Sunday, March 18, 2012

மனித உரிமைகள் விடயத்தில் இந்தியாவின் நிலைப்பாடென்ன?


2011 ஜூன் 14ஆம் தேதி பிரிட்டன் அலை வரிசை வெளியிட்ட கொலைக் களக்காட்சி இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டின் தொடக்கத் தில்கூட நாகரிகமற்ற மனித மாமிசத்தைத் தின்னும் கூட்டம் இருக்கிறதே என்று எண்ணித் தலைகுனியும் ஒரு நிலையை ஏற்படுத்தியது.
கண்கள் கட்டப்பட்டும், கைகள் பின்னால் கட்டப்பட்டும் நிர்வாணமாக்கப்பட்டு தமிழினக் கைதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பெண்கள் கொல்லப்பட்டது மட்டுமல்ல; அவர்கள் உடலை காமவெறி பிடித்த ஓநாய்கள் கடித்துக் குதறி, ரத்தக் காட்டில் மிதக்கச் செய்தன.
இப்பொழுது பிரிட்டன் தொலைக்காட்சி ஒளிபரப்பிய காட்சிகளோ அதைவிடக் குரூரமானவை. தமிழர் பிணங்கள் குப்பைக் கூளங்களாக அலங்கோலமாகக் காணப்படுகின்றன.
மாவீரன் பிரபாகரனின் 12 வயது மகன் - போருக்குஎந்தவிதத்திலும் சம்பந்தமில்லாத அந்தச் சிறுவனை நெறிமுறைகளுக்கு சற்றும் பொருந்தாத வகையில் பக்கத்தில் இருந்து துப்பாக்கிக் குண்டுகளால் துளைத்துக் குதியாட்டம் போட்டுள்ளார்களே - இவற்றைப் பார்த்தாவது இந்தியாவுக்கு மனிதநேயம் கசியவில்லை என்றால் இந்தியாமீது கடுமை யான வெறுப்புதானே கொழுந்து விட்டு எரியும்?
இவ்வளவு கொடுங்கோன்மையை செய்த அந்த நாடு இந்தியாவின் நண்பன் என்று இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் சற்றும் கூசாமல் கூறுகிறார் என்றால் இதனைக் கேட்க சகிக்க முடியவில்லை.
ஹிட்லர் என் உயிருக்கு நிகரான நண்பர் என்று ஒருவர் சொன்னால், அவரைப் பற்றி என்ன நினைப்பார்கள்? அந்த இடத்தில்தான் இப்பொழுது இந்தியா இருக்கிறது.
ஏன் இந்தியா இந்தப் பிரச்சினையில் கல் நெஞ்சமாக இருக்கிறது? உண்மைக்கு மாறாக நடந்து கொள்கிறது, நியாய விரோதம் என்று தெரிந்திருந்தும் இலங்கையை ஏன் சார்ந்து நிற்கிறது? என்பது நியாயமான கேள்வியாகும்.
இதற்கான பதிலும் எளிதே! ஈழத் தமிழர் களைக் கொன்று குவிப்பதற்கு இராணுவத் தளவாடங்களை, கருவிகளை, யுத்தக் கப்பலை பயிற்சிகளை அளித்ததே இந்தியாதானே?
லட்சக்கணக்கான ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டனர் என்றால் அதற்குப் பொறுப்பு ஏற்க வேண்டிய இடத்தில் இருக்கும் இந்தியா, எப்படி இலங்கையைக் கண்டிக்கும்?
இது இந்தியாவின் தொண்டைக்குள் சிக்கிய முள்போன்றது. ஆனாலும் அதற்கான காரண மும், பொறுப்பும் இந்தியாதானே?
ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலை தொடர்பாக மனித உரிமைகள் மன்றத்தின் கூட்டத்தைக் (Human Rights Council) கூட்டுமாறு 17 நாடுகள் கையொப்பமிட்டு விடுத்த வேண்டு கோளை ஏற்று அந்தக் கூட்டம் கூட்டப் பெற்றதே - அதன் நிலை என்ன?
இனப்படுகொலையைத் திட்டமிட்டுச் செய்த இலங்கை அதிபர் ராஜபக்சே மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, இலங்கை அதிபரின் நடவடிக்கைகளுக்குப் பாராட்டுத் தெரிவிக்கும் தீர்மானம் அல்லவா நிறைவேற்றப்பட்டது.
அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்குக் கைதூக்கி ஆதரவு தெரிவித்தது இந்தியா என்பதை நினைவுபடுத்திக் கொண்டால் இப்பொழுது இந்தியா நடந்து கொள்ளும் போக்கு ஆச்சரியத்தைக் கொடுக்காது.
ஆனால் ஒன்று, இந்தியாவின் மரியாதை இம்மாத இறுதியில் ஜெனிவாவில் நடக்க உள்ள வாக்கெடுப்பில் இலங்கைக்கு எதிராக நடந்து கொள்வதைப் பொறுத்தே இருக்கிறது.
இந்தியாவின் மரியாதை மிஞ்சுமா? மனித உரிமைகள் விடயத்தில் இந்தியா பிற்போக்குத் தனமானது என்ற பெயரை ஈட்டப் போகிறதா? எங்கே பார்ப்போம்!


.
 3

Comments 

 
#1 Ajaathasathru 2012-03-17 21:55
முன்பெல்லாம் பாலஸ்தீனத்திலும ், வியட்நாமிலும் நடந்த மனித உரிமை மீறலுக்கு மற்ற நடுநிலை நாடுகளுடன் சேர்ந்து கண்டனம் செய்த இந்தியா, இன்று கைக்கூலி வாங்கி கையும் களவுமாக பிடிபட்ட அரசு அதிகாரி போல மௌனமாய் இருப்பது ஏன்????
இக்கருத்துக்கு உங்கள் கருத்து .?
 

 
 
தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  
1000 எழுத்துகள் மீதமுள்ளன

 
Security code
Refresh

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...