Thursday, March 22, 2012

ஈடில்லாதது


திராவிடர் கழகத்திற்கு - அதன் தோழர்களுக்கு இந்த நாட்டில் இருக்கும் கம்பீர மான மரியாதை என்ன தெரி யுமா? அவர்கள் கொள்கை வாதிகள் என்பதுதான்.
எந்தக் கட்சியிலும் உறுப் பினராகச் சேருவதற்கு அதற்குரிய படிவத்தைப் பூர்த்தி செய்து நுழைவுக் கட்டணத்தைச் செலுத்தி னால் போதும். உறுப்பினர் அட்டை பளபளப்பாகக் கிடைத்துவிடும்.
திராவிடர் கழகத்தில் அப்படி எளிதாகச் சேர்ந்து விட முடியாது. காரணம் - அதற்கென்று வலுவாக நிற்கக்கூடிய கொள்கை.
எடுத்த எடுப்பிலேயே பி.எச்.டி.தான்- கடவுள் இல்லை, இல்லவே இல்லை என்பதை ஏற்றுக் கொள்வ தோடு அதன்படி நடந்து காட்டவேண்டும்.
அதனால்தான் இலட்சக் கணக்கான உறுப்பினர்கள் இங்குக் குவிவது கிடையாது. மறைந்த டார்பிடோ ஏ.பி.ஜனார்த்தனம், எம்.ஏ., சொல்லுவார்: பல்லாயிரம் பன்றிக் குட்டிகளை விட ஒரு சிங்கக் குட்டி மேல் என்பார்.
ஒரு தகவலை புதுச் சேரியிலிருந்து அதன் தலைவர் மானமிகு சிவ. வீரமணி அவர்கள் அனுப்பி யுள்ளார்.
புதுச்சேரி திராவிடர் கழகத் துணைத் தலைவர்  சு.துளசிராமன் - கதிர்காமம் ஆனந்தா நகரில் தாம் கட்டி யுள்ள இல்லத்தை எப்படி அறிமுகம் செய்து திறப்பு விழா நடத்தினார் என்பது தான் அந்தச் சேதி.
புதிய இல்லத்தைத் திறந்து வைத்தவர்கள் கண வனை இழந்த கைம் பெண்கள். ( பெற்ற மகன் -மகள் திருமணம் நடக்கும் போது கூட அவர்கள் அந்த இடத்தில் இருக்கக்கூடாது என்று நம்புகிற கொடிய சமூகம் இது என்பதை இந்த இடத்தில் கட்டாயம் நினைவு கூர்க! )
நடந்ததோ செவ்வாய்க் கிழமை!  (செவ்வாய், சனி கிழமைகளில் எந்த நல்ல காரியத்தையும் செய்யக் கூடாது என்பதில் குரங்குப் பிடியாக இருக்கக்கூடிய நம்பிக்கையாளர்கள் வாழும் நாடு என்பதையும் கவனத் தில் கொள்க! )
அதுவும் எமகண்ட நேரத்தில் (செவ்வாய் 12 மணி முதல் 1.30 மணி வரை) இந்நிகழ்ச்சி நடந்துள்ளது.
(இராகு, எமகண்டம், குளிகை என்று நாள் ஒன்றுக்கு நான்கரை மணி நேரத்தைக் கெட்ட நேரம் என்னும் குழியில் புதைத்து பேன் குத்திக் கொண்டு இருக்கும் படித்தவர்கள் உண்டு என்பதையும் எண் ணிப் பார்க்க! )
இந்த மூடக் கும்மிருட் டுச் சூழ்ந்த சமூகத்தில் தந்தை பெரியாரின் தொண் டன், கறுப்புச் சட்டைக்காரன் - மூட மதியின் இருளை விரட்டும் வகையில், இதோ பார். இந்த மூடத்தனத்தின் முதுகெலும்பை முறித்து வாழ்ந்து காட்டுகிறோம்! என்பதை செயல்முறைப் படுத்திக் காட்டும்  திராவிடர் கழகத் தோழர்களுக்கு ஈடு இணை ஏது?
- மயிலாடன்


.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...