Thursday, June 28, 2012

கலைஞர் தொலைக்காட்சியில் காலை 8 மணிக்கு கழகத் தலைவரின் கருத்துப் புதையல்!


நமது திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் கடந்த சில நாட் களாகக் கலைஞர் தொலைக்காட்சியில் காலை 8 மணிக்குத் திராவிட இயக்கம் 100 என்னும் தலைப்பில் பல அரிய வரலாற்று நிகழ்ச்சிகள் பற்றிப் பேசி வருகிறார்கள்.
ஏற்கெனவே வாழ்வியல் சிந்தனை கள் என்பதுபற்றி மனித சமுதாயம் சிந்தித்திராத பல அரிய கருத்துக்களை எழுதி வருகிறார். அவற்றை மக்கள் சிந்தித்துப் பார்க்கவும், வாழ்வியல் நடைமுறையில் பல உண்மைகளை அறிந்து, வாழ்ந்து நலம் பெறவும் அய்யா அவர்கள் சில ஆண்டுகளாக எழுதி வருவது அனைத்துப் பிரிவினர்க்கும் வாய்க்கப் பெற்ற சிறந்த கருவூலமாகும்!
அதனைத் தொடர்ந்து கழகத் தலைவர் அவர்கள் இப்பொழுது திராவிட இயக்கம் பற்றிய வரலாற்று உண்மைகளை ஒளிவு மறைவு இல்லாமல் எல்லாத் தரப்பினரும் புரிந்து கொள்ளும்படியாக மிகமிக எளிய பேச்சு நடையில் நேருக்கு நேர் அமர்ந்து, ஓர் ஆசிரியர் பாடம் நடத்துவதுபோலத் தெளிவான முறையில் மேற்கோள் விளக்கங்களுடன் கலைஞர் தொலைக் காட்சியில் நாளும் காலை  8 மணிக்கு உரையாற்றி வருகிறார். அவரது கருத் தாழம் மிக்க உரையை ஆண்களும், பெண்களும், இளைஞர்களும் தவறாமல் கேட்டு  உள்ளத்தில் பதிய வைப்பார்களே யானால் அறிவு வளர்ச்சியும், மான உணர்ச்சியும் உடையவர்களாக அவர்கள் சுயமரியாதை வாழ்வு பெற்று விளங்க வழிவகுக்கும் என்பது உறுதி!
காங்கிரசு இயக்கத்தில் உள்ள பலர் காங்கிரசு இயக்கம் காந்தியடிகளால் தொடங்கப்பட்டது என்று கூறியதை நான் கேட்டிருக்கிறேன். ஆனால் 1800-ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்திலேயே அயல்நாட்டவர் ஒருவரால் காங்கிரஸ் தோற்றுவிக்கப்பட்டது என்ற உண் மையைக் கூறி விளக்கமும் தந்தார் அய்யா அவர்கள். இது போலவே திராவிட அமைப்பும் நீண்ட காலத்திற்கு முன்பே இருந்ததையும் 1910-ஆம் ஆண்டு வாக் கில் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் தோன்றியதற்கான காரணத்தையும் கூறினார். அதன் வளர்ச்சியாக நீதிக் கட்சி வரலாறு, பார்ப்பனரல்லாதார் பெற்ற நலன்கள், சுயமரியாதை இயக்கமாக மாறியதன் பலன், திராவிடர் கழகம் மலர்ந்த பரிணாம வளர்ச்சி ஆகிய வற்றையெல்லாம் அய்யா அவர்கள் நிரல்பட விளக்கி உரையாற்றினார்கள்.
தந்தை பெரியார் அவர்கள் பள்ளியில் படித்த காலத்திலேயே சமுதாயத்தில் நிலவும் வேறுபாடுகளைக் கண்டறியும் வாய்ப்பைப் பெற்றவர் என்ற உண்மையைத் தெளிவுபடுத்தி விளக்கினார்கள். நாயுடு, முதலியார், நாயக்கர் என்று அக்காலத் தில் புகழப்பட்ட  சமுதாயச் சீர்திருத்தம் கண்டவர்கள் ஆற்றிவந்த உரிமை முழக்கங்களையும், பார்ப்பனர்களால் இழைக்கப்பட்டு வந்த இடையூறுகள் கொடுமைகள் பற்றியும் விரிவாகத் தொலைக்காட்சி மூலம் தெளிவு படுத்தினார்கள். அய்யா அவர்கள் கூறும் செய்திகளுக்கு இந்துப் பத்திரிகை ஆதாரங்களை மிகத் தெளிவாக - பொறுமையாக - சுவையாக விளக்கி உரை யாற்றி வருவது, எதிர்காலத் தமிழர்க்குக் கிடைக்கும் மிகப் பெரிய நன் கொடையாகும்!
இடைச் செருகல் இல்லாத - கற்பனை கலவாத தூய திராவிடர் இயக்க வர லாற்றைத் தமிழர் தலைவர் அய்யா கி.வீரமணி அவர்களைத் தவிர இனி வேறு எவராலே தர முடியும்?
நடந்த நிகழ்ச்சிகள்பற்றிய இடம், காலம், இத்தனையாவது ஆண்டு என் றெல்லாம் அவரது உரை வீச்சில் குறிப் பிடுகிறார். அத்தனையும் நூலாதாரங் களோடு, அவற்றின் ஆசிரியர்களையும் அவ்வப்போது காட்டுகிறார்.
தமிழர் தலைவர் அவர்கள் கொள் கையின் தனி மனிதராய்த் திராவிட இயக்கப் பணியைப் புதுப்பிக்கும் பெருந் தொண்டில் ஈடுபட்டுள்ளார் என்பது இன்று நம்மில் சிலருக்குப் புரியாதிருக் கலாம். ஆனால், அய்யா அவர்கள் இன்று தொடங்கியுள்ள இந்தப் பணி, பார்ப் பனர்கள் வயிற்றில் புளியைக் கரைக்கின்ற செயலாகும் என்பது அவாளுக்கு நன்றாகத் தெரியும்! எனவே அன்று தந்தை பெரியார் அவர்களுக்கு எத்தகைய துன்பங்களையும், தொல்லைகளையும் பார்ப்பனர்கள் கொடுத்தார்களோ, அதுபோன்ற செயலை வெளிப்படையாக இன்று செய்ய முன்வராவிட்டாலும் அவர் களுக்காகத் திறந்திருக்கும் கொல்லைப் புற ஊடக வழிகள் கை கொடுக்கத் தயங்கா.
ஆனால் தந்தை பெரியார் சுயமரி யாதைப் பல்கலைக் கழகத்தில் பயின்ற தமிழர்கள் - இளைஞர்கள் - பெண்கள் ஏராளமாக இன்று வளர்ந்துள்ளனர் என்பதால் கழகத் தலைவர் அய்யா அவர்களின் உரைவீச்சு கலைஞர் தொலைக்காட்சியில் இனி நாளுக்கு நாள் ஒளிவீச்சாக வளர்ந்து திராவிட இயக்கம் புதுப் பொலிவுடன் திகழவுள்ளது என்பதை இனிவரும் இளைஞர் உலகம் மெய்ப் பிக்கும் என்பது உறுதி! உறுதி!! உறுதி!!!
தென்மொழி ஞானபண்டிதன்
(மாநிலத் துணைத் தலைவர்
பெரியார் பகுத்தறிவு இலக்கிய அணி)


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...