Sunday, April 22, 2012

வேளாங்கன்னியில் ஏசு சிலையில் நீர் சொட்டுவது அற்புதச் செயல் அல்ல - திட்டமிட்ட ஏற்பாடே!


அறிவியல் மூலம் நிரூபித்த பகுத்தறிவுச் சங்கத் தலைவர் எடமருகுமீது குற்றப் பத்திரிகையாம்

விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்கும் இலட்சணம் இதுதானா?

மும்பை, ஏப்.  22- ஏசு கிறிஸ்துவின் சிலையில் இருந்து நீர் சொட்டுவது ஒன்றும் அற்புதம் அல்ல என்றும், அதிக அழுத்தத்தால் குறுகிய குழாயில் நீர் மேலே ஏறும் சாதாரண அறிவியல் நிகழ்ச்சிதான் அது என்றும் கூறிய சங்க பகுத்தறிவாளர்  தலைவர் சேனல் எடமருகு மீது மும்பை ஜூஹூ காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்திய பகுத்தறிவாளர் சங்கம் 1930 இதே மும்பையில்தான் ஆர்.பி.பரஞ்பே அவர்களால் தொடங்கப் பட்டது. 90 ஆண்டுகளுக்குப் பிறகு அதே மும்பையில்   பகுத்தறிவாளர் சங்கத் தலைவர் மீது முதன் முதலாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அனைத் துலக பகுத்தறிவாளர் கழகத்தில் புகழ் பெற்ற அறிவியலாளர் ரிச்சர்ட் டாக்கின்ஸ் போன்றவர்கள் உறுப்பினர்களாக உள்ள னர். ஒரு  பிரிவு மக்களின் மத உணர்வு களை புண்படுத் தும் நோக்கத்துடன் பேசுவது, செயல்படுவது  என்னும் இந்தி யக் குற்றவியல் சட்டத்தின் 295-ஏ பிரிவின் கீழ் இந்த முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யப்பட்டுள்ளது.
பகுத்தறிவுப் பெற்றோருக்குப் பிறந்த இவர், கடந்த 30 ஆண்டுகளாக மதத் தலைவர்கள் மற்றும் கடவுள் அற்புதங்கள் எனப்படுபவைகளின் பின்னணியில் அறிவியல் இருப்பதை தனது சோதனை கள் மூலம்  மெய்ப்பித்துள்ளார். சபரிமலை யில் தெரியும் ஜோதி மனிதர்களால் ஏற்றப் படும் தீ என்பதையும் அவர் மெய்ப்பித்தார். சத்ய சாய்பாபா போன்ற கடவுள் மனிதர் களின் அற்புதங்கள் எல்லாம் போலி யானவை என்றும் அவர் மெய்ப்பித் துள்ளார்.
வேளாங்கன்னி தேவாலயத்தில் சிலுவையில் இருந்து தண்ணீர் சொட்டு வதில் எந்த ஒரு அற்புதமும் இல்லை என்று டில்லியில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் மார்ச் 5 ஆம் தேதி சேனல் எட மருகு கூறியதைத் தொடர்ந்து தொடங் கியது இந்தக் கதை. இது பற்றி ஆய்வு செய்யும்படி அவரைக் கேட்டுக் கொண்ட 9 ஆவது தொலைக்காட்சி நிறுவனம் அவரை விமானத்தில் அனுப்பி வைத்தது. மார்ச் 10 அன்று வேளாங்கன்னிக்கு வந்த சேனல் எடமருகு நீர் சொட்டும் சிலுவையை ஒளிப் படங்கள் எடுத்துக் கொண்டார்.
வேளாங்கன்னியில் அற்புதம் நிகழ்வ தாகக் கூறப்பட்ட இடத்தைப் பார்த்த சேனல் எடமருகு அதிக அழுத்தத்தில் குறுகிய குழாய் மூலம் மேலே ஏறும் என்னும் தத்துவத்தின்படி, சிலுவைக்கு அருகே நிலத்துக்கு அடியில் இருக்கும் தண்ணீர் மேலே ஏறி ஏசுவின் சிலையில் இருந்து சொட்டுகிறது என்பதைக் கண்டுபிடித்துக் கூறினார். அருகில் உள்ள சாக்கடையின் மீதிருந்த ஒரு மறைப்புக் கல்லை நான் நீக்கியபோது, அங்கு தண்ணீர் தேங்கியிருப்பதைக் கண்டேன்.  தண்ணீரின் ஓட்டம் தடைப் பட்டால் அது வெளியேறுவதற்கான வழியைப் பார்க்கும். கீழ் நோக்கிச் செல்ல முடியாதபோது, மேல் நோக்கியும் தண்ணீர் செல்லும். இந்த தத்துவத்தின் அடிப்படையில்தான் மரங்கள் நிலத்தி லிருந்து தங்களுக்குத் தேவையான தண்ணீரைப் பெறுகின்றன என்பதை ஒவ்வொரு மாணவரும் அறிவர் என்று அவர் கூறினார்.
நான் அந்த இடத்தை அடைந்தபோது, சாலையில் சிலுவைக்கு அருகே ஒரு பாதிரியார் தொழுகை நடத்திக் கொண் டிருந்தார். சிலுவையில் இருந்து சொட்டிய தண்ணீர் ஒரு பக்கெட்டில் சேகரித்து வைக்கப்பட்டு, அங்கு கூடியிருந்த பக்தர் களுக்கு விநியோகிக்கப் பட்டது. அற்புதம் என்று எழுதப்பட்டிருந்த சிலுவையில் இருந்து தண்ணீர் சொட்டும் ஒளிப்படம் ஒன்றை என்னிடம் கொடுத்தார்கள். அந்தத் தண்ணீரை வேதியியல் சோதனைக்கு உட்படுத்த விரும்பிக் கேட்ட போது எனக்கு அந்தத் தண்ணீரைக் கொடுக்க மறுத்துவிட்டனர்.
அதனைத் தொடர்ந்து டில்லி, மும்பை ஆகிய நகரங்களில் நடைபெற்ற தொலைக்காட்சி விவாதங்களில் கிறித்துவ தேவாலயங்கள் அற்புதங்களைத் தேடி அலைவதாக சேனல் எடமருகு குற்றம் சாட்டினார்.  அந்த விவாதத்தில் மும்பையின் ஆர்ச் பிஷப் ஆஞ்சலோ கிரேசியாஸ் கலந்து கொண்ட செய்தி ஆர்வம் அளிப்பதாகும். இந்த நிகழ்ச்சியை தேவாலயம் அற்புதம் என்று கூறவில்லை என்றும், அதைப் பற்றிய முறையான விசாரணைக்குப் பிறகுதான் இது பற்றி எதுவும் கூறமுடியும் என்று பிஷப் அறிவித்தார். கிறித்துவ தேவாலயம் அறிவியலுக்கு எதிரி இல்லை என்றும் போப் அறிவியல் கழகத்தை அது உருவாக்கி உள்ளது என்றும், கலீலியோவும் அதன் உறுப்பினர் என்றும் பிஷப் கூறினார்.  அப்போது, கலீலி யோவை தேவாலயம் சிறை வைத்திருந்ததையும்,  கியார்டனோ ப்ரூனோவை எரித்ததையும், அதற்காக போப் பால் மன்னிப்புக் கேட்டதையும் சேனல் எடமருகு சுட்டிக் காட்டினார்.
பேயை ஓட்டும் செயலில் வாடிகான் ஈடுபட்டிருப்பது பற்றி நீங்கள் என்ன கூறுகிறீர்கள் என்று சேனல் எடமருகு பிஷப்பிடம் கேட்டபோது, பேய் பிடித்திருந்த நிகழ்ச்சிகள் எதனையும் தான் கண்டதில்லை என்றாலும், அதனை உண்மையல்ல என்று நிராகரிக்க முடியாது என்று பிஷப் கூறினார்.
இந்த விவாதம் முழுவதிலும், அதில் கலந்து கொண்டவர்கள், தேவாலயம் மீது குற்றம் சாட்டியதற்காக  சேனல் எடமருகு மன்னிப்புக் கேட்காவிட்டால், அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படும் என்று எச்சரித்தனர்.
தேவாலயத்தின் சகிப்புத்தன்மை இன்மையே அய்ரோப்பிய கண்டத்தில் இருண்ட காலத்தைத் தோற்றுவித்தது என்று கூறிய சேனல் எடமருகு இந்தியாவுக்கும் அத்தகைய இருண்ட காலத்தைக் கொண்டு வர முயலாதீர்கள் என்று கேட்டுக் கொண்டார்.
பெர்னான்டஸ் என்பவர் ஜூஹூ காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார்.  தேவாலயத்தை பற்றியும், போப் பற்றியும் சேனல் எடமருகுவின் அறிக்கைகள் தனது மத உணர்வுகளைக் புண்படுத்தும்படி உள்ளதாக அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
டில்லியில் வசிக்கும் சேனல் எடமருகு, அறிவியல் கண்ணோட்டத்தை வளர்ப்பது எனது கடமை என்று இந்திய அரசமைப்புச் சட்டம் கூறுகிறது, வேண்டுமானால் எனது அடிப்படைக் கடமையைச் செய்வதைத் தடுக்கும் வகையில் என்னைக் கைது செய்யட்டும்  என்று கூறினார்.
அவருக்காக வாதாட ஒரு பாதுகாப்புக் குழு  வழக்கறிஞர் என்.டி.பச்சோலியால் அமைக்கப் பட்டுள்ளது. இதற்கிடையில் அவரிடம் விசாரணை செய்ய மும்பை காவல்துறை அவரை அழைத்துள்ளது.


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...