Monday, March 26, 2012

அட ராமா?


அயோத்தியில் தான் இராமன் பிறந்தான்.. அங்குதான் அவன் பிரசவம் நடந்தது. ராமன் என்றால் சாதாரண மானவைனல்ல! சென் னையில் தங்கசாலையில் அத்வானிகூட பேசினார்.
ராம் என்று சொல்லி கற்களைக் கடலில் போட் டதும், என்ன ஆச்சரியம்! அப்படியே அது பாலமாக ஆகிவிட்டதாம். அப்படிப் பட்ட சக்தி வாய்ந்தவன் எங்கள் ராமபிரான் என்று கதைக்கிறார்களே!
அப்படி இருக்கும் பொழுது வீணாக ஏன் பாபர் மசூதியை இடிக்க வேண்டும்? வழக்குகளில் சிக்க  வேண்டும்? ராமன் கோவிலைக் கட்ட ஏன் முயற்சிக்க வேண்டும்? ராம் ராம் என்று பஜனை பாடினால் ராமன் கோவில் எழும்பி விடாதா?
இன்னொரு முக்கிய தகவல்: ராமன் பிறந்த தாக இவர்கள் கதைக் கிறார்களே, அந்த அயோத்தி சட்டமன்ற (உ.பி.) தேர்தலின் தற் போதைய முடிவு என்ன தெரியுமா?
5 முறை அயோத்தி யில் வெற்றி பெற்ற பிஜேபியைச் சேர்ந்த லல்லுசிங் சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் தேஜ் நாராயணனிடம் மண் ணைக் கவ்வியுள்ளார்.
1991 தேர்தலில் அதே தொகுதியில் பிஜேபி வாங்கிய வாக்குகள் 51.3 விழுக்காடு; அடுத்த தேர்தலில் 38.72 விழுக் காடு; அதற்கடுத்து 37 விழுக்காடு வாக்குப் பெற்று, வெற்றிப் பெற்ற ராமன் கட்சியான பி.ஜே.பி. இந்தத் தேர்தலிலோ தோல்வியைத் தழுவிக் கொண்டு விட்டது.
அயோத்தி அடங்கிய பைசாபாத் மாவட்டத்தில் உள்ள மொத்தம் 5 தொகு திகளில் 4 இடங்களில் பிஜேபி மண்ணைக் கவ்வி யது என்பது இன்னொரு கூடுதலான தகவலாகும்.
அயோத்தியில் 2ஆவது இடம்; மிலகிபூர் தனித் தொகுதியில் மூன் றாவது இடம்; கோசை கன்ஜில் தொகுதியில் 4ஆவது இடம்; பீகபூரில் 5ஆவது இடம் பி.ஜே. பி.க்கு கிடைத்துள்ளது. கோசை கன்ஜ் தொகு தியில் எவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் பி.ஜே.பி. தோற்றது தெரியுமா? ஒரு லட்சத்து 23 ஆயிரம்.
அட ராமா? உன் அபார சக்தி இவ்வளவு தானா? அந்தோ பரிதாபம்!
ராமன் கோவிலை மக்கள் நிராகரித்து விட் டனர் என்று ஏன் இந்த ஊடகங்கள் வாயைத் திறக்கவில்லை?
பார்ப்பனர்களுக்கே வெளிச்சம்!   - மயிலாடன்


.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...