Tuesday, March 20, 2012

ராஜபக்சேவின் குள்ளநரித்தனமும் அமெரிக்காவின் அதிரடி திட்டமும்!


ஜெனீவா, மார்ச். 20- போர் குற்றங்களுக்காக இலங்கையை தண்டிக்க வேண்டும் என்று அய்.நா. மனித உரிமை பேரவையில் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்துள்ளது.

இந்தத் தீர்மானம்மீது நாளை மறுநாள் விவாதம் நடக்க உள்ளது. அதற்கு அடுத்த நாள் (23- ஆம் தேதி) அந்த தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.  

இந்தியா அந்தத் தீர்மானத்தை ஆதரித்து இலங்கைக்கு எதிராக வாக்களிக்கும் என்று பிரதமர் மன்மோகன்சிங் நேற்று அறிவித்தார். இது இலங்கைக்கு கடும் அதிர்ச்சியை அளித்துள்ளது. என்றாலும் கடைசி நிமிடத்தில் இந்தியா தங்களுக்கு சாதகமாக மாறும் வகையில் ஏதாவது ஒரு முடிவை எடுக்கும் என்று இலங்கை தலைவர்கள் இன்னும் நம்பிக்கையில் உள்ளனர்.

ஆனால் இந்தியாவை தொடர்ந்து நைஜீரியா, கேமரூன் உள்பட சில ஆப்பிரிக்க நாடுகள் இலங்கைக்கு எதிராக மாறி உள்ளன. இது இலங்கை தலைவர்களுக்கு கவலையை அளித்துள்ளது.

இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் பீரிஸ் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்ததால் அதிபர் மகிந்த ராஜபக்சேயும் கலக்கம் அடைந்துள்ளார்.  

அய்.நா.சபையில் கொண்டு வரும் தீர்மானத்தை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்று ராஜபக்சே குள்ளநரி வேலைகளை தொடங்கியுள்ளார். இலங்கை அமைச்சர் பீரிஸ் இதற்காக ஜெனீவா சென்றுள்ளார்.

அங்கு அவர் இன்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார். அப்போது இந்தியா ரகசியமாக உதவ வேண்டும் என்று பேச்சு நடத்துவார் என கூறப்படுகிறது.

ஆனால் இந்த விஷயத்தில் இந்தியா நழுவும் வகையில் நடந்து கொள்ளும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.  

இந்தியாவின் முடிவு இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. இந்தியாவின் முடிவால், மேலும் பல நாடுகள், இலங்கைக்கு எதிராக மாறும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இதனால் இதுவரை இலங்கை செய்துவந்த ராஜதந்திர முயற்சிகள் தோல்வி அடையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இந்த நிலையில் இலங்கை சில ரகசிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.  

இலங்கை நரித்தனமாக செயல்படுவதை அறிந்த அமெரிக்கா, சுமார் 200 நிபுணர்களை அய்.நா.சபைக்கு அனுப்பி உள்ளது. அவர்கள் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை வெற்றிபெற செய்ய பல்வேறு ஒருங்கிணைப்பு பணிகளை செய்து வருகிறார்கள்.

சில நாடுகள் கடைசி நிமிடத்தில் மனம் மாறிவிடக்கூடாது என்பதற்காக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் ஜெனீவா விரைந்துள்ளார்.

இது இலங்கையை நிலைகுலைய செய்துள்ளது.


.
 

தொடர்புடைய செய்திகள்:
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...