Friday, May 4, 2012

பார்ப்பனர்களைப் பாரீர்!


கேள்வி: இலங்கைப் பிரச்சினையில் தி.மு.க. வின் நிலை என்ன?
பதில்: இந்த மாதிரியெல்லாம் ஒரு பொதுவான கேள்வியைக் கேட்டு வைப்பது ரொம்பவும் தவறான காரியம். இலங்கைப் பிரச்சினையில் தி.மு.க. எப்போது எடுத்த நிலையைப் பற்றி நீங்கள் கேட்கிறீர்கள்? ஆரம்பத்தில் எடுத்த நிலையையா? அதற்குப் பிறகு அதை மாற்றி எடுத்த நிலையையா? அல்லது மீண்டும் ஆரம்பத்திற்கே போக முயற்சித்த நிலையையா? அல்லது அதிலிருந்து மீண்டும் நழுவி மத்திய அரசின் நிலைக்கு வந்த நிலையா? அல்லது இப்போது மீண்டும் ஆரம்பித்த நிலைக்கே போகலாமா என்று யோசிக்கிற நிலையையா? எந்த நிலை? எந்த நிலையைப்பற்றிக் கேட்கிறீர்கள்? என்பதைத் தெளிவாக்காமல், தி.மு.க.வின் நிலை என்ன என்று கேட்டால் என்ன பதில் சொல்வது? தி.மு.க.வின் இலங்கைப் பிரச்சினை நிலை, கெலிடாஸ்கோப் மாதிரி ஒவ்வொரு அசைவுக்கும் நிறம் மாறும். டிசைன் மாறும். வர்ண ஜால வினோதங்கள் கிடைக்கும். அதைப் பொதுவாக ஒரு கேள்வியில் அடக்க முயற்சிப்பது ரொம்பவும் தவறான காரியம். (துக்ளக், 2.5.2012)
தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் ஈழத் தமிழர்களுக்குத் தனி ஈழம்தான் தீர்வு என்று அடித்துச் சொல்லும் நிலையில், அதனைத் தாங் கிக் கொள்ள முடியாத பார்ப்பன வட்டாரங்கள் மிகவும் அதிர்ந்து போயிருப்பதாகவே தெரிகிறது.
எப்படியும் கொச்சைப்படுத்தி எழுதுவது என்பதில் மிகவும் கூர்மையாகவே செயல்பட ஆரம்பித்து விட்டனர்.
உலகில் தமிழர்களுக்கென்று ஒரு தனி நாடு கிடைத்துவிட்டால் அது பார்ப்பனர்களுக்கு ஆபத்து என்று அவர்கள் அஞ்சுகிறார்கள்.
பார்ப்பனர்களும், தமிழர்கள்தான் என்று சொல்லுபவர்கள்கூட இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள். அத்தகைய மேதாவிகள் ஈழப் பிரச்சினையிலும் சரி, பொதுவாக தமிழ், தமிழன், தமிழ்நாடு என்கிற பிரச்சினைகளிலும் சரி, பார்ப் பனர்கள் எப்படியெல்லாம் நடந்து கொள்கிறார் கள் என்பதைக் கவனித்தால் இந்த உண்மைகள் தெரியாமல் போகவே போகாது.
பார்ப்பனர்களுக்கென்று உலகப் பந்தில் நாடு ஒன்று இல்லாத காரணத்தால், நமக்குக் கிடைக் காதது மற்றவர்களுக்கும் கிடைக்கக்கூடாது என்ற எண்ணம் கொண்ட வஞ்சகக் கூட்டம் அது!
ஈழத் தமிழர் பிரச்சினையில் தி.மு.க.வின் நிலைப்பாட்டை விமர்சிக்கக் கிளம்பியிருக்கும் திருவாளர் சோ.ராமசாமி, ஈழத் தமிழர் பிரச்சினையிலும் சரி, மாவீரன் பிரபாகரன் பிரச்சினை யிலும் சரி, அஇஅதிமுக, அதன் பொதுச் செய லாளர் செல்வி ஜெயலலிதா அவ்வப்பொழுது எடுத்து வந்திருக்கிற முரண்பாடுகள் பற்றி ஒரே ஒரு வரிகூட எழுதாதது ஏன்?  முரண்பாடு களைச்  சுட்டிக் காட்ட தயங்குவது ஏன்? அல்லது அஞ்சுவது ஏன்?
இனவுணர்வு அடிப்படையிலான காரணங்கள் உண்டு என்றாலும், அதிமுக எந்த நிலைப் பாட்டினை எடுத்தாலும் சரி, செல்வி ஜெயலலிதா எப்படிப் பேசினாலும் சரி, ஈழத் தமிழர் பிரச் சினையில் பெரும் பரபரப்பையோ தாக் கத்தையோ ஏற்படுத்தப் போவதில்லை. அதே நேரத்தில் ஈழத் தமிழர் பிரச்சினையை மானமிகு கலைஞர் அவர்கள் கையில் எடுத்துக் கொண்டால், அதனால் ஏற்படும் விளைவுகள் எத்தகை யது என்பதைப் பார்ப்பனக் கூட்டம் நுணுக்க மாகவே அறிந்து வைத்துள்ளது. அதன் அச்சமே இவ்வாறு கொச்சைப்படுத்தக் கிளம்பியிருக் கிறது. அது சரி, இதனை நமது தமிழத்தின் தலைவர்கள் புரிந்து கொள்ளவில்லையே என் செய்வது?

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...