Sunday, June 17, 2012

குடியரசு தலைவர் தேர்தலும் - பா.ஜ.க.வும்


அடுத்து மத்தியில் எங்கள் ஆட்சிதான் என்று மார்தட்டிக் கொண்டிருந்த பா.ஜ.க., பல்வேறு பிரச் சினைகளில் சிக்கிப் புதைந்து கொண்டிருக்கிறது.
பா.ஜ.க.வைத் தூக்கிச் சுமந்து கொண்டிருந்த திருவாளர் சோ ராமசாமிகூட பிரயோசனமில்லை என்று முடிவு செய்து தொப்பென்று கீழே போட்டு விட்டார்.
தாங்கள் அடுத்த ஆட்சிக்கு வந்து விடுவோம் என்று அக்கட்சியில் பலருக்கு நம்பிக்கை தோன்றி விட்டது. ஆனால் தங்களுக்குத் தாங்களே பிரதமராக நியமித்துக் கொள்ளவும் பலர் முற்பட்டு விட்டார்கள். இப்படி தோன்றியுள்ள பிரதமர்கள் மற்ற பிரதமர்களை முன் கூட்டியே கவிழ்த்து விட செய்கிற முயற்சிகளின் விளைவுதான் இப்போது அக்கட்சியில் காணப்படும் பூசல்களுக்குக் காரணம் - என்று (துக்ளக் 13.6.2012). சட்டி சுட்டதடா கைவிட்டதடா என்ற பாணியில் முன்கூட்டியே கருத்துக் கூறித் தப்பிக்கப் பார்க்கிறார்.
இவர் நினைப்பதுபோல அடுத்த ஆட்சி பா.ஜ.க. என்ற நினைப்புக்கூட பிழைப்பைக் கெடுக்கக் கூடியதுதான்; இவர்கள் ஆளும் மாநிலங்களின் இலட்சணம் எந்தக் கதியில் இருக்கிறது? குஜராத் மாநிலத்தைத் தூக்கிப் பிடிக்கிறார்களே - அங்கேயே மக்களின் அதிருப்தி வெடிக்கும் கட்டத்திற்குச் சென்றுள்ளது. அண்மையில் நடைபெற்ற இடைத் தேர்தலில்கூட பா.ஜ.க. தோல்வியை நல்ல அளவுக்குச் சுமக்கும் நிலைதான்.
வெளியில் விளம்பரப்படுத்தப்படுவதற்கும் அங்குள்ள உள்நாட்டு நிலைமைக்கும் சற்றும் சம்பந்தம் கிடையாது. கட்சிக்குள்ளும் மோடிக்கு ஏகப்பட்ட நெருக்கடி! இவரின் எதிரியான சஞ்சய் ஜோஷி கட்சிப் பொறுப்பு களிலிருந்து விலகியுள்ளார். பயந்தல்ல வேறு காரணங்களின் அடிப்படையில்!
பா.ஜ.க.வின் அதிகாரபூர்வ ஏடான கமல் சந்தேஷ்! ஏடு உள்கட்சி உள் குத்துகள்பற்றி வெளிப்படையாகவே எழுதி விட்டது.
பா.ஜ.க. ஆட்சி நடத்தும் கருநாடகா,  குஜராத் ஆகிய மாநிலங்களிலும் எதிர்க்கட்சியாக உள்ள ராஜஸ்தானிலும் கட்சிக்குள் விரும்பத்தகாத பல நிகழ்வுகள் நடந்துள்ளன. குஜராத் முதல் அமைச்சர் நரேந்திரமோடி, ராஜஸ்தான் முன்னாள் முதல் அமைச்சர் வசந்த ராராஜே, கருநாடகா முன்னாள் முதல் அமைச்சர் பி.எஸ். எடியூரப்பா ஆகியோர் கட்சியின் தலை மைக்குக்  கட்டளையிடும் வகையில் நடந்து கொள்கிறார்கள்.
அதிலும் குஜராத் முதல் அமைச்சர் நரேந்திரமோடி வேகமாக இரயிலைப் பிடிக்கும் பயணி மற்றவர்களை இடித்துக் கொண்டு ஓடுவது போல செயல்படுகிறார் என்று வரிந்து தள்ளி விட்டது. மனிதன் ஆடிய போய்விட்டார். சாய்வு நாற்காலியில் ஓய்ந்து கிடக்கும் முன்னாள் பிரதமர் வாஜ்பேயியையும், உள்ளுக்குள் தமக்குப் பிடிக்காத லால்கிஷண் அத்வானியையும் மோடி ஓடி ஓடிச் சந்தித்து இருக்கிறார்.
மோடியைப் பற்றி அறிந்தவர்களுக்கு இந்தச் செயல் அவருக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியின் உந்துதல்தான் என்பது விளங்காமற் போகாது.
இதற்கிடையே குடியரசு தலைவர் தேர்தல் குறுக்கிட்டு பா.ஜ.க.வை வெறும் கூடு என்று அம்பலப்படுத்தி விட்டது. தம்மால் நிறுத்தப்படும் வேட்பாளர் குடியரசு தலைவர் தேர்தலில் நிச்சயம் தோற்பார் என்று தெரிந்துவிட்ட நிலையில் காங்கிரசுடன் பேரம் பேசிப் பார்த்தது.
குடியரசு தலைவர் பதவி உங்களுக்கு, துணைத் தலைவர் பதவி எங்களுக்கு என்பதுதான் பி.ஜே.பி. யின் பேரம்; இந்த வலையில் காங்கிரஸ் சிக்கிக் கொள்ளவில்லை.
2014இல் மக்களவைத் தேர்தல் நடக்க யாருக்கும் நிலையில், குடியரசுத் தலைவர் தேர்தல் முக்கியத் துவம் வாய்ந்தது என்பது எல்லோருக்குமே தெரிந்தது தான்!
காங்கிரஸ் அறிவிக்கும் வேட்பாளர்தான் வெற்றி பெறுவார் என்று ஆகிவிட்ட பிறகு பா.ஜ.க.வின் நிலை பரிதாபப் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுவதுதான். அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைமை இவற்றையெல்லாம் கவனத்தில் எடுத்துக் கொண்டு எந்த முடிவையும் தக்க காலத்திலும் எடுத்து சரியான வகையில் செயல்படக் கற்றுக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...