சிக்கன் டிக்கா மசாலா இங்கிலாந்து நாட்டின் கிளாஸ்கோ நகரில் 1960இன் பிற்பகுதியில் முதன் முதலாக கண்டுபிடிக்கப்பட்டது. இங்கிலாந்து நாட்டில் இருந்து இது இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இது இங்கிலாந்து நாட்டின் மிகுந்த புகழ் பெற்ற உணவுப் பொருளாகும். இதை இப்படித்தான் செய்ய வேண்டும் என்று எந்த ஒரு நிரந்தரமான நடைமுறையும் இல்லை. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலிருந்து, இதனைச் செய்ய 48 வேறுபட்ட செய்முறைகள் இருப்பதாகவும், அவை அனைத்திலும் பொதுவாக இருக்கும் ஒரே பொருள் கோழிக்கறிதான் என்றும் Red Curry Guide பத்திரிகை தெரிவிக்கிறது.சிக்கன் டிக்கா என்பது பாரம்பரியமான பங்களா தேச உணவுப் பொருளாகும். ஊறுகாய் போல் செய்யப்பட்ட கோழிக்கறித் துண்டுகள் தந்தூரி என்று அழைக்கப்பபடும் ஒரு மண் அடுப்பில் சமைக்கப்படும். இவ்வாறு சமைக்கும் பழக்கம் பண்டை காலத்தில் மத்திய கிழக்கு நாடுகளில் தோன்றியதாகும். தீ (fire)என்று பொருள் தரும் tinuru என்ற பாபிலோனிய மொழிச் சொல்லில் இருந்து வந்தது இது. முதன் முதலாக ஒரு இங்கிலாந்து உணவு விடுதியின் உணவுப் பொருள் பட்டியலில் தந்தூரி சிக்கன் இடம் பெற்றது. லண்டன் நகர் மோர்டிமைர் தெருவில் உள்ள செய்லார்டு விடுதியில் 1966 இல் இடம் பெற்றது. இதே உணவு விடுதியில்தான் 1979இல் Not the Nine O’Clock News என்பதும் அறிமுகப் படுத்தப்பட்டது. இந்த தந்தூரி சிக்கன் தயாரிக்கும் முறை பின்னர் கிளாஸ்கோவுக்குச் சென்றது. அத்துடன் சேர்த்து சாப்பிட ஒரு வாடிக்கையாளர் ஏதாவது குழம்பு வேண்டும் என்று கேட்டதாக ஒரு கதை நிலவுகிறது. அதன்படி சமையற்காரர் தக்காளி சூப்பை வாசனை திரவியங்கள் மற்றும் வெண்ணெய் சேர்த்து தயாரித்து தந்தாராம்.மசாலா என்பது இஞ்சி, பூண்டு, தக்காளி, வெண்ணெய், நெய், ஏலம், கிராம்பு, மஞ்சள்தூள், மிளகாய்தூள், மற்றும் கொத்துமல்லி, புதினா போன்ற வாசனை தரும் இலைகள் சேர்ந்த கலவையாகும்.மஞ்சள்தான் இதற்கு நல்ல நிறத்தை அளிப்பதாகும். செயற்கைக் காரமான டார்டாசைன் (tartrazine) இதற்கு பதிலாக பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இது கொண்டு தயாரிக்கப்படும் கரிக் கறை துணியில் பட்டால், அதனை எளிதில் நீக்க முடியாது. சிக்கன் திக்கா மசாலாவுக்கு ஒரு நிரந்தரமான செய்முறையோ வண்ணமோ கிடையாது. அது மஞ்சளாக இருக்கலாம், சிவப்பாக இருக்கலாம், பச்சையாகவும் இருக்கலாம். காரமாகவும் இருக்கலாம். மென்மையாகவும் இனிப்பாகவும் இருக்கலாம்.இங்கிலாந்தில் விற்கப்படும் கரி வகைகள் ஏழில் ஒன்று இந்த சிக்கன் டிக்கா மசாலா ஆகும். 230 லட்சம் மசாலா பாக்கெட்டுகள் ஆண்டுதோறும் விற்பனை ஆகின்றன. இங்கிலாந்து நாட்டுத் தயாரிப்பான இதன் விற்பனையில் கிடைக்கும் லாபத்தில் இருந்து பங்களாதேச நாட்டின் சில்ஹட் நகரில் உள்ள பல பள்ளிகளுக்கும் அறக்கட்டளைகளுக்கும் நிதி உதவி அளிக்கப்படுகிறது.இன்று இங்கிலாந்தில் உள்ள 70,000 பணியாளர்கள் வேலை செய்யும் 8,000 இந்திய உணவு விடுதிகளில் 200 கோடி பவுண்டுக்கு வியாபாரம் நடக்கிறது.(நன்றி: ஜான் லாயிட் மற்றும் ஜான் மிச்சின்சன் ‘The Book of General Ignorance’ பொதுவான அறியாமைகள் தமிழில் : த.க. பாலகிருட்டிணன்)
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:- தெரிந்துகொள்வோம் இன்று ஒரு புதிய தகவல்:
- தெரிந்துகொள்வோம் இன்று ஒரு புதிய தகவல்:
- தெரிந்துகொள்வோம் இன்று ஒரு புதிய தகவல்:
- தெரிந்துகொள்வோம் இன்று ஒரு புதிய தகவல்:
- தெரிந்துகொள்வோம் இன்று ஒரு புதிய தகவல்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:- ஓர் அணுவில் என்ன இருக்கிறது?
- தெரிந்துகொள்வோம் இன்று ஒரு புதிய தகவல்:
- நிலவு எது போன்ற மணத்தை வீசுகிறது?
- தெரிந்துகொள்வோம் இன்று ஒரு புதிய தகவல்:
- சூரிய மண்டலத்தில் எத்தனை கோள்கள் உள்ளன?
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
- தெரிந்துகொள்வோம் இன்று ஒரு புதிய தகவல்:
- தெரிந்துகொள்வோம் இன்று ஒரு புதிய தகவல்:
- தெரிந்துகொள்வோம் இன்று ஒரு புதிய தகவல்:
- தெரிந்துகொள்வோம் இன்று ஒரு புதிய தகவல்:
- தெரிந்துகொள்வோம் இன்று ஒரு புதிய தகவல்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
- ஓர் அணுவில் என்ன இருக்கிறது?
- தெரிந்துகொள்வோம் இன்று ஒரு புதிய தகவல்:
- நிலவு எது போன்ற மணத்தை வீசுகிறது?
- தெரிந்துகொள்வோம் இன்று ஒரு புதிய தகவல்:
- சூரிய மண்டலத்தில் எத்தனை கோள்கள் உள்ளன?
No comments:
Post a Comment