Friday, May 4, 2012

புரட்சிப் பெண்ணாக உருவாகுங்கள்!


பெண்கள்மீதான வன்முறைகள் அதிகரித்து வருவதுபற்றி வெளிவந்துள்ள புள்ளி விவரங்கள் அதிர்ச்சியூட்டக் கூடியவையாக உள்ளன.
பாலியல் வன்கொடுமை, மானபங்கம், கடத்தல், வரதட்சணை மரணம் என்று பெண் களுக்கு எதிரான அநீதிகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.
பெண்களுக்குக் கொடுமைகளை இழைப் போர் மீதான வழக்குகள் விரைந்து விசாரிக்கப் பட்டு உரிய தண்டனை அளிக்கப்படுவதில்லை. காலம் கண்மூடித்தனமாக இழுத்தடிக்கப்படுகிறது.
2009 இல் வழக்குகள் 12,374, 2010 ஆம் ஆண்டுக்கான வழக்குகள் 12,653, 2011 இல் 13,928 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகின்றன.
இப்படி தாமதிக்கப்படுவதால், பெண்கள் மீதான கொடுமைகள் சர்வ சாதாரணமாக நடைபெற்றுக் கொண்டுள்ளன; வழக்குகள் உடனுக்குடன் விசாரிக்கப்பட்டு, உரிய தண் டனை விதிக்கப்பட்டால், இத்தகைய வன்கொடு மைகள் குறைந்திட அதிக வாய்ப்புண்டு.
குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டம் என்ற அரிய சட்டம் ஒன்றை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. உண்மையிலேயே இது உயரிய நோக்கத்தைக் கொண்டது; ஆனால், எந்த அளவுக்குச் செயல்பாட்டில் உள்ளது - சட்டத் தின் நோக்கம் நிறைவேற்றப்பட்டுள்ளதா என்பது கேள்விக்குறியே!
இந்தச் சட்டம் பற்றிய விழிப்புணர்வு பொதுமக் கள் மத்தியில் உண்டாக்கப்படவில்லை என்பது தான் உண்மை.
பாதிக்கப்படும் ஒரு பெண் புகாரை எங்கே கொண்டு போய்க் கொடுப்பது? புகார் மனு எப்படி எழுதப்படவேண்டும்? என்பது போன்ற அடிப்படைத் தகவல்களை மகளிர் மன்றம்மூலம் கிராமப்புற பெண்கள் மத்தியில் கொண்டு சென்றிருக்கவேண்டாமா?
குடும்ப நீதிமன்றங்களில் திருமண விடுதலை தொடர்பான வழக்குகள் விரைந்து விசாரிக்கப் படும் வகையில் விதிமுறைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
இதற்கு முன் குறிப்பிட்ட காலம் பிரிந்து இருந் திருக்கவேண்டும் என்றிருந்த கால அளவுகூட இப்பொழுது குறைக்கப்பட்டுள்ளது வரவேற்கத் தக்கது.
குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தவர்கள் திரைப்பட நட்சத்திரங்களாக இருந்தால் தொடர் கதைபோல நாவல் போல தொலைக்காட்சிகளில் முக்கியத்துவம் கொடுப் பது என்பது பொழுதுபோக்கு அம்சமாகி விட்டது.
திருமண விலக்கு பெறும்போது குழந்தை யாரிடம் இருப்பது என்பது தொடர்பான சிக்கல் கள் வேறு!
இவையெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் பெண் கள் என்றால் பலகீனமானவர்கள் என்கிற மனப் பான்மை சமூகத்திலிருந்து வேரோடும், வேரடி மண்ணோடும் வெட்டி எறியப்படவேண்டும்.
கோலம் போடுதல், கோலாட்டம் அடித்தல் போன்ற விளையாட்டுகளை விளையாட்டாகக் கூடச் சொல்லிக் கொடுக்காதீர்கள். அவர்கள் உடல் வன்மை பெறும் வண்ணம் வீர விளை யாட்டுகளை, உடற்பயிற்சிகளைக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்பது தந்தை பெரியார் அவர்களின் கருத்து!
நமது கல்வித் திட்டத்தில் பெண்களுக்குத் தன்னம்பிக்கையூட்டும் வகையில் கல்வி முறை அமையவேண்டும்.
பெண்ணென்றால் மெல்லியவள், இடை ஒன்று இருப்பதே தெரியாமல் இருக்கவேண்டியவள் என்பது போன்ற கவித்துவக் கற்பனைகளைத் தூக்கி எறிந்து, கல்பனா சாவ்லா, வசந்தா கந்தசாமி போன்ற பெண்களை முன்னுதாரணம் காட்டி வளர்த்தெடுக்கவேண்டும்.
இடர் செய்யும் ஆண்கள் நான்கு இடத்தில் பெண்களிடம் உதைபட்டார்கள் என்ற செய்தி ஊடகங்களில் வெளிவந்தால் போதுமே - ஆண்களின் வால் அடங்கிப் போய்விடுமே!
பெண்களே, பெரியாரின் புரட்சிப் பெண் களாக ஆக விரும்புங்கள்!


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...