Monday, March 26, 2012

மசாலா!


கூடங்குளம் அணுமின் நிலையத்தைத் திறக்க வேண்டுமா? மூட வேண் டுமா? என்ற பிரச்சினை மக்கள் மத்தியில் நிலவி வருகிறது. இதில் மத வாதத்தை வழக்கம்போல சங்பரிவார்க் கும்பல் திணித்துப் பிரச்சி னையைத் திசை திருப்பி வருகிறது.
இதில் சிவசேனை என்றஅமைப்பு (அதுவும் சங்பரிவார் சேனையின் மகாபாரதக் குழந்தைதான்) மேற்கொண்ட ஒரு செயல்தான் அதிபுத்திசாலி (?)த் தனமானது.
பொள்ளாச்சி அருகே மாசாலை அம்மன் என்ற ஒரு கோவில் இருக்கிறது. அந்தக் கோவிலில் மசாலா அரைத்தல் சடங்கை சிவ சேனை செய்திருக்கிறது.
எதற்காக இந்தச் சடங்காம்?
தமிழ்நாட்டில் மின் வெட்டு நீங்க வேண்டும். கூடங்குளம் நிலையம் வேலை செய்யத் தொடங்க வேண்டும். அதற்குத் தடையாகவிருக்கும் உதயகுமாரும் அவரின் ஆதரவாளர்களும், அமைப் பும் அழிய வேண்டும் என்பதுதான் (என்ன நல்ல எண்ணம்!)
அந்த மசாலா அரைப் புச் சடங்கில் உள்ள மசாலா இதுதான். மண்டையில் மசாலா இருக்கிறதா என்ற கேள்வி இப்படித்தான் வந்திருக்குமோ, என்னவோ!
சடங்குகள் செய்வதால் ஒரு பிரச்சினையைத் தீர்க்க முடியும் என்றால் மனித முயற்சிகள் எதற்கு? அரசுகள் எதற்கு? நிருவா கங்கள் எதற்கு? திட்டங் கள்தான் எதற்கு?
இது புரியாமல் இந்த மண்டு மசாலாக்கள் இப்படி நடக்கலாமோ என்ற கேள்வி எழுத்தான் செய்கிறது. சிவசேனாக்காரர்கள் எண் ணம் நிறைவேறக் கூடாது என்று எதிர் சடங்கு ஒன்றை நடத்த சடங்கு இல்லாமலா இருக்கும் இந்த அர்த்தம் உள்ள இந்து மதத்தில்)
தமிழ்நாட்டில் இராசி புரம் காவல் நிலையத்தில் ஒரு வேலை செய்திருக் கிறார்கள்.

தொடர் கொள்ளையில் ஈடுபட்ட ஒரு கும்பலைப் பிடித்து விட்டார்களாம். இதைச் செய்வதற்குத் தானே காவல்துறை இருக்கிறது.
அப்படியெல்லாம் அவர்கள்மீது இல்லாத திறமையைப் புகுத்தக் கூடாது. அவர்களது அது போன்ற நம்பிக்கையெல் லாம் அறவே கிடையாது.
அதனால் என்ன செய் தார்கள் கொள்ளையர்கள்? பிடிபட்டதற்காக நேர்த்திக் கடன் என்ற பெயரில் கிடா வெட்டிப் பூஜை செய் திருக்கிறார்கள்.
போகிற போக்கைப் பார்த்தால் காக்கி உடை களைக் கழற்றி எறிந்து விட்டு காஷாயம் தரித்துக் கொண்டால் ஆச்சாரியப் படுவதற்கு ஒன்றும் இல்லை. - மயிலாடன்


.
 

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...