Saturday, July 21, 2012

பெருந்தலைவர் காமராஜர்! வெளிவராத தகவல்கள் (2)


நீங்க சொல்றதப் பாத்தா ராமன், கிருஷ்ணனையெல்லாம் கடவுளாக்கிட் டானே.. அதை ஏத்துக்கிறீங்க போலி ருக்கே? என்று வினா தொடுத்தேன்.
தலைவர் குலுங்கக் குலுங்கச் சிரித் தார். டேய் கிறுக்கா நான் சொல்றது ஒனக்கு விளங்கலியான்னேன்? ராமன், கிருஷ்ணன்கிறது கற்பனைக் கதா பாத்திரம்னேன். அதையெல்லாம் நம்மாளு கடவுளாக்கிட்டான்னேன்! இன்னிக்கு நம்ம சினிமாவுல வர்ற கதாநாயகனுக்குக் கட்-அவுட் வைக்கிறானில்லையா. அது மாதிரி அந்தக் காலத்துல கதாநாயகன் மாதிரி வருணிக்கப்பட்ட ராமனுக்கும், கிருஷ்ணனுக்கும் கோயில் கட்டிட்டான். அந்தப் புத்தகங்கள்ல சொல்லப்பட்டி ருக்கிற விஷயங்கள எடுத்துக்கணும். ஆசாமிய விட்டுபுடணும். காலப்போக்குல என்னாச்சுன்னா.. லட்சக்கணக்கான மக்கள் ராமனை, கிருஷ்ணனைக் கும்பிட ஆரம்பிச்சிட்டான்னு தெரிஞ்சதும், அவுங்களை வச்சி கட்சி கட்ட ஆரம்பிச் சிட்டான் அரசியல்வாதி. அவனுக்குத் தெரியும் ராமன் ஆண்டவன் இல்லேன்னு. ஆனா, அதை வச்சிப் பொழப்பு நடத்தப் பாக்குறானுங்க களவாணிப்பசங்க. புராணங்கள்லே சொல்லப்பட்டிருக்கிற கதாபாத்திரங்கள வச்சித்தான் நம்ம ஜனங்கள அடிமையா ஆக்கி வச்சிருக் கான். நரகாசுரன் கதையை வச்சி தீபாவளி கொண்டாடுறான். நவராத்திரி கதையைச் சொல்லி சரஸ்வதி பூஜை பண்றான். விக்னேஸ்வரனைச் சொல்லி விநாயகருக்குக் கொழுக்கட்டை பண்றான். இது மாதிரி ஏற்பாடுகளை செஞ்சி ஏழை ஜனங்களையும், பாமர ஜனங்களையும் தன்னோட மதத்தின் பிடிக்குள்ளேயே வச்சிப் பொழப்பு நடத் தறான். நான் தீபாவளி கொண்டாடுனது மில்ல, எண்ணெய் தேச்சிக் குளிச்சது மில்ல, புதுசு கட்டுனதுமில்ல.. பொங்கல் மட்டும்தான் நம்ம பண்டிகைன்னேன் நம்ம சமூகம் விவசாய சமூகம், அது நம்ம கலாச்சாரத்தோட ஒட்டுன விழான் னேன் என்று விளக்கினார்.
மதம் என்பதே மனிதனுக்கு அபின் அப்படிங்கிற கருத்து உங்களுக்கும் உடன் பாடுதான் என்பது போலத்தோணுதே? என்று ஒரு கேள்வியைப் போட்டேன்.
தலைவர், நான் தீமிதி, பால் காவடி, அப்படீன்னு போனதில்ல. மனிதனைச் சிந்திக்க வைக்காத எந்த விஷயமும் சமுதாயத்துக்குத் தேவையில்லல. பெத்த தாய்க்குச் சோறு போடாதவன் மதுரை மீனாட்சிக்குத் தங்கத் தாலி வச்சிப் படைக்கலாமா? ஏழை வீட்டுப் பெண் ணுக்கு ஒரு தோடு, மூக்குத்திக்குக்கூட வழியில்ல. இவன் லட்சக்கணக்கான ரூபாயில வைர ஒட்டியாணம் செஞ்சி காளியாத்தா இடுப்புக்குக் கட்டி விட றான். கறுப்புப் பணம் வச்சிருக்கிறவன் திருப்பதி உண்டியல்ல கொண்டு போய்க் கொட்றான். அந்தக் காசில ரோடு போட்டுக் கொடுக்கலாம். ரெண்டு பள்ளிக்கூடம் கட்டிக் கொடுக்கலாமில் லையா? அதையெல்லாம் செய்யமாட் டான். சாமிக்குத்தம் வந்திடும்னு பயந்துகிட்டு செய்வான். மதம் மனிதனை பயமுறுத்தி வைக்குதே தவிர, தன்னம் பிக்கையை வளர்த்திருக்கா? படிச்சவனே அப்படித்தான் இருக்கான்னேன் என் றார்.
கோயில் பிரார்த்தனை நேர்த்திக் கடன் கழிக்கிறதுன்னு ஏதாவது நீங்க செஞ்ச அனுபவமுண்டா? அதிலேருந்து எப்போ விலகுனீங்க? இது நான்.
சின்னப் பையனா இருந்தப் போ விருது நகர்லே பத்ரகாளியம்மன் கோயில் திருவிழா நடக் கும். அந்தக் கோயில் சிலைக்கு ஒரு நாடாரே பூஜை செய்வார். அதிலே நான் கலந்துகிட்டி ருக்கேன். 1930-க்கு முன்னாலே சஞ்சீவரெட் டியோடு திருப்பதி மலைக் குப் போனேன். அவர் மொட்டை போட்டு கிட்டார். என்னையும் போட்டுக்கச் சொன் னார். நானும் போட்டு கிட்டேன். அப்பொறம் யோசிச்சுப் பாத்தேன். இதெல்லாம் வேலையத்த வேலைன்னு தோணிச்சு. போயும்... போயும்.. கடவுள், தலை முடியத்தானா கேக்குறாரு. எல்லாம் பார்பர் ஷாப்காரன் செட்-அப்  அப்புடீன்னு சிந்திச்சேன். விட்டுட்டேன். ஆனா, சஞ்சீவ ரெட்டி அதை விடலை. அடிக்கடி மொட்டை போடுவார். தலையில இருக்கிற முடியை எல்லாரும் கொடுப்பான். ஆண்டவனுக்காகத் தலையையே கேட்டா கொடுப்பானா? என்று கேட்டுவிட்டு விழுந்து, விழுந்து சிரித்தார்.
அப்படியானா மனிதர்களுக்கு வழிபாடு, பிரார்த்தனை முக்கியம்னு சொல்றாங்களே அதப்பத்தி? என்று கேட்டேன்.
அடுத்த மனுஷன் நல்லாருக்கணும் கிறதுதான் வழிபாடு. ஏழைகளுக்கு நம்மாலான உதவிகளைச் செய்யணும் கிறதுதான் பிரார்த்தனை. இதுல நாம சரியா இருந்தா தெய்வம்னு ஒண்ணு இருந்தா அது நம்ம வாழ்த்தும்னேன்.
காமராஜர் என்கிற அந்த மனிதா பிமானி என் மனத்தில் அந்த நிமிடமே சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து விடுகிறார். சட்டென்று காரை நிறுத்து கிறார். வழியில் காலில் செருப்போ, மேலுக்குச் சட்டையோ இல்லாமல் நடந்து போன சிறுவர்களைப் பார்த்து, ஏன் பள்ளிக்கூடம் போகலியா? என்று கேட்கிறார்...
இவ்வளவு நேரம், தான் கேட்ட கேள்விகளுக்கு சிறுவர்களிடம் அன்புடன் விசாரித்த காமராஜரின் செயலே ஒரு விளக்கமாக இருந்தது என்கிறார் அமரராகிவிட்ட பெ. எத்திராஜ் தனது கட்டுரை ஒன்றில்.
படிக்காத மேதை காமராஜர் எத்தனை தெளிவாக இருந்திருக்கிறார்? அவர் நமக்களித்த கல்வியின் துணை யோடு நாமும் தெளிவு பெற வேண்டும் அல்லவா?
(நிறைவு)
- சி.என். இராமகிருஷ்ணன்
நன்றி: நக்கீரன் 2012 ஜூலை 11-13


கோயில் குருக்களிடம் கேட்ட கேள்வி!


தஞ்சாவூர் அருகே ஒரு கிராமத்தின் பாழடைந்த கோயிலைப் பார்த்தார் காமராஜர். அந்தக் கோயில் பழம் பெருமை வாய்ந்தது. ஆனாலும், சிதிலமடைந்து கிடந்தது. சுற்றுப்புற மதில்கள் உடைந்து பிரகாரம் திறந்து கிடந்தது. அங்கங்கே ஆடு, மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. கோயில் கோபுரத்திலெல்லாம் மரம், செடி, கொடிகள் வளர்ந்து கிடந்தன.
கோயில் குருக்கள் எப்போதாவது வந்து பூஜை செய்து மணியடிப்பார். சற்றும் எதிர்பாராமல் அந்தக் கோயிலுக்குள்ளே போய் விட்டார் காமராஜர். கோயில் வாசலில் இருந்த கல்வெட்டுக்களையெல்லாம் பார்த் தார். புதராக மண்டிக்கிடந்த சாசனங்களையெல்லாம் துடைத்துவிட்டுப் பார்த்தார். பலிபீடம், கொடிமரம், நந்தி இவைகளிடமெல்லாம் போய் நின்று உற்றுக் கவனித்தார். அவரது ஒவ்வொரு செய்கையும் உடன் சென்ற கட்சிக்காரர்களுக்கு வியப்பாயிருந்தது.
கோயிலுக்கு வந்து உள்ளே சாமி கும்பிடப் போகாமல் எதை எதையோ பார்த்துக் கொண்டி ருக்கிறாரே என்று மற்றவர்கள் பேசிக் கொண்டனர். ஆனால், அவரைப்பற்றி அறிந்தவர்களுக்கு நன்றாகத் தெரியும். கோயில்களில் கொடுக்கும் பிரசாதங்களை வாங்கிக் கொள்வார். விபூதி பூசி விட்டால் மறுக்கமாட்டார். பரிவட்டமும் கட்டிக் கொள்வார். தீபாராதனையைத் தொட்டுக் கொள்வார். கோயிலை விட்டு வெளியில் வந்த மறு நிமிடமே பழம், தேங்காய் மூடி, மாலைகளை யார் பக்கத்திலிருக்கிறார்களோ அவர்களிடம் கொடுத்து விடுவார். விபூதி, குங்கு மத்தை வீட்டுக்கு எடுத்துப் போக மாட்டார். பையில் பத்திரப்படுத்தவும் மாட்டார். அதற்குப் பெரிய முக்கியத்துவமும் கொடுக்க மாட்டார். கேட்டால், கோயில்ல செய்ற மரியாதையை வாங்கிக்கணும். அதுதான் மனுஷ நாகரிகம். குருக்கள், அறங்காவலர், ஊர் ஜனங்க மனசு புண்புடக் கூடாதில்லியா, அதுக்கு மேல அதுல ஒண்ணுமில்லே என்பார். காமராஜர் இந்தக் கோயிலைச் சுற்றிப் பார்த்துக் கொண்டி ருக்கையிலேயே அந்தக் கோயிலின் குருக்களும், அறங்காவலரும் வந்துவிட்டனர். பிரகாரத்தைச் சுற்றிவந்த காமராஜர் குருக்களைப் பார்த்து, இந்தக் கோயிலைக் கட்டி எவ்வளவு காலமாச்சு? என்றார். குருக்களும் நிர்வாகிகளும் பதில் சொல்ல முடியாமல் விழித்தனர். ஏனய்யா குருக்கள், நீங்க எவ்வளவு காலமா இந்தக் கோயிலுக்கு மணியடிச்சிகிட்டு இருக்கீங்க. இந்தக் கோயில பத்தின தல வரலாறே உங்களுக்குத் தெரியாதா? எந்த வருஷத்து வண்டி? எத்தனை கிலோ மீட்டருக்கு எவ்வளவு பெட்ரோல் ஆகும்னு தெரியாம. ஒரு டிரைவர் அந்தக் காரை ஒட்டலாமான்னேன்? என்று காமராசர் ஆரம்பித்ததும் குருக்கள் உள்பட எல்லோரும் ஆடிப் போனார்கள்.
அவர் மேலும் தொடர்ந்தார்... இந்தக் கோயிலக் கட்டி எண்ணூத்து எழுபது வருஷத்துக்கு மேலாகுது. சோழமாதேவி தானமா கொடுத்த இறையிலி நிலங்கள்தான் இந்தக் கோயில சுத்தி இருக்குது. இந்த ஊரும், இந்த தாலுகாவுமே இந்தக் கோயில் சொத்துதான். அதிலேருந்து வர்ற வருமானத்துலதான் சாமிக்குப் பூஜை, புனஸ்காரமெல்லாம் பண்ணணும். குத்தகைதாரர்கள் அளக்கிற பகுதி நெல்லை வாங்கித் தான் சாமியாடிகளுக்கும். தேவரடியார்களுக்கும், பூக்குடலைத் தூக்குறவங்களுக்கும் சம்பளம் போடணும். சாமி நெலத்த விவசாயம் பண்ணிச் சாப்பிட்டுக்கிட்டிருக்கிற ஒருத்தனும் ஒருபிடி நெல்லைக்கூட கோயிலுக்கு அளக்கல போலிருக்கு. அதனாலதான் சாமி இருட்டில கிடக்குன்னேன்... என்று காமராஜர் பேசப்பேச அத்தனை பேரும் அதிர்ந்து போய் நின்றனர். அந்தக் கோயில் சொத்தைச் சாப் பிட்டு ஏப்பம் விட்டுக் கொண்டிருந்த பெருச்சாளிகள் பலரும் அங்கே நின்று கொண்டிருந்தனர். தங்கள் அடிமடியிலேயே கை வைக்கிறாரே என்று அந்தக் குத்தகைதாரர்கள் நடுங்கிப் போயிருக்கக் கூடும்.
இதற்குள் குருக்கள்மார் சிலர் வந்து, பிரசாதம், பொங்கல், வடையெல்லாம் தயாரா இருக்கு என்று ஆரம்பித்தனர்.
சாமியை இருட்டுல போட்டுட்டு ஆசாமியெல் லாம் சாப்பிட்டுகிட்டிருக்கீங்க. பொங்கல், வடையை யெல்லாம் ஏழை ஜனங்களுக்கு சேரிப் பிள்ளை களுக்குக் கூப்பிட்டுக் கொடுங்க என்று சொல்லி விட்டு, வேகமாக அவர் கோயிலை விட்டு வெளியே வந்துவிட்டார். அறங்காவலர் குழுவோ திகைத்துப் போய் நின்றது.
தமிழக முதலமைச்சராக இருந்த காமராஜரின் கோயில் விசிட் குறித்து தான் நேரில் பார்த்ததைச் சொல்கிறார் பெ. எத்திராஜ்.

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:


No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...