Thursday, June 28, 2012

பிள்ளை விளையாட்டைப் பாரீர்!


மதுரை மீனாட்சிக் கோயிலைக் குண்டு வைத்துத் தகர்க்காமல் இருக்க கடவுளைப் பாதுகாக்கும் நோக்கோடு மெட்டல் டிடெக்டர் மூலம் பக்தர்கள் சோதனை செய்யப்படும் காட்சி.
கோயில்களில் உள்ள கடவுள்களும், சிறைக் கைதிகளும் ஒன்றுதான்; கைதிகளைப் போல பூட்டித்தான் வைத்திருக்கிறார்கள். மணி அடித்து சிறையில் கைதிகளுக்கு உணவு கொடுப்பது போல கோயிலிலும் மணி அடித்துதான் ஆறு காலப் பூஜை நடக்கிறது.
கருவறைக்குள் அடித்து வைக்கப்பட்டுள்ள சாமி சிலைகள் வெறும் பொம்மைகள் என்பது நம்மைவிட அர்ச்சகப் பார்ப்பனர்களுக்கு மிக நன்றாகவே தெரியும்.
முக்கியமாக கோயில்களில் உள்ள மூல விக்கிரகங்கள் இப்பொழுது அந்தக் கோயில் களில் கிடையாது. பக்கத்தில் உள்ள பெரிய கோயில் ஒன்றில் அவற்றைப் பாதுகாத்து (ளுயகந னுநயீடிளவை) வைத்துள்ளனர். (இன்சூரன்சும் செய்யப்படுகிறதாம்) மூல விக்கிரகங்களுக்குப் பதில் போலி சிலைகள் (னுரயீடஉயவந) மூலக் கிரகங்களில் வைக்கப்படுகின்றன.
முக்கிய திருவிழாக் காலங்களில் மட்டும் தக்க பாதுகாப்புடன் சம்பந்தப்பட்ட கோயிலுக்குக் கொண்டு வரப்பட்டு, திருவிழா முடிந்தவுடன் மறுபடியும் பாதுகாப்புப் பெட்டகத்துக்குக் கொண்டு செல்லப்படுகிறது. (அய்ம் பொன்னால் ஆனது - திருடப்பட்டால் என்ன செய்வது என்ற பயம்தான்!)
முக்கிய கோயில்களில் உள்ளே நுழையும் போது பக்தர்கள் மெடல்டிடெக்டர் வைத்துச் சோதிக்கப்படுகின்றனர். மோப்ப நாய்கள் சுற்றித் திரிகின்றன. (இவ்வளவையும் மீறி சாமி சிலைகள் திருடப்படுகின்றன என்பது வேறு சேதி)
இன்னொரு தகவல் முக்கியம்; அதுவும் வரலாற்றுத் தகவல்:
சிதம்பரம், சிறீரங்கம், மதுரைக் கோயில்களில் இருந்த மூல விக்கிரகங்கள், முஸ்லீம் அரசர்களின் படையெடுப்பால் கொள்ளையடிக் கப்படும் என்று பயந்து அச்சிலைகளை வேறு இடத்திற்குத் தூக்கிச் சென்றனர் என்பதுதான் அந்தச் சுவையான தகவல்கள் இதோ! 24.4.1648 முதல்  சிதம்பரம் நடராஜன் சிலை வெளியேற்றப் பட்டு முதல் நாற்பது மாதங்கள் குடுமியான் மலை யிலும், பின்னர் மதுரையிலும் இருந்திருக்கிறது. பிஜப்பூர் சுல்தானின் படையெடுப்புக்குப் பயந்து கொண்டே இது நடந்திருக்கிறது. கடைசியில்  இந்த நடராஜனை மராட்டிய மன்னன் சகசிதான் மதுரையிலிருந்து மீண்டும் சிதம்பரத்திற்குக் கொண்டு வந்தான் (ஆதாரம்: தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர், மறு வெளியீடு மணியனின் இதயம் பேசுகிறது)
அதேபோல முகமது பின் துக்ளக் திருவரங்கம் நோக்கிப் படையெடுத்து வருகிறார் என்றவுடன் வைணவப் பார்ப்பனர்களின் வயிற்றில் எல்லாம் புளியைக் கரைக்க ஆரம்பித்தது.
பிள்ளை உலகாசிரியர் என்பவர் ரெங்க நாதனை எடுத்துக் கொண்டு தெற்கு நோக்கிப் போவது என்றும் நாச்சியார் விக்கிரகத்தை இன்னொரு கோஷ்டியினர் வேறு திசையில் எடுத்துக் கொண்டு போவது என்றும் தேசிகர் (வைணவ மதத்தில் பெரிய மகான் என்று போற்றப்படும் வேதாந்த மகா தேசிகன்) ஏற்பாடு செய்துவிட்டார்.
தேசிகரும், சீடர்களும் மேற்கு நோக்கிப் பயணித்து சத்தியமங்கலம் சென்று அங்கே  சில காலம் தங்கினர். இதற்கிடையே இந்தக் கோயில்களும் மூடப்பட்டன. மதுரை மீனாட்சியும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டாள்.
விஜயநகர பிரதாணகோபணா என்பார் படையெடுத்து சமயபுரம், சிறீரங்கம் முதலிய இடங்களைக் கைப்பற்றி மதுரை சுல்தானியர் களையும் முறியடித்து, சிலைகள் மீண்டும் சம்பந்தப்பட்ட கோயில்களில் கொண்டு வந்து குடியேற்றப்பட்டன.
இவை எல்லாம் நம் கைச் சரக்கல்ல - ஈரோட்டாரின் கற்பனையும் அல்ல - விடுதலையின் வேண்டா வெறுப்புச் சேதியும் அல்ல.
ஆன்மீகத்தை அப்படியே காப்பாற்றுவதற் காகவே அவதரித்ததாகக் கூறிக் கொள்ளும் மணியன் அய்யர்வாளின் ஞானபூமி இதழிலும் (ஆகஸ்டு 1983) மற்றும் சவுரி எழுதிய இந்தி யாவின் கலையும் கலாச்சாரமும் எனும் நூலிலும் (பக்கம் 145-146 வானதி பதிப்பகம் வெளியீடு) காணப்படுபவை.
இந்தக் கூத்து ஒருபுறம் இருக்கட்டும்; இந்துக்களில் அழித்தல் கடவுளாகிய - திரிபுரம் எரித்த விரிசடையோனான சிவபெருமானின் கதை என்ன தெரியுமா?
அந்தத் திருக்கைலாயங்கிரி எனும் பூலோக சொர்க்கம் இப்பொழுது யார் கையில் இருக்கிறது தெரியுமா? சீனாவின் ஆக்கிரமிப்புக்குள் பதுங்கிக் கிடக்கிறது!
ஹி... ஹி... இந்தப் பொம்மைகள்தான் கடவுள்களாம் - சர்வசக்தி படைத்தவையாம்.
இவற்றைப் பிரஸ்தாபிக்க ஸ்தலப் புராணங் களாம் திருமஞ்சனங்களாம் - ஆருத்ரா தரிசனமாம் - சிவராத்திரிகளாம் - வைகுந்த ஏகாதசிகளாம் - பிரமோத்வங்களாம் - தேர்த் திருவிழாக்களாம்!
சின்ன பிள்ளைகள் மண் வீடு கட்டி,  சிறு நீர் கழித்து குழம்பு வைத்து விளையாடுகிறார்கள் என்றால் பெரியவர்கள் பெரிய தேர் கட்டி ஊர் வலம் நடத்தி கிச்சு கிச்சு விளையாடுகிறார்கள்.
இதைத்தான் வடலூரார் பிள்ளை விளை யாட்டு என்றாரோ!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...