆதரிக்க வேண்டும் - வரவேற்று எழுதி யிருக்க வேண்டும். டெசோ மாநாட்டில் தனி ஈழத் தீர்மானம் கொண்டு வரப்பட வில்லையே என்று ஆதங்கப்படக் கொஞ்சம் யோக்கியதையும் இருக்கலாம்.
தனி ஈழம் கூடாது என்பதுதான் இந்தக் கூட்டத் தினரின் கருத்து  என்றால் இந்தக் கூட்டம் டெசோ அமைப்பை எதிர்த்து எழுதலாம். டெசோ மாநாட்டில் தனி ஈழத் தீர்மானம் கொண்டுவரப்படாதது சற்று ஆறுதல் அளிக்கிறது என்று எழுதுகோல் பிடிக்கலாம்.
ஆனால் தனி ஈழம் என்று சொன்னாலும் எதிர்ப்பது, தனி ஈழத் தீர்மானம் இல்லை என்று சொன்னாலும் எதிர்ப்பது என்றால் இதற்குப் பெயர் என்ன?
கலைஞர் அவர்கள் கொண்டிருக்கும் பார்ப்பன எதிர்ப்புணர்வு என்ற கருத்தை அவர்களால் ஜீர ணிக்க முடியாத காரணத்தால்தான், கலைஞர் அவர்கள் எதைச் சொன்னாலும் எதிர்ப்பது, கிண்டலடிப்பது, ஆத்திரம் தீர விமர்சிப்பது என்பதைப் பிழைப்பாகக் கொண்டிருக்கிறார்கள்.
கலைஞர் அவர்கள் தேவைப்படும்போதெல்லாம் பார்ப்பனர்களை விமர்சிக்கிறார் அல்லவா, அந்தக் கோபம்தான் அவர்களுக்கு!
இதனைப் புரிந்து கொள்ளாத பார்ப்பனர் அல்லாத நம் தமிழர்கள் கூட பார்ப்பனர்களுடன் சேர்ந்து சேற்றை வாரி இறைப்பதுதான் வருந்தத்தக்கது.
தமிழ் செம்மொழி ஆனால் பிரியாணிப் பொட்டலம் வருமா என்று கேட்கிறார்கள். வணிக விளம்பரப் பலகைகள் தமிழில் எழுதப்படவேண்டும் என்றால் அதனை மொழி நக்சலிசம் என்று முத்திரை குத்து கிறார்கள்.
பெங்களூரில் திருவள்ளுவர் சிலை திறக்கப் பட்டது பற்றிக் கேட்டால், யாரும் கல்லால் அடிக்காமல் இருக்கிறார்களே அதுவரை சந்தோஷம் என் கிறார்கள்.
தை முதல் நாள்தான் புத்தாண்டுத் தொடக்கம் என்றால் கிடந்தது கிடக்கட்டும், கிழவனைத் தூக்கி மணையில் வை என்கிறார்கள்.
தனி ஈழம் என்றாலும் அதே கருத்துதான். தங்களுக்கென்று நாடு இல்லாதவர்கள் பார்ப் பனர்கள். அதனால் தமிழர்களுக்கென்று ஒரு தனி நாடு கிடைப்பது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாத அளவிற்கு வயிற்றெரிச்சலுக்கு ஆளாகிறார்கள். இது போன்ற விடயங்களில் பார்ப்பனர்கள் நியாய அநியாயங்களைப் பார்ப்பதில்லை. கண்மூடித் தனமாக தமிழ், தமிழர், தமிழ்நாடு எதிர்ப்பு என்பதை நெஞ்சில் தேக்கி வைத்துக் கொண்டு செயல் படுகிறார்கள். சேது சமுத்திரத் திட்டம் என்றாலும் அப்படித்தான்!
தனி ஈழம் பற்றி கலைஞர் சொன்னால் சீறி எழும் இந்தப் பூணூல்கள் தனி ஈழம் பற்றி செல்வி ஜெயலலிதா பேசினால் அந்த இடத்தில் எப்படி யெல்லாம் தடுமாறுகிறார்கள் என்பதற்கு இதோ ஓர் எடுத்துக்காட்டு.
கேள்வி: போர் என்றால் அப்பாவி மக்களும் பலியாகத்தான் செய்வார்கள், அதைத் தவிர்க்க முடியாது என்று அண்மையில் ஒரு பேட்டியில் கூறிய ஜெயலலிதா, இப்போது திடீரென்று தனது கருத்தை மாற்றிக் கொண்டு இலங்கையில் நடைபெறும் போரை நிறுத்தத் தவறிய மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து உண்ணாவிரதம் இருந்தது பற்றி என்ன சொல்லப் போகிறீர்கள்?
பதில்: போர் நடந்தால் அப்பாவிகள் பலியாகத்தான் செய்வார்கள்; போர் நிறுத்தப்பட வேண்டும் என்று கூறுவதில் ஒன்றைத் தொடர்ந்து அதை ஒட்டி மற்றொன்று வருகிறது. அவர் ஏற்கெனவே போர் நிறுத்தம் பற்றிச் சொல்லியும் இருக்கிறார். ஆகையால் இதில் வியப்பதற்கு எதுவுமில்லை.
(துக்ளக் 25-3-2009)
ஏதாவது புரிகிறதா? என்ன சொல்ல வருகிறார் இந்த மே(ல்)தாவி? ஏன் இப்படிக் குழப்புகிறார்? தத்தளிக்கிறார்? வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்கிற முறையில் ஏன் பதில் சொல்ல முடியவில்லை?  வெண்டைக்காயை விளக்கெண்ணெயில் குழைத்து எழுதுவானேன்? இதற்குப் பெயர்தான் இனப்பாசம் என்பது.
ஒரே பிரச்சினையில் கலைஞர் என்றால் எழுதுகிற பதிலுக்கும், ஜெயலலிதா என்றால் எழுதுகிற பதிலுக்கும் இடையில் ஏன் இந்தத் தடுமாற்றம்?
பொதுமக்கள் புரிந்து கொள்வது ஒரு புறம் இருக்கட்டும்.  தமிழர் தேசியம் என்று கூறிக் கொள்ளும் தலைவர்கள்  முதலில் புரிந்து கொள் ளட்டும்!






No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...