Sunday, July 8, 2012

இவன்தான் விஷ்ணு


மகாவிஷ்ணு என்று அழைக்கப்படும் கடவுள் பற்றி சிந்திப்போமானால், இவன் (விஷ்ணு) மனித சமுதாயத்தில் சிறிது நாகரிகம் ஏற்பட்ட பிறகு கற்பித்துக் கொண்ட கடவுளாகும். அதிலும் பாரதகால விஷ்ணுவுக்கும், இராமாயண கால விஷ்ணுவுக்கும் அதிக பேதமுண்டு. அதாவது பாரதகாலம் இராமாயணக் காலத்தைவிட முந்திய காலமாகும். பாரத காலத்தில் கற்பு என்பது பழக்கத்தில் முக்கியத்துவம் பெற்று இருக்கவில்லை.
இந்த விஷ்ணுவின் உற்பத்திக்கு ஒரு குறிப்பிட்ட தன்மையோ, காலமோ கண்டுபிடிக்க முடியவில்லை. என்றாலும், நடை, உடை, பாவனைகளில் சிறிது நாகரி கம்  காணப்படுகின்றது. விஷ்ணு என் னும் கடவுள் நகரத்திற்குள் நகர வாழ் வோடு ஆடம்பரமான தன்மையோடு கற்பிக்கப்பட்டிருக்கிறதுடன், சிவன் கற்பிதம்போல அவ்வளவு முட்டாள்தனம் கற்பிக்காமல் விஷ்ணு சிறிது அறிவாளியாகவும், தந்திரசாலியாகவும் கற்பிக்கப்பட்டிருக்கிறது.
சிவனை எடுத்துக் கொண்டால் அவன் பிள்ளைகள் கணபதி, கந்தன் என்பவைபோல், விஷ்ணுவை எடுத்துக் கொண்டால் அவனது அவதாரங்களைத் தான் எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த அவதாரங்கள் ஒழுங்காக கற்பிக்கப்பட்ட தாகச் சொல்ல முடியாது. அதாவது அவதாரம் பத்து எடுத்ததாகச் சொல்லி ஒன்பது அவதாரங்கள்தான் கற்பிக்கப்பட் டிருக்கின்றன. அந்த ஒன்பதும் ஆரிய - திராவிடப் போராட்டங்களையே கருத்தில் கொண்டு கற்பிக்கப்பட்டிருக்கின்றன.
என்றாலும், அவற்றில் இரண்டு அவ தாரங்களைத்தான் முக்கியப்படுத்தி முக்கியமான கடவுளாகவும் ஆக்கப்பட் டிருக்கின்றன. அதாவது, சிவன், மூலக்கடவுளாகவும் அவன் பிள்ளைகள் கணபதி கந்தன் முக்கிய கடவுள்களாகவும், நடராஜன், சோமசுந்தரம், அண்ணாமலை, ராமனாதன் முதலியவை உபகடவுள்களா கவும் கற்பித்துக் கொண்டனர்.
அதுபோலவே, வைணவர்களும் விஷ்ணு என்பதை மூலக் கடவுளாகவும், கிருஷ்ணன், இராமன் என்பதை - அவ தாரங்களில் இரண்டை மாத்திரம் அதா வது கிருஷ்ணன், ராமன் என்பவற்றை முக்கிய கடவுள்களாகவும், ஸ்ரீரெங்கநாதர், வெங்கடாஜலபதி, வரதராஜன் முதலிய வற்றை உபகடவுள்களாகவும் கற்பித்துக் கொண்டார்கள். இவையெல்லாம் நல்ல நாகரிகம் ஏற்பட்ட காலத்தில் உண்டாக்கிச் சொல்லப்பட்டவை என்றாலும் இவற்றில் கூறப்படும் கதைகள் மிகமிகக் காட்டு மிராண்டித்தனமான முட்டாள்தனம் கொண்டவையே.
பிரம்மா
மூன்றாவதான பிரம்மா என்னும் கடவுள் பயனற்ற - பிரபலமற்ற கற்பனைக் கடவுளேயாகும். அதற்கு எந்தவித முக்கியத்துவமும் கிடையாது.
பிரம்மாவை சிவன் கற்பித்தான், பிரம்மாவை விஷ்ணு கற்பித்தான், சிவன் விஷ்ணுவை, பிரம்மாவைப் பிறப்பித்தான் என்பது போன்ற முழுமுட்டாள்தனமான கட்டுக்கதைகள் ஏராளம் உண்டு. இவர் களது மனைவிமார்கள் பற்றி அசிங்க ஆபாசக் கதைகள் ஏராளம் உண்டு.
இவை தவிர, சிறு தெய்வங்கள் என் னும் பேரால் கற்பிக்கப்பட்ட கடவுள்கள் ஏராளம் உண்டு.
இந்தக் கடவுளால் என்ன பயன் என்று பார்த்தால் அறிவாளிகளுக்கு ஒரு விஷயம்தான் தோன்றும். அதாவது உலகில் கீழ்த்தரமான காட்டுமிராண்டி மக்களும், அயோக்கியர்களும் ஏராள மாய் இருக்கிறார்கள் என்று மற்றநாட்டு மக்கள் தாராளமாகப் பேசிக் கொள்ளக் கூடிய தன்மை ஏற்படத்தான் பயன்படும்.
(7.9.1973 விடுதலை நாளிதழில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய தலையங்கம்)


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...