Wednesday, June 20, 2012

தலைவர்களின் பெயர்களை இருட்டடிப்பதா?


இருட்டடிப்பது, திரிபு செய்வது என்ப தெல்லாம் பார்ப்பனர்களுக்குக் கைவந்த கலையாகும்.
இருட்டடித்துப் பார்த்து முடியாத கால கட்டத்தில், திரிபு செய்வது என்பதும் அவர்களின் குருதியில் முட்டையிட்டுக் குஞ்சுப் பொரிக்கும் சமாச்சாரமாகும்.
தியாகராயர் நகர் என்பதை எப்பொழுதுமே டி.நகர் என்றே குறிப்பிடுவார்கள். நீதிக் கட்சியின் மும்மூர்த்திகளில் ஒருவரின் பெயர் மக்கள் மத்தியில் புழங்கப்பட கூடாதாம்.
சுயமரியாதை இயக்கத்தின் தலைவராக இருந்தவரும் இராமநாதபுரம் மாவட்டத் தலைவராக (District Board President)  இருந்து சாதனைகள் பல புரிந்தவரும் நீதிக் கட்சி ஆட்சி அமைச்சரவையில் கொறடாவாக விளங்கிப் பணியாற்றியவருமான பட்டி வீரன்பட்டி ஊ.பு.அ. சவுந்தரபாண்டியன் அவர்களின் பெயரால் உள்ள கடை வீதியை அவர் பெயர் எப்படியும் வெளி உலக வெளிச்சத்துக்கு வந்து விடக்கூடாது என்பதற்காக, பாண்டி பஜார் என்று அறிவு நாணயமின்றி, கீழ்த்தரப் புத்தியுடன், பார்ப் பனர் அல்லாதார் மீது அவர்களுக்கே உரித் தான பகை உணர்வுடனும் (அவாளுக்குத் தொங்கு சதையாக இருந்து சேவகம் செய்யும் சூத்திரர்கள் நடத்தும் ஏடுகளும் உண்டு) எழுதி வருவதைப் பல நேரங்களிலும் இதனை விடுதலை சுட்டிக் காட்டியதும் உண்டு.
பூந்தமல்லி நெடுஞ்சாலை பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை என்று மானமிகு கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது மாற்றிப் பெயர் சூட்டப்பட்டது. அதே போல மவுண்ட் ரோடு அண்ணா சாலை என்றும், கடற்கரைச் சாலை காமராசர் கடற்கரை சாலை என்றும் முதலமைச்சர் கலைஞர் அவர்களால் ஆணைகள் மூலம் அறிவிக்கப்பட்டன. பெயர்ப்பலகைகளிலும் அவ்வாறே பொறிக்கப்பட்டும் உள்ளன.
இந்த அரசு ரீதியான அறிவிப்புக்குப் பிறகும் ஏடுகள் மக்களால் மதிக்கப்படும் தலைவர்களின் பெயர்களுக்குப் பதிலாக பழைய பெயர்களை எழுதுவது போக்கிரித் தனம் அல்லாமல் வேறு என்னவாம்?
சில தொலைக்காட்சிகள் வேண்டு மென்றே பூந்தமல்லி நெடுஞ்சாலை என்று கூறி வருகின்றன. பல நேரங்களில் இது சுட்டிக் காட்டப்பட்டும் அவர்கள் திருத்திக் கொள்வதாக இல்லை.
பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையை பூந்தமல்லி நெடுஞ்சாலை என்றும், அண்ணா சாலையை மவுண்ட் ரோடு என்றும் வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளில் எழுதி இருப்பதை எதிர்த்து அவற்றை அழிக்கும் போராட்டத்தை திராவிடர் கழகம் அறிவித்து அதனைச் செயல்படுத்த எத்தனித்த நேரத் தில், சென்னைப் பெருநகரக் காவல்துறை ஆணையர் தலையிட்டு, உரிய மாற்றங்கள் செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்ததன் அடிப்படையில் போராட்டம் ஒத்தி வைக்கப் பட்டது.
அதன் காரணம் பெரும்பாலான இடங் களில் மாற்றங்களைக் காண முடிந்தது. ஆனாலும் இன்னும் சில இடங்களில் பழைய பெயர்கள் இருக்கத்தான் செய்கின்றன.
சென்னை எழும்பூர் தொடர் வண்டி நிலைய (சுயடைறயல ளுவயவடி)  கைகாட்டி விளம்பரங்களில் பூந்தமல்லி நெடுஞ்சாலை என்று குறிப்பிடப் பட்டுள்ளது. அதனை நிருவாகம் மாற்றி எழுதும் என்று எதிர் பார்க்கிறோம். இல்லையெனில் நேரடியாக போராட்டத்தில் ஈடுபட நேரும் என்று எச்சரிக்கின்றோம்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...