Friday, February 10, 2012

பூமிக்கு எத்தனை நிலவுகள் உள்ளன?

பூமிக்கு எத்தனை நிலவுகள் உள்ளன?
குறைந்தது ஏழு நிலவுகள் பூமிக்கு உள்ளன. சந்திரன் என்று வானவியலாளர்கள் குறிப்பிடும் நிலவு என்ற ஒன்றுதான் பூமியை ஒரு குறிப்பிட்ட பாதையில் சுற்றிவரும் ஒரு கோளாக இருப்பதாகும். சூரியனைச் சுற்றிவரும் பூமியைச் சுற்றும் விண்மீனைப் போன்ற குறுங்கோள்கள் இப்போது ஆறு உள்ளன. ஆனால் அவை வெறும் கண்களுக்குத் தெரிவதில்லை.
இந்த குறுங்கோள்களில் முதன் முதலாக அடையாளம் காணப்பட்டது க்ருய்தினி (Cruithne) என்பதாகும். இங்கிலாந்து நாட்டில் முதன் முதலாக வாழ்ந்தவர் என்று ஆவணப்படுத்தப்பட்டுள்ள செல்டிக்  பழங்குடியினத்தின் பெயரையொட்டி ‘Cru-een-ya‘என்று இது அழைக்கப்படுகிறது. 1997இல் கண்டுபிடிக்கப்பட்ட இது ஒரு மூன்று மைல் அகலம் கொண்ட ஒரு விண்கல் இது. இது சுற்றும் பாதை குதிரை லாட வடிவத்தில் அமைந்தது. அதன்பிறகு, மேலும் ஆறு நிலவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.  அவை 2000 PH5, 2000WN10   2002 A29 2003 YN 107. 2004 GU9 என்று பெயரிடப் பட்டுள்ளன.
உண்மையில் இவைகள் எல்லாம் நிலவுகள் இல்லை என்று பல வானவிய லாளர்கள் கூறுவர்.  ஆனால், அவை சாதாரணமாக சுற்றி வரும் எரிகற்கள் அல்ல என்பது மட்டும் உண்மை.  சூரியனைச் சுற்றி வருவதற்கு, பூமியைப் போலவே அவையும் ஓராண்டு காலத்தை எடுத்துக் கொள்கின்றன. (இரண்டு பந்தயக் கார்கள் ஒரே வட்டத்தில் ஒரே வேகத்தில், ஆனால் வெவ்வேறு பாதைகளில் செல்வது போன்று என்று நினைத்துக் கொள்ளுங்கள்.) மிகக் குறைந்த அளவு புவி ஈர்ப்பு விசையைப் பெறும் அளவுக்கு சில நேரங்களில், அவை பூமிக்கு அருகில் வருகின்றன. எனவே, நீங்கள் அதனை போலி நிலவுகள் என்று அழைத்தாலும் சரி, விண்வெளிக் கற்கள் என்று அழைத்தாலும் சரி, அல்லது துணைக் கோள்கள் என்று அழைத்தாலும் சரி,  உற்று நோக்கி ஆய்வதற்கு தகுதி வாய்ந்தவையே அவை.  அவற்றில் சில நாளடைவில் ஒரு முறையான சுற்றுப் பாதையில் நிலைத்து சுற்றத் தொடங்கவும் கூடும் என்பதே இதன் காரணம்.
(நன்றி: ஜான் லாயிட் மற்றும் ஜான் மிச்சின்சன் ‘The Book of General Ignorance’   பொதுவான அறியாமைகள் தமிழில் : த.க. பாலகிருட்டிணன்)


.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...