Saturday, May 5, 2012

கொசுவத்தி வியாபாரியை மலேரியா ஒழிப்புத் தலைவராக போடலாமா?


நாட்டின் பொது ஒழுக்கம் நாளுக்கு நாள் தேய்ந்து கொண்டே வருகிறது!
ஏமாற்று வேலைகளும் பித்த லாட்டங்களும் புதுப்புது அவதாரம் எடுத்து, நாளும் அரங்கேறிக் கொண்டே இருக்கின்றன.
குற்றவாளிகள், உண்மையான மோசடிப் பேர் வழிகள்  உலா வருவதும், தவறு செய்யாத நிரபராதிகள் தங்களைக் காத்துக் கொள்ளவே அவதிப்படுவதுமான விசித்திர நிலை, நாட்டின் அன்றாட சகஜ நடை முறையாகி வருகிறது!
பாலியல் குற்றவாளிகள் எல்லாம் முடிசூட்டிக் கொண்டு பவனி வரும் படுகேவலம் சிம்மாசனத்தில் ஏறி, சிலந்தி வலைகளைப் பின்னிக் கொண்டு, கோடிகளில் புரள்கிறார்கள்.
அப்பப்பா எங்கே திரும்பினாலும் இந்த ஞான பூமியில் வஞ்சகமும் வன்முறையும் வறட்டுப் பேச்சுகளும், வாய்ச் சவடால்களும்தான் நாளும் மலிந்து வந்து கோலோச்சும் நிலை குதூகலத்தோடு கொண்டாடப் படுகிறது!
நீர் எப்படி மேலேயிருந்து கீழே பாயுமோ, அதுபோல, ஊழல், லஞ்சம், ஒழுக்கத் தவறுகளும் மேலே துவங்கி, கீழே வற்றாத ஜீவநதிகளாகப் பாய்ந்தோடி வருகின்றன! உலகளாவிய விளையாட்டுப் போட்டி, பந்தயங்களில் ஒலிம்பிக் உட்பட, ஓடுகின்றவர்கள், தடகள வீரர், வீராங்கனைகள் சிறப்பாக விளையாடி பதக்கங்களைப் பெற, விளையாட்டு விதி முறைகளை மீறி - அவைகளைப் புறந்தள்ளிவிட்டு - குறுக்கு வழியாக, ஊக்க மருந்தினை உட்கொள்ளும் தவறான நடவடிக்கைகளில் ஈடுபடு கின்றனர்.
பிறகு பிடிபட்டு, மானம், மரியாதை களை இழக்கின்றனர்!
அவர்களுக்கென உள்ள பெருமை களும் பறிமுதலாகும் பரிதாபத்திற்குத் தள்ளப்படுகின்றனர்!
இது உலகப் போட்டி, (ஒலிம்பிக் காமன்வெல்த் விளையாட்டுகள், இதர சர்வதேச அளவிலான விளையாட்டு அளவில் துவங்கி இப்போது பற்பல மாநிலங்களில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி விளையாட்டுகளில் ஊக்க மருந்து (Doping) உட்கொள்வது என்ற கீழிறக்க நிலை வந்துவிட்டதே! என்ன கொடுமை அய்யகோ!
தேசிய ஊக்க மருந்துக்கு எதிரான ஒரு அமைப்பு பல விளையாட்டு வாரியங் களுக்கும் கல்வி நிலையங்களுக்கும் விடுத்துள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடு கிறார்கள்.
பள்ளிகளுக்கான தேசிய விளை யாட்டுப் போட்டி பந்தயங்களில் டெல்லியில் நடந்த போட்டிகளில் - மகாராஷ்டிரம், உத்தரபிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநில பள்ளிகளில் 14 வயதிலிருந்து 19 வயதுக்குள் இருக்கும் விளையாட்டு வீரர்கள். இந்த மருந்து எடுத்துக் கொண்ட (Doping) குற்றத் திற்கு ஆளாக்கப்பட்டு கண்டுபிடிக்கப் பட்டுள்ளனர்.
அதனால் அந்த போர்டுகளுக்கு மேற்சொன்ன அமைப்பு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது!
‘Raging’  ரேகிங் என்பதற்கு எதிராக எப்படி சுற்றறிக்கை - ஆணை (சட்டம் பிறப்பித்துள்ளனர்) அதுபோல இதற்கும் எல்லா கல்வி நிலையங்களுக்கும் எச்சரிக்கை செய்யும் அறிவிப்பு செய்யச் சொல்லி முடிந்தால் பாடத் திட்டத் திலேயே இதற்கென ஒரு தனிப் பாடமும்கூட இணைக்கவும்.
கண்டிப்பான மேற்பார்வை, கண் காணிப்புகளும் இறுக்கப் படல் வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது நம்மை வெட்கப்பட வைக்கும் சுற்றறிக்கை அல்லவா? எவ்வளவு கீழ் இறக்கம்...
இதைச் சட்டம் போட்டு, தடுத்து ஒழித்துவிட முடியாது!
வெற்றி - தோல்வி இரண்டையும் சமமாக, தோல்வியையும் நல்ல பக்கு வத்தோடு அணுகும் மனப்பான்மையை விளையாட்டு போட்டி, (Sportsman Spirit) என்பதையே அலட்சியப்படுத்தி, எப்படியும் வெற்றி என்ற சூதாட்ட மனப்பான்மை வளர்த்தது தானே இப்படிப்பட்ட அவலத்திற்கு மூல காரணம்!
இல்லையானால் கோடிக்கணக் கில் பணம் பெற்று, வேண்டுமென்றே விளையாட்டில் தோல்வி அடைய ஆடிய கேவலமான தேசிய சர்வதேசிய அவ மானம் பரவி விடும் நிலை பெருகுமா?
இப்போது கிரிக்கெட் விளையாட்டு வீரர்களை குத்தகை எடுக்கும் கோணல் புத்தியே கொத்தடிமை தத்துவத்தின் மறுபக்கம் அல்லவா?
கண்டிக்க வேண்டியவர்கள், நல் வழிப்படுத்துபவர்கள் கடவுள், மதம், பக்தி போதனைபிரச்சாரங்களுக்குக்  குறைவில்லாத நிலையில் நம் நாடும் உலகமும் ஏன் இப்படி தாழ்ந்த நிலைக்குத் தள்ளப்பட வேண்டும் என்று எண்ணி எண்ணி புதுப் பாதையைக் காட்ட முயற்சிக்க வேண்டும்.
நோயின் மூலத்தைத் தேடுங்கள் கொசுவத்தி வியாபாரிகளிடம் மலே ரியா ஒழிப்புக்கு யோசனை கேட்ப தோடு அவரையே அச்சங்கத்திற்கு தலைவராக போட முடியுமா? கொசு இருந்தால் தானே அவரது வியாபாரம் செழிக்க முடியும்?  என்ன பலன்கிட்ட முடியும்?
யோசியுங்கள்!


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...