Monday, April 23, 2012

நாகர்கோவிலில் சந்திப்போம்


நாகர்கோவிலில் வரும் 27 ஆம் தேதியன்று மாலை மண்டல திராவிடர் கழக மாநாடு.
ஒரு நற்செய்தி - பேரணிக்கு இன்று காவல்துறை அனுமதியளித்து விட்டது. நன்றி!  இரட்டிப்பு மகிழ்ச்சி!!
நம்முடைய மாநாடுகளும், பேரணி களும் பொழுது போக்கு அம்சங்கள் அல்லவே!   மாலை நேர வகுப்புகள் அல்லவா? மண்டிக் கிடக்கும் மடமைக் காட்டினைச் சுட்டெரிக்கும் சூரியப் பிரவாகமாயிற்றே!
சுரண்டும் சழக்குகளின் சூளறுக் கும் பனங்கருக்கு அல்லவா?
தமிழ்நாட்டின் பல்வேறு திசை களிலும் மண்டல மாநாடுகள் பட் டொளி வீசிப் பறந்து கொண்டிருக் கின்றன. பயிற்சி முகாம்கள் இன் னொரு பக்கத்தில், இளைஞர்களைப் பகுத்தறிவுப் பட்டை தீட்டிக் கொண் டிருக்கின்றன. குழந்தைகளின் பழகு முகாம் வேறு!
அய்ந்து முனைகளிலுமிருந்தும் கழகப் பிரச்சாரப் படை புறப்பட்டு, வஞ்சிக்கப்படும் தமிழ்நாட்டின் உரி மைக் குரலை முரசறைந்து முழங்கி வந்திருக்கின்றன.
உலகப் புத்தக நாளையொட்டி பல இடங்களிலும் பெரியார் புத்தகப் பெரு விழாவுக்கு ஏற்பாடுகள்.
சேலத்தில் தமிழர் தலைவர் இன்று இத்திருவிழாவில் கலந்து கொண்டு - இந்த வகையில் ஓர் உந்து சக்தியைக் கொடுத்துள்ளார்.
சுருக்கமாகச் சொல்லவேண்டும் என்றால், கடந்த மூன்று மாதங்களில் கழகத்தின் கையிருப்பில் தமிழ்நாடே இருந்து வந்திருக்கிறது.
தஞ்சை மாநாடு மாநில மாநாடு என்று வியக்கும் வண்ணம் நடத்தி முடிந்து  அரிய தீர்மானங்களையும் வழங்கி உள்ளது. நாகர்கோவில் மாநாட்டிலும் நறுக்குத் தெறித்த தீர்மானங்கள் வர இருக்கின்றன. திருவாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் இருந்த பகுதிதான் பெரும்பாலான இன்றைய கன்னியாகுமரி மாவட்டம். சனாதன வெறி கொழுத்த பகுதியாகக் கோலோச்சியது ஒரு கால கட்டத்தில்.
திருவாங்கூர் சமஸ்தானத்துக்குச் சொந்தமான வைக்கத்தில்தானே, தந்தை பெரியார் தீண்டாமை ஒழிப்புப் போரைத் துவக்கி, இந்து மத வருணாசிரம பொலி காளைக்குச் சூடு போட்டு அடக்கினார்.
வைக்கம் வீரர் என்று வரலாற்றில் பேசும்படியான முதல் சமுதாயப் போரை நடத்தியது இந்த மண்ணில்தானே!  திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நாடார்கள் பட்ட பாடு கொஞ்ச நஞ்ச மல்லவே! ஒரு நாடார், நம்பூதிரியைப் பார்த்தால் 36 அடி தூரம் ஒதுங்கிக் கொள்ள வேண்டும். நாயர் ஒருவரைக் காண நேர்ந்தால் 12 அடி தூரத்துக்கு அப்பால் விலகிப் போகவேண்டும்.
பொதுச் சாலைகளைப் பயன்படுத்த முடியாது. பொதுக் கிணறுகளில் நீரும் எடுக்க முடியாது. குடை பிடிக்கவோ, செருப்பு அணியவோ உரிமை கிடை யாது. பொன் நகை பூணக் கூடாது. பெண்கள்  இடுப்பில் தண்ணீர்க் குடம் எடுத்துச் செல்லக் கூடாது. தோள் சேலை (இரவிக்கை) அணியக்கூடாது.
இவற்றை எதிர்த்து வைகுண்ட சாமிகள் நடத்திய போராட்டங்கள் சாதரணமானவையல்லவே!  கன்னியாகுமரிக்கு காந்தியார் வந்தார். அது குறித்து கன்னியாகுமரி தரிசனம் எனும் தலைப்பில் நவஜீவனில் (29-3-1925) காந்தியாரே எழுதியதுண்டு. காந்தியார் வெளிநாடு சென்று திரும்பியதால் கன்னியாகுமரி அம்மன் கோவிலுக்குள் செல்ல அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை. எவ்வளவு பிற்போக்குத்தனம்! இதோ காந்தியார் எழுதுவதைப் படிப்போம்:
நான் இங்கிலாந்துக்குச் சென்ற வனாதலால், கோவிலுக்குள்ளே போக அனுமதிக்கப்பெறவில்லை. தீண்டத் தகாதவர்களுக்காகிலும் அவர்களு டைய பிறப்பின் காரணமாக தடை விதிக்கப் பெற்றிருந்தது. இதை எவ் வாறு அனுமதிக்க முடியும்? கன்னியா குமரி அம்மனைத் தீட்டுப்படச் செய்ய முடியுமா? ஆதி காலத்திலிருந்தே இந்தப் பழக்கம் இருந்து வந்திருக் கிறதா? இருக்க முடியாது என்று என் அந்தராத்மா கூறியது. அப்படி இருந் திருந்தாலும் அது பாவமே. ஒரு பாவ மான காரியம் - அது பரம்பரை பரம்ப ரையாக இருந்து வந்திருக்கிறது என்பதனால் மட்டும் பாவமில்லாத தாகவோ அல்லது சிறப்பிற்குரிய தாகவோ ஆகிவிடாது. ஆகையால், இந்தக் களங்கத்தை அகற்றுவதற்கு ஒவ்வொரு இந்துவும் மகத்தான முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டும். அது அவர்களுடைய கடமை என்பதில் எனக்கு அதிக நம்பிக்கை ஏற்பட்டது என்று காந்தியார் எழுதியுள்ளார் நவஜீவனில்.
இந்தச் சூழல் உள்ள பகுதியிலே தந்தை பெரியார் அவர்களின் சுயமரியாதைப் பிரச்சாரம், திராவிடர் கழகத்தின் செயல்பாடுகள் மிகத் தீவிரமாகவே கடந்த காலத்தில் இருந்து வந்திருக்கின்றன.
வைக்கம் போராட்டத்தின் காரண மாக புதிய மனோபாவம் மக்கள் மத்தி யில் கிளர்ந்து எழுந்தது.
நாகர்கோவிலில் அண்மைக் காலத்தில் நம் இயக்கப் பணிகள் சிறப்பான வகையில் நடந்து வந்திருக் கின்றன.
நாகர்கோவில் நகருக்குள் நுழையும் வாயிலிலேயே தந்தை பெரியார் சிலை - பெரியார் படிப்பகம் - பகுத்தறிவு நூல் விற்பனையகம் என்று திட்டமிட்ட வகையில் ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. விடுதலை சந்தா சேர்ப்பில் முக்கியமான மாவட்டமாக இருப்பது மகிழ்ச்சிக்குரியது. கோட்டார் சுயமரியாதைப் படிப்பகம் 1929 முதல் இயங்கி வருகிறது.
நாகர்கோவில் மண்டல மாநாடு வரும் 27 ஆம் தேதி என்கிறபோது  இந்தப் பின்னணி வரலாறுகள் எல்லாம் நம்முன் நிழலாடுகின்றன.
மீண்டும் ஒரு வரலாறு படைக்க இருக்கிறோம். தமிழர் தலைவர் அவர்கள் பங்கேற்கும் மாநாட்டின் தனிச் சிறப்பு!
வாழ வைக்கும் ஒழிக முழக்கங்கள் எனும் வித்தியாசமான தலைப்பில் கருத்தரங்கம் நடைபெறும், இது ஒரு வித்தியாசமான தலைப்பே! நமது தமிழர் தலைவர் அவர்கள் தந்தை பெரியார் பிறந்த நாள் விடுதலை மலரில் (1974) எழுதிய கட்டுரையின் தலைப்பு இது. வந்து பாருங்கள் தெரியும். உங்கள் உற்றார் உறவினர்களை யும், விடுமுறை காலமாதலால் வீட்டுப் பிள்ளைகளையும் அழைத்து வாருங் கள்! அருமையான வாய்ப்பைத் தவற விடாதீர்!

- மின்சாரம் -



இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...