Wednesday, March 21, 2012

சோதிடப் பாடத் திட்டத்தை மதுரை காமராசர் பல்கலை. கைவிட்டது!

கழகப் போராட்டத்திற்கு வெற்றி! சோதிடப் பாடத் திட்டத்தை மதுரை காமராசர் பல்கலை. கைவிட்டது!


மதுரை, மார்ச் 21- சோதிட பாடத்தை அறிமுகப்படுத்தும் தனது திட்டத்தை மதுரை காமராஜர் பல்கலைக் கழகம் இப்போது  கைவிட்டுவிட்டது. திராவிடர் கழகம் மற்றும் பகுத்தறிவாளர்கள் தெரிவித்த கண்டனம், மேற்கொண்ட போராட்டங்கள் காரணமாக இந்த முடிவுக்கு பல்கலைக்கழகம் வர வேண்டியதாயிற்று.
கடந்த டிசம்பர் மாதத்தில்,  சோதிடப் பாடத்தில் சான்றிதழ் மற்றும் பட்டய வகுப்புக் தொடங்குவதற்கு பல்கலைக் கழகத்தின் சிண்டிகேட் இசைவு அளித் ததை அடுத்து, பல்கலைக் கழகத்தின் தொலைதூரக் கல்வி இயக்ககம் இப் பாடத்தை அறிமுகப்படுத்தத் தேவையான ஏற்பாடுகளை செய்து வந்தது. சோதி டத்தை ஒரு பாடமாக அறிமுகப்படுத்து வதற்கு அகாடமிக் கவுன்சில் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
நேற்று நடைபெற்ற கவுன்சில் கூட்டத்தில் ஒத்தி வைப்புத் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்த எஸ்.கிருஷ்ண சாமி, ஒரு பல்கலைக்கழகம் என்பது  காரண காரியங்களையும், பகுத்தறி வையும் கற்பிக்கும் ஓரிடம் என்பதால், சோதிடப் பாடங்களைத் தொடங்கக் கூடாது என்று கூறினார்.
பகுத்தறிவுக்கு விரோதமான மூடநம்பிக்கைகளைப் பிரச்சாரம் செய்யக்கூடாது. சோதிடப் பாடத்தை அறிமுகப்படுத்த ஒப்புதல் அளித்த சிண்டிகேட் இத்திட்டத்தை அகாடமிக் கவுன்சில் மற்றும் செனட்டின் முன் ஒப்புதலுக்காக வைத்ததை அறிந்து அதிர்ச்சியை அளித்தது என்று அவர் கூறினார்.
என்.பெரியதம்பி, அய். இஸ்மாயில் போன்ற மற்ற உறுப்பினர்களும் இந்த ஒத்தி வைப்புத் தீர்மானத்துக்கு ஆதரவு அளித்ததுடன், சென்னை யில் நடைபெற்ற சிண்டிகேட் கூட்ட முடிவின் அடிப் படையில், ஒரு புழக்கடை வழியில் சோதிட பாடத்தை அறிமுகப்படுத்த பல்கலைக் கழகம் முயற்சிப்பதைக் கண்டித்தனர்.
அகாடமிக் கவுன்சில் மற்றும் செனட் உறுப்பினர் களின் கருத்துகளுக்கு மதிப்பளித்து, சோதிடப் பாடம் அறிமுகப்படுத்தும் திட்டத்தை பல்கலைக் கழகம் திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என்று மற் றொரு உறுப்பினர் எம்.பி.ஆர்.ராஜசேகரன் கூறினார்.
அறிவியலுக்கு விரோதமாக மூட நம்பிக்கை அடிப்படையில் ஒரு பல்கலைக் கழகத்தில் சோதிடத்தைப் பாடமாக வைப்பது சரியில்லை; உடனே கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி திராவிடர் கழகத்தின் சார்பில் மதுரையில் 20.1.2012 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.


.
 2

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...