Monday, May 7, 2012

கடவுள் சக்தி?


கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கோவில் திருவிழா என்ற பெயரில் நடந்த விபத்துகள் பரிதாபத்துக்கு உரியவை!
நாகூரில் சந்தனக் கூடு என்ற பெயரால் ஏற்பட்ட விபத்து வேதனைக்குரியது. மின்கம்பி உராய்வால் நான்கு பக்தர்கள் அதே இடத்தில் பரிதாபகரமாக மரணமடைந்தனர்.
அதே போல குடியாத்தத் தேரோட்டத்திலும் மின் கம்பி உராய்வால் பக்தர்கள் பலியானார்கள்.
தொடர்ந்து கோவை நாயக்கன்பாளையம், ஆண்டிப்பட்டி முதலிய இடங்களில் தேர் விபத் துக்கு ஆளாகிப் பலரும் காயப்பட்டுள்ளனர்.
செம்பனார் கோவிலையடுத்த தலைச் செங்காட்டில் திருவிழாக் கூட்டத்துக்குள் பேருந்து புகுந்து பலரும் மரணமடைந்தனர். கேரளாவில் கோவில் திருவிழாவில் யானைக்கு மதம் பிடித்துத் துவம்சம் செய்தது.
கோவில் திருவிழாவில் விபத்துகள் நடந்த தன் காரணமாக மனித உயிர்கள் பலியானது கண்டு கடவுள் மறுப்பாளர்களாகிய நாங்கள் மகிழ்ச்சி அடையவில்லை. நாத்திகர்கள் தலை சிறந்த மனிதநேயர்கள். அதே நேரத்தில் ஒன்றை நாங்கள் இந்தச் சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்ட வேண்டியது எங்களின் அடிப்படைக் கடமை யாகும்.
கடவுள் சர்வசக்தி வாய்ந்தவர் - கருணையே வடிவமானவர் - எங்கும் நிறைந்தவர் என்று மக்கள் நம்புகிறார்களே - மதவாதிகள் பிரச் சாரம் செய்கிறார்களே  - அவர்களின் சிந்தனைக்குத்தான் சில கேள்விகளை வைக்க விரும்புகிறோம்.
இந்தக் கூற்று உண்மையானால் கோவில் திருவிழாக்களில் பக்தர்கள் பலியானார்களே - இதற்கு என்ன பதில்? தங்கள் பக்தர்களையே காப்பாற்ற முடியாத கடவுள் வேறு யாரைக் காப்பாற்றப் போகிறார்?
இந்த நிகழ்ச்சிகள் மட்டுமல்ல; வேறு பல மத விழாக்களிலும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் பலியாவது உண்டே! கடவுளுக்குச் சக்தியும், கருணையும் இருப்பது உண்மையென்றால் இந்தப் பலிகள் நடந்திருக்க முடியாதே! வேறு எந்தச் சந்தர்ப்பத்தில் இதை உணரத் தவறி னாலும் இந்தச் சந்தர்ப்பத்திலாவது உணர வேண்டாமா? சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?
கடவுள் இல்லை இல்லவே இல்லை என்று தந்தை பெரியாரும், அவர்தம் தொண்டர்களும் கூறுவது உண்மை, நூற்றுக்கு நூறு உண்மை என்பதை இந்த நேரத்திலாவது சிந்திக்க வேண்டாமா என்பதுதான் நமது அறிவார்ந்த வினாவாகும்.
மதுரையில் ஆண்டுதோறும் கள்ளழகர் ஆற்றில் இறங்குகிறார் என்று கூறி ஊரைக் கூட்டுகிறார்களே அதன் தாத்பரியம்தான் என்ன?
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் பருவத்தி லாவது அவர் சக்தியால் ஆற்றில் தண்ணீர் ஓட வேண்டாமா? செயற்கையாக அல்லவா ஆற்றில் தண்ணீரைக் கொட்ட வேண்டியுள்ளது. கள்ளழகர் ஆற்றில் இறங்குகிறார். ஆற்றில் இறங்குகிறார் என்று சொல்லுகிறார்களே - அதாவது உண்மையா? பக்தர்கள் தூக்கிக் கொண்டு வந்து ஆற்றில் இறக்குகிறார்களே தவிர, கள்ளழகர் தானாக இறங்குவதில்லையே!
ஒரு பொம்மையைச் செய்து வைத்துக் கொண்டு வடலூர் வள்ளலார் அவர்கள் சொன் னது போலவே பிள்ளை விளையாட்டையல்லவா விளையாடிக் கொண்டு இருக்கிறார்கள்!
சிறுவயதில் நொணா காயில் ஈர்க்குச்சி கொண்டு தேர் கட்டி விளையாடும் அந்தச் சிறுபிள்ளைத்தனம் பெரியவர்கள் ஆன பிறகும் மாறவில்லை என்பது நகைப்புக்குரியதே!
அறிவியல் நன்கு வளர்ந்து மனிதகுலம் உச்சிக்குச் சென்று கொண்டு இருக்கும் ஒரு கால கட்டத்தில் மனிதனுக்கு மதம் பிடித்துப் பித்துக் குளித்தனமாக நடப்பதைக் கைவிடு வார்களா? என்பதுதான் பகுத்தறிவுவாதிகளின் - மக்களின் நலன் - வளர்ச்சி கருதிய வினாவாகும்.


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...