சென்னை, மே 23- தமிழக அரசு ஆட்சி பொறுப்பை ஏற்று ஓராண்டு பூர்த்தியாகியுள்ளது. இதனை யொட்டி பத்திரிகைகளில் வெளி யான விளம்பரங்கள் மற்றும் கட்டு ரைகளுக்காக மாத்திரம், ரூ.25 கோடிக்கு மேல் செலவிடப்பட் டுள்ளதாக First Post செய்தி ஊடகம் தகவல் வெளியிட் டுள்ளது.
இவ்விளம்பர கட்டு ரைகள் தமிழ் நாட்டுப் பத்திரிகை மற்றும் நாளிதழ் களில் மட்டு மல்லாது இந்தியா முழு வதும் பேசப்படும் பல் வேறு மொழிகளிலான முக்கிய பத்திரிகை, நாளிதழ்களிலும் வெளியாகியுள்ள தாக அந்த ஊடகம் சுட்டிக்காட்டி யுள்ளது. The Times of India, Hindustan Times, Economic Times, Asian Age, Indian Express, Financial Express, Hindu Business Lines, Mint, Business Standard மற்றும் ஆகிய நாளிதழ்களில் அதிலும் பெரும்பாலும் தமது முகப்பு பக்கத்தில் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசின் ஓராண்டு சாதனைகளுக்கு முன்னு ரிமை கொடுத்து விளம்பரங்கள் மற்றும் கட்டுரைகள் வெளியிட்டி ருந்ததாக மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் சென்னை, மும்பை, புது டெல்லி ஆகிய நகரங்களில் வெளி யாகாத பிற மாநிலங்களைச் சேர்ந்த பத்திரிகைகளான The Statesman, Kolkatta,The Telegraph ஆகிய பத்திரி கைகளிலும் கூட ஜெ யலலிதா குறித்த செய் திகள் வெளியா கியதாக அந்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதன் மூலம் இதற்கு முன்னர் இந்தியாவில் 1994 இல் அறிமுகமான Star Network தொலைக் காட்சி சேவை, தற்போது BPLமொபைல் மற்றும் வொடா ஃபோன் மொபைல் என்பவையே கோடிக் கணக்கில் செலவு செய்து இந்தியா முழுதும் நாளி தழ்களில் விளம்பரம் செய்வது வழக்கம். அதிக பட்சமாக வொடா ஃபோன் ரூ 10 கோடியை செலவு செய்து சாதனை படைத்திருந்தது.
ஆனால் தமிழக அரசு சார்பில் தற்போது ஒரு நாளில் ரூ 25 கோடி செலவுக்கு, இவ்விளம்பர சாத னையை படைத் திருக்கிறது என First Post மேலும் விமர்சித்துள்ளது.
1 comment:
.
.
CLICK >>>>>ஜெயலலிதாவின் கேபெரே நடனம் ஆயுத பூசை பற்றி அறிஞர் அண்ணா <<< TO READ.
Post a Comment