Wednesday, June 27, 2012

ஆஷ் கொலை ஆரிய சனாதனத்தை காப்பாற்றவே!


ஜுனியர் விகடன் (27.6.2012) இதழில் திரு எஸ்.இராமகிருஷ்ணனின் எனது இந்தியா கட்டுரை வெளிவந்துள்ளது.        1911 ஆம் ஆண்டு பிரிட்டீஷ் அதிகாரி ஆஷை கொலை செய்த வாஞ்சி அய்யரை வர்ணித்து, இந்தக்கொலை பிரிட்டீஷ் காலனி ஆதிக்கத்துக்கு எதிராக இந் தியர் மனதில் வெகுண்டெழுந்த தார்மீக கோபத்தின் வெளிப்பாடு என்று குறிப் பிட்டுள்ளார் ஆய்வாளர் இராம கிருஷ்ணன்.
இது உண்மையா?   ஆஷை சுட்டுக்கொன்றபோது வாஞ்சி நாதன் தன் சட்டைப்பையில் வைத்திருந்த கடிதத்தில் என்ன எழுதியிருந்தான்? ஆங்கில சத்துருக்கள் நமது தேசத்தைப் பிடுங்கிக் கொண்டு, அழியாத சனாதன தர்மத்தைக் காலால் மிதித்துத் துவம்சம் செய்து வருகிறார்கள்.
ஒவ்வொரு இந்தி யனும் தற்காலத்தில் தேசச் சத்துருவாகிய ஆங்கிலேயனைத் துரத்தி, தர்மத்தையும், சுதந்திரத்தையும் நிலை நாட்ட முயற்சி செய்து வருகிறான். எங்கள் ராமன், சிவாஜி, கிருஷ்ணன், குரு கோவிந்தர், அர்ஜுனன் முதலியவர் இந்து தர்மம் செழிக்க அரசாட்சி செய்து வந்த தேசத்தில், கேவலம் கோமாமிசம் தின்னக் கூடிய ஒரு மிலேச்சனாகிய ஜார்ஜ், பஞ்சமனை (George V) முடி சூட்ட உத்தேசம் செய்து கொண்டு, பெருமுயற்சி நடந்து வருகிறது. அவன் (George) எங்கள் தேசத்தில் காலை வைத்த உடனேயே அவனைக் கொல்லும் பொருட்டு 3000 மதராசிகள் பிரதிக்னை செய்து கொண்டிருக்கிறோம்.
அதைத் தெரிவிக்கும் பொருட்டு அவர்களில் கடை யேனாகிய நான் இன்று இச்செய்கை செய்தேன். இதுதான் இந்துஸ்தானத்தில் ஒவ்வொருவனும் செய்ய வேண்டிய கடமை.
இப்படிக்கு,
வாஞ்சி அய்யர்
R. Vanchi Aiyar of Shencotta..
திரு. ரகுநாதன் தமது பாரதி காலமும் கருத்தும்' (1982) என்ற நூலில் இக்கடிதத் தின் தமிழ் மூல வடிவத்தைக் குறிப் பிட்டுள்ளார். நீதிமன்றத்தில் சாட்சியமாக அளிக்கப்பட்ட தடயங்களின் (நுஒவைள) தமிழ் அச்சுப் பிரதியிலிருந்து இதனை அப்படியே எடுத்து எழுதியதாக ரகு நாதனுடன் நிகழ்த்திய உரையாடலின் போது குறிப்பிட்டதாக பேராசிரியர் ஆ.சிவசுப்ரமணியம் தெளிவாக பதிய வைத்திருக்கிறார்.
பேராசிரியர் சிவசுப்ரமணியம் நூலை மேற்கோள்காட்டி எழுதியிருக்கும் திரு. இராமகிருஷ்ணன், வாஞ்சிநாதன் ஆஷை கொல்வதற்கு முக்கிய காரணம் ஆங்கில சத்துருக்கள் நமது தேசத்தைப் பிடுங்கிக் கொண்டு, அழியாத சனாதன தர்மத்தைக் காலால் மிதித்துத் துவம்சம் செய்வதுதான் என்ற தகவலை வெளிப் படுத்தும் இந்த கடிதத்தை வெளியிட் டிருக்கவேண்டும். அன்றைய கால கட்டத்தில் ஆஷை நவீன இரண்யன் என்று பத்திரிகைகள் எழுதியதாக கட்டுரையாளர் குறிப்பிட்டிருக்கிறார். இரண்யன் யார்?
இரண்யன் அசுரர்களின் தலைவனாக கருதப்பட்டவன். பார்ப்பன குலதர்மத்தை எதிர்த்து சவால்விட்டவன். புராணகால இரண்யனின் கதை புரட்சிக்கவிஞரால் சிறிது மாற்றம் செய்யப்பட்டு இரணியன் அல்லது இணையற்ற வீரன் எனும் பேரில் நாடக வடிவம் பெற்றது.
வர்ணாஸ் ரமத்தை எதிர்த்து சூத்திரர்களின் பாதுகாவலனாய் நவீன இரண்யன் என்று பத்திரிகைகளில் எழுதப்பட்ட ஆஷை சனாதன வெறிபிடித்த வாஞ்சி நாதன் கொலை செய்தது எப்படி காலனி ஆதிக்க எதிர்ப்பாகும்?
ஆஷும் அவரது மனைவியும் பயணிக்கையில் பிரசவ வேதனையால் துடித்துகொண்டிருந்த தாழ்த்தப்பட்ட பெண்ணை தனது வண்டி யில் ஏற்றி அவசரம் கருதி அக்ரஹாரம் வழியாக அழைத்துச்சென்று மருத்துவ மனையில் சேர்த்தார் ஆஷ்.
தாழ்த்தப்பட்ட பெண்ணை அக்ர ஹாரத்தின் வழியாக அழைத்துச்சென்று பார்ப்பன சனாதனதர்மத்தை கெடுத்து விட்டார் ஆஷ்! இதுவே ஆஷ் கொலைக்கு காரணம்  என்று சொல் லப்படுகிற வரலாறு இருக்க புதுச்சேரியில் இயங்கிவந்த வ.வே.சு.அய்யர் முடி வெடுத்து நீலகண்ட பிரம்மச்சாரி திட்டம் தீட்டி வாஞ்சி அய்யர் நடத்திய படுகொலை பார்ப்பன குலதர்மத்தை காப்பதற்கே என்பது நன்றாகப் புரிகிறது.


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
அடுத்து >>


JULY 01-15


No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...