Friday, March 16, 2012

இரத்தக் கண்ணீர்!


குஜராத் மாநிலத்தில் மதக் கலவரம் இப்பொ ழுது தான் நடக்கிறதா? இதற்கு முன்பும் நடந் துள்ளதே என்று, அம் மாநில முதல் அமைச்சர் நரேந்திரமோடி கூறியுள் ளதன் மூலம், இவர் ஆட்சியில் மதக் கல வரங்கள் நடந்திருப்பது உண்மைதான் என்பதை ஒப்புக் கொண்டுள்ளார்.
என்னதான் சாமர்த் தியம் காட்டினாலும் சிறு மழை பெய்தால்கூட சாயம் வெளுத்துப் போய் விடுமே!
பெரிய பெரிய அதி காரிகளே  காவல்துறை  குஜராத்தில் நடந்தது என்ன என்பதை செதிர் காயாக உடைத்துக் காட்டி விட்டனரே!
உண்மையைக் கூறிய தற்காக காவல்துறை அதிகாரி சஞ்சய்பட் மோடி ஆட்சியிலே சிறைக்குச் செல்ல வேண் டியதாயிற்று. மாநிலக் காவல்துறை அதிகா ரிக்கு எதிராக ஒரு கான்ஸ்டேபிளிடம் புகார் மனு வாங்கி அம்மாநில அதிகாரியைச் சிறையில் தள்ளும் அளவுக்குக்  கீழ்த்தரமான இந்த மோடிக்கு மூடிபோட்டுக் காட்டி மோகனராகம் பாடும் சோ ராமசாமி அய்யர்கள் தமிழ்நாட்டில் உண்டு.
இன்னொரு தகவல்: .கோத்ரா நிகழ்வுக்குப் பின்னர் கட்டவிழ்த்து விடப்பட்ட சிறுபான்மை மக்களான முஸ்லிம் களுக்கு எதிரான கல வரத்தில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பானுமி யான் சி.பி.அய். அதிகாரி ஆர்.கே. ராகவன் தலை மையிலான சிறப்புப் புல னாய்வுக் குழுவின் முன் தெரிவித்த தகவல் நெற் றிப் பொட்டில் குண்டு பாய்ச்சுவது போன்றதே!
வெறியாட்டத்தின் அதிர்ச்சியிலிருந்து இன்னும் விடுபட முடி யாத நிலைக்குத் தள்ளப் பட்ட என் பேத்தி ஒரு மாற்றுத் திறனாளி! அவரிடம் நான் என்ன சொல்லக்கூடும்!
தாக்குதல், கொலை, கொள்ளை போன்ற அனைத்தையும் திட்ட மிட்டு, கூட்டுக் கும்ப லாகத் திட்டமிட்ட வகை யில் செயல்பட்ட கும்பல் தலைமுறை தலைமுறை யாக வாழ்ந்து வந்த எங் களை, எங்கள் சொந்த நிலங்களிலிருந்து பறித்து வெளியேற்றினார்கள். அப்படிப்பட்டவர்கள் சுதந்திர மனிதர்களாக மகிழ்ச்சியோடு நடமாடிக் கொண்டுள்ளனரே - அவர்களைப் பற்றியா மாற்றுத் திறனாளியான என் பேத்தியிடம் சொல்ல முடியும்? என்ற அந்த வார்த்தைகளில்தான் எத்துணை எத்துணை கொந்தளிப்புகளும் துய ரங்களும்! ரத்தக் கண் ணீர் வடிக்கின்றனவே!
இதற்கெல்லாம் சூத் திரதாரியான தாமோதர தாஸ் நரேந்திர மோடி. இந்தியாவுக்கே பிரதமர் ஆக வேண்டுமாம். ஆமாம், இந்தியா சுடு காடாக வேண்டும் என்ற அளப்பரிய ஆசை இந்தப் பார்ப்பனக் கூட்டத்துக்கு!
-  மயிலாடன்


.
 

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...