Wednesday, March 21, 2012

பேத ஒழிப்பு


திராவிடர் இயக்கம் என்ன செய்தது? நா கூசாமல், அறிவு நாணயம் இல்லாமல், நன்றி உணர் வையும் தூக்கி எறிந்து சிலர் புறப்பட்டுள்ளனர்; இவர்களின் குரல் பார்ப் பனர்களின் வாடகை ஒலி பெருக்கி!
சென்னையில் உணவு விடுதிகளில் என்ன எழு தப்பட்டு இருந்தது தெரி யுமா?
பஞ்சமர்களும், நாய் களும், பெருநோய்க்காரர் களும் நுழையக்கூடாது (குடிஅரசு, 3.5.1936) என்று எழுதப்பட்டு இருந்தது!
இந்த நிலை நீக்கப் பட்டதற்கு யார் காரணம்? எந்த இயக்கம் காரணம்? எந்தத் தலைவர்கள் மூல கர்த்தாக்கள்?
இரயில்வே நிலையங் களில்தான் என்ன நிலை? பிராமணாள், சூத்திராள் என்று இடம் பிரித்து அறி விப்புப் பலகை தொங்க வில்லையா?
இது ஒழிக்கப்பட்ட வரலாறு என்ன?
1924 இல் கோவை சி.எஸ். இரத்தினசபாபதி முதலியார் அவர்கள் இரயில்வே உணவு விடுதி களில் பார்ப்பனர் - பார்ப்ப னர் அல்லாதார் பேதம் இருக்கக் கூடாது என்று இரயில்வே ஆலோசனைக் கமிட்டியிலே தீர்மானம் கொண்டு வந்தபோது காளிதாச அய்யர் என்ற ஒரு பார்ப்பனர் பிடிவாதம் செய்து கெடுத்தார். ஆனால், 16 ஆண்டுகளுக் குப் பிறகு தந்தை பெரியார் அவர்கள் செய்த முயற்சி யிலே ஈடுபட்டு வெற்றியும் கண்டார். 27.1.1941 விடுதலையில் இந்திய கவர்ன்மென்ட் கவனிப்பார் களா...? என்ற தலையங் கத்திலே பிராமணாள் - சூத்திரர் பேத நிலையைக் கடுமையாக விமர்சித்து எழுதி இருந்தார்.
தந்தை பெரியார் தலையங்கத்திலே உள்ள நியாய உணர்வைக் கண்ட அரசினர் 8.2.1941 அன்று முதல் இரயில்வே உணவு விடுதியில் உள்ள பார்ப் பனர் - பார்ப்பனர் அல்லா தார் பேத நிலையை ஒழிக்க உத்தரவிட்டிருந்தனர். ஆனால், அது இரயில் வேயில் உள்ள எல்லா உணவு விடுதிகளுக்கும் அல்லாமல், எம்.எஸ்.எம். உணவு விடுதி என்ற அளவிலே இருந்தது. ஆனால், தந்தை பெரியார் அவர்களின் தொடர் போராட்டத்தினால் 20.3.1941 முதல் எல்லா இரயில்வே நிலையங் களிலும் இது அமல்படுத் தப்பட்டது.
30.3.1941 ஆம் நாள் இரயில்வேயில் பேதம் ஒழிந்த நாளாகக் கொண் டாடுமாறு விடுதலையில் அறிக்கை வெளியிட்டார் தந்தை பெரியார். தந்தை பெரியாரும், அண்ணாவும் சேலத்தில்  கலந்துகொண் டனர்.
இந்த வரலாற்றையெல் லாம் தெரிந்துகொள்ளாமல் திராவிடர் இயக்கம் என்ன செய்தது என்று நாவை நாசகரமாகச் சுழற்ற வேண்டாம்!   - மயிலாடன்




.
 

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...