Saturday, June 30, 2012

தீண்டாமைச் சுவர்கள்


அண்மைக் காலமாக சில கிராமங்களில் தீண்டாமை என்னும் பாம்பு தலைகாட்டுகிறது. தீண்டாமைச் சுவர் என்னும் தகவலும் வெளி வருகிறது. தேநீர்க் கடைகளில் இரட்டைத் தம்ளர் முறை நடைமுறையில் இருப்பதாகவும், ஊடகங்கள் வெளிப்படுத்திக் கொண்டும் இருக்கின்றன.
இதற்குக் காரணம் என்ன? இவற்றின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது கண்டிப் பாகக் காவல்துறை உளவுப் பிரிவினருக்கு மிகவும் நன்றாகவே தெரிந்திருக்கும்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மற்ற மாநிலங் களைவிட விழிப்புணர்வுப் பிரச்சாரம், பகுத்தறிவுப் பிரச்சாரம் மிக மிக அதிகம் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றே.
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மக்கள் விழிப்புணர்வு பெற்றுள்ளனர்; அதற்குக் காரணம் ஈ.வெ. ராமசாமி  என்பது அமெரிக்கப் பேராசிரியர் களின் கருத்து என்று அமெரிக்கப் பேராசிரியர் ஜான்ரைலி கூறியதை ஆனந்தவிகடன் இதழேகூட வெளிப்படுத்தியதுண்டு.
திராவிடர் கழகம் ஒவ்வொரு நாளும் இந்தத் திசையில் பாடுபட்டுக் கொண்டுதானிருக்கிறது என்பதும் ஊருக்குத் தெரியும்.
இதற்கு மேலும் அந்த அசிங்கமானது (ருபடல ழநயன)  தலை தூக்குவது ஏன் என்பது முக்கியமான அவசியமான கேள்வியாகும்.
தமிழ்நாட்டில் கீரிப்பட்டி, பாப்பாரப்பட்டி, நாட்டார் மங்கலம், கொட்டங்கச்சியேந்தல் முதலிய ஊராட் சிகளில் ஊராட்சித் தேர்தலையே நடத்த முடியா திருந்த கொடுமையை மானமிகு கலைஞர் அவர்கள் கடந்த முறை முதல் அமைச்சராக இருந்தபோது நீக்கி, சம்பந்தப்பட்ட கிராமங்களில் ஊராட்சித் தேர்தல்கள் சுமூகமாக வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டதே!
ஆட்சியர்களாக இருக்கக் கூடியவர்களின் அணுகுமுறையும், அக்கறையும் இதில் மிக முக்கியமானது. சில நாட்களுக்குமுன் ஈரோடு கொடுமுடியையடுத்த நகப்பளையம் என்னும் கிராமத்தில் 100 அடி நீளமும், 4 அடி உயரமும் கொண்ட சுவர் ஒன்று எழுப்பப்பட்டது. வருவாய்த் துறை அதிகாரிகள் தலையிட்டு, சுவர் அகற்றப்பட்டது என்பது நல்ல செய்தியாகும். மதுரை மாவட்டத்திலும் உத்தபுரத்தில் இப்படி நடைபெற்றதுண்டு.
இரு தரப்பாரையும் அழைத்துப் பேசுவது, அமைதிக் குழு (ஞநயஉந ஊடிஅஅவைவநந) போடுவது என்பதெல்லாம் சடங்காச்சாரமாக நடைபெறு வதாகத் தான் பொருள் - அதுதான் யதார்த்தமும் கூட!
அதைவிட இந்த விஷம வேலைகளில் ஈடுபடுபவர்கள் யார்? அமைப்பு எது? என்பதைக் கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, தண்டிக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும்.
சம்பந்தப்பட்ட ஊர்களில் உள்ள இளைஞர்கள், மாணவர்கள் கட்சிகளுக்கும். ஜாதிகளுக்கும் அப்பால்கூடி, சீர்திருத்த முற்போக்கு எண்ணத்தோடு செயல்பட முன் வருவார்களேயானால், இதற்கு உடனடியாகத் தீர்வு கிடைத்து விடும்.
அனைத்துக் கிராமங்களிலும் அரசியல் கட்சிகள் இருக்கத்தான் செய்கின்றன. எந்தக் கட்சியும் தீண்டாமை இருக்க வேண்டும் என்று சொல் லுவதில்லை. (பி.ஜே.பியைத் தவிர).
இந்த நிலையில், தீண்டாமை ஒழிப்பில் நம்பிக் கையுள்ள கட்சிகள் இந்தப் பிரச்சினையில் எப்படி நடந்து கொள்கின்றன என்பது மிகவும் முக்கிய மல்லவா! கொள்கைப் பூர்வமாக அரசியல் கட்சிகள் இயங்கவில்லையா என்ற கேள்வியும் எழுகிறது.
தீண்டாமையை எந்த நிலையில் அனுசரித்தாலும் அது சட்டபடி குற்றம் என்பதுதான் சட்டத்தின் நிலை! இதற்கென்றே காவல்துறையில் தனிப்பிரிவே கூட இயங்குகிறது. ஆனாலும் விளைவு ஒன்றும் குறிப்பிடும்படியாக இல்லை.
திராவிடர் கழகத் தோழர்களுக்கு நமது வேண்டுகோள்: எந்த இடத்தில் எந்த வகையில் தீண் டாமை மற்றும் ஜாதி வெறிப் பாம்பு தலை தூக்கி னாலும், உடனடியாக தலைமைக் கழகத்திற்குத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். முதற் கட்டமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் நட வடிக்கை - அடுத்த கட்டமாக நேரில் களத்தில் இறங் குவது - தொடர் பிரச்சாரம் செய்வது என்பது போன்ற முறைகளில் நமது பணிகள் அமைதல் வேண்டும்.
தீண்டாமை ஒழிக்கப்பட வேண்டியதுதான்; அதே நேரத்தில் ஜாதியின் விளைவுதான் தீண்டாமை என்று மக்கள் மத்தியில் எடுத்துக் கூற வேண்டும்; குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் எழுச்சியை உண்டாக்க தேவையான திட்டங்களைச் செயல் படுத்துவோம்.
இந்து சமய அமைப்பு என்பது வருண பேதம் எனும் அடித்தளத்தின்மீது நிமிர்ந்து நிற்கிறது.
இந்த மூலபலத்தைத் தகர்த்தெறிவதுதான் நிரந்தரமான தீர்வு.
ஜாதியை ஒழித்து, சமத்துவ சமதர்ம சமுதாயம் படைக்க இளைஞர்களே ஒன்று திரள்வீர்!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...