Monday, June 25, 2012

ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து மனிதனைக் கடித்த கதை


இலங்கையில் மசூதிகளும், சர்ச்சுகளும் இடிப்பு ராஜபக்சே அரசின் அட்டூழியம்

சென்னை, ஜூன்.24 இலங்கையில் தமிழர் களுக்கு எதிரான  கொடுமைகள் அதிகரித்துள்ளன. தமிழர்கள் என்ற நிலையில் அவர்கள் கிறித்துவர் களாக இருந்தாலும், முகமதியர்களாக இருந்தாலும் அவர்களை அழிக்க திட்டமிட்டு ராஜபக்சே அரசு செயல்பட்டு வருகிறது. தமிழர்களுக்கு வெளி நாட்டினரின் உதவியோடு கட்டிக் கொடுக்கப்படும் வீடுகளில் சிங்களவர்கள் குடியேற்றப்படுகின்றனர். கோயில்கள் மட்டுமின்றி சர்ச்சுகளும், மசூதிகளும் இடிக்கப்பட்டு, தமிழனின் அடையாளம் முழுவது மாக அழிக்கப்படுகிறது என்று சென்னை மயிலை பேராயர் ஏ.எம். சின்னப்பா தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக, அனைத்து மத, அனைத்துப் பிரிவு தமிழ் மக்கள் மன்றம் என்ற புதிய அமைப்பு சென்னையில் தொடங்கப்பட்டுள் ளது.  இதுகுறித்து, சென்னை மயிலைப் பேராயர் ஏ.எம். சின்னப்பா சென்னையில் நேற்று செய்தியாளர் களிடம் கூறிய தாவது:  இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை கண்டிக்க பல சமயத் தலைவர்கள் அடங்கிய அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. இலங்கையில் போருக்கு பின்னால், தமிழர்களின் பகுதிகளை மறு கட்டமைப்பு செய்வதாகக் கூறிய ராஜபக்சேவின் வாக்குறுதிகள் எதுவும் நிறை வேற்றப்படவில்லை. தேசப் பாதுகாப்பு என்ற பெயரில், தமிழர் பகுதிகளில் அதிகளவு ராணுவ மயமாக்கல் திணிக்கப்பட்டுள்ளது. போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு, வெளிநாட்டினர் அளிக்கும் உதவியோடு கட்டப்படும் வீடுகள் சிங்களர்களுக்கே கையில் கொடுக்கப்படுகிறது. கோவில்கள், கிறித்துவ தேவாலயங்கள் மசூதிகள் தொடர்ந்து தாக்கப்படுகின்றன. கடந்த 8 ஆண்டு களில் 2 ஆயிரத்திற்கும் மேலான இந்துக் கோவில் களும், 300 க்கும் அதிகமான கிறிஸ்தவ தேவாலயங் களும், மசூதிகளும் இடிக்கப்பட் டுள்ளன.  தேவாலயங்கள் தகர்ப்பதோடு கத்தோலிக்க பாதிரி யார்களை கொலை செய்தும் கடத்தியும் சென்று விடுகின்றனர். இலங்கை அரசின் அடக்குமுறைகளை உரிமை மீறல்களை எதிர்த்து ஈழத் தமிழர்கள் தொடர்ந்து போராடிக் கொண்டி ருக்கின்றனர். அவர்களின் போராட்டத்திற்கு வலிமை சேர்க்க வேண்டிய கடமை தமிழகத்தில் வாழும் தமிழர்களாகிய நமக்கு இருக்கிறது. தமிழர்கள் அங்குவாழ இனி வாய்ப்பே இல்லை.
எனவே, அய்க்கிய நாடுகள் சபையும், மத சுதந்திரத்தை பாதுகாப்பதற்காக நிறுவப்பட்ட ஆணையமும், உடனடியாகத் தலையிட்டு, தமிழ் மக்களின் இனப்படுகொலை குறித்தும், திட்ட மிட்ட அழித்தொழிப்பு குறித்தும் ஒரு விசாரணையை மேற் கொள்ள வேண்டும். இதற்கான நடவடிக்கையில் இந்த அமைப்பு தொடர்ந்து ஈடுபடும். இவ்வாறு அவர் கூறினார். சென்னை மயிலைப் பேராயர் ஏ.எம்.சின்னப்பா தலைமையில் இயங்கும் இந்த அமைப்பில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக தலைவர் ஹைதர்அலி, இந்திய தவ்ஹித் ஜமாத் தேசியத் தலைவர் எஸ்.எம்.பக்கர், இந்திய கிறிஸ்துவ மக்கள் கட்சித் தலைவர் எப்.ஏ.நாதன், தேசிய லீக் தலைவர் பஷீர், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாநிலத் தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயில், தமிழக இந்து துறவியர் பேரவை அமைப்பாளர் சுவாமி சதா சிவனந்தா உள்பட 11 இயக்கங்கள் இணைந்து உள்ளன.


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...