Friday, March 9, 2012

இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு 22 நாடுகள் ஆதரவு


மவுனம் சாதிக்கிறது இந்தியா!

கொழும்பு, மார்ச் 9- இலங்கையில் கடந்த 2009- ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடந்த போரின் போது சிங்கள ராணுவம் ரசாயன கொத்துக் குண்டுகளை வீசி லட்சக்கணக்கான ஈழத் தமிழர்களை படுகொலை செய்தது.

இந்தக் கொடூர தாக்குதலில் பச்சிளம் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை யாரும் தப்பவில்லை. மனித உரிமைகளை மீறும் வகையில் சிங்கள ராணுவம் போர்க்குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டது பற்றி விசாரித்து இலங்கை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாட்டிலுள்ள அரசியல் தலைவர்கள் தொடர்ந்து வற்புறுத்தி வருகிறார்கள்.

சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் உள்ள அய்க்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் குழுவில் இலங்கை போர்க்குற்றம் பற்றி புகார் அளிக்கப்பட்டது.

சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் உள்ள அய்க்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் குழுவில் இலங்கை போர்க்குற்றம் பற்றி புகார் அளிக்கப்பட்டது. ஆனால் இலங்கை அரசு தாங்கள் ஒருபோதும் போர்க் குற்றத்தில் ஈடுபடவில்லை என்று மறுத்தது. போரின் போது தங்களுக்கு மிகவும் உதவியாக இருந்த ரஷ்யா, இந்தியா, சீனா போன்ற நாடுகளின் ஆதரவை நாடியது.

இந்நிலையில் இலங்கை அரசுக்கு எதிரான மனித உரிமை மீறல் தீர்மானத்தை அய்.நா. மனித உரிமைகள் குழுவில் அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக தாக்கல் செய்தது. இந்தத் தீர்மான நகல் அய்.நா. மனித உரிமைகள் குழுவில் உறுப்பினர்களாக அங்கம் வகிக்கும் இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட 47 நாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நாடுகளின் கருத்துக்களுடன் இந்த தீர்மானத்தின் மனித உரிமைகள் குழு கூட்டத்தில் விவாதமும் பின்னர் வாக்கெடுப்பும் நடைபெறும். அமெரிக்கா அய்.நா. மனித உரிமைகள் குழுவில் திடீரென இந்த தீர்மானத்தை தாக்கல் செய்ததால் இலங்கை கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது.

அதிபர் ராஜபக்சே போரின்போது தங்களுக்கு ஆயுத உதவிகள் செய்த சீனா, இந்தியா, ரஷ்யா போன்ற நாட்டு தலைவர்களை அவசரமாக தொடர்பு கொண்டு ஆதரவு திரட்டி வருகிறார். அவரிடம் சீனா, ரஷ்யா நாட்டு தலைவர்கள் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை எதிர்த்து வாக்களிப்பதாக உறுதி கூறி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஆனால் இந்தியா இந்த தீர்மானத்தை ஆதரிப்பதா? வேண்டாமா? என்பது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை. பிரதமர் மன்மோகன்சிங் இதுவரை தனது கருத்தை வெளியிடாததால் ஈழத் தமிழர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அய்.நா. சபையில் உறுப்பினர்களாக உள்ள 47 நாடுகளில் அமெரிக்காவின் இந்த தீர்மானத்திற்கு பிரான்ஸ், நார்வே, கனடா உள்பட 22 நாடுகள் பகிரங்க ஆதரவு தெரிவித்துள்ளன.

தாங்கள் இலங்கைக்கு எதிராக கொண்டு வந்த தீர்மானத்திற்கு அமெரிக்கா ஆதரவு திரட்டி வருகிறது. இதில் ஏராளமான நாடுகள் அமெரிக்காவின் தீர்மானத்தை ஆதரிப்பதாக உறுதி அளித்துள்ளன.

24 நாடுகளின் ஆதரவு இருந்தால் இந்த தீர்மானத்தை நிறைவேற்ற முடியும் என நம்பப்படுகிறது. அமெரிக்காவின் இந்தத் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று தி.மு.க. தலைவர் கலைஞர் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன்சிங்குக்கு கடிதம் எழுதி உள்ளார். தமிழக அரசியல் தலைவர்களும் இலங்கை போர்க்குற்றத்திற்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா கூறுகையில் இந்த விவகாரத்தில் மத்திய அரசு இன்னும் எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை'' என்றார்.

குறிப்பு: முதன் முதலாக, திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் கடந்த 21 ஆம் தேதி நியாயத்தின் பக்கம் நின்று இந்தியா ஆதரிக்கவேண்டும்என்று அறிக்கை விடுத்திருந்தார்.


தொடர்புடைய செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...