Saturday, February 11, 2012

விண்வெளிக்கு முதன் முதலாக அனுப்பப்பட்ட விலங்கு எது?


விண்வெளிக்கு முதன் முதலாக  அனுப்பப்பட்ட விலங்கு எது?
பழ ஈ தான் விண்வெளிக்கு முதன் முதலாக அனுப்பப்பட்ட விலங்கு அல்லது உயிரினம். இந்த மிகச் சிறு விண்வெளி வீரர்கள் அமெரிக்காவின் வி-2 ராக்கெட்டில் சில சோளப் பொறிகளுடன் வைத்து 1946 ஜூலையில் விண்ணில் செலுத்தப்பட்டன. அதிக உயரத்தில் கதிர்வீச்சினால் ஏற்படும் பாதிப்புகளை ஆய்வு செய்ய அவை பயன் படுத்தப்பட்டன.
பழ ஈக்கள் சோதனைச் சாலைகளில் சோதனைகளில் பயன்படுத்தப் படுபவதற்கு ஏற்றவை. அறியப்பட்டுள்ள மனிதர்களின் நோய்களில் முக்கால் பங்கு நோய்களின் மரபணு, இந்த பழஈக்களின் மரபணுக்களுடன் ஒத்திருப்பவையாகும்.  அந்த ஈக்களும் இரவில் மனிதர்களைப் போலவே தூங்கச் செய்கின்றன. மயக்க மருந்துக்கு மனிதர்கள் எப்படி எதிர் வினையாற்றுவார்களோ அது போலவே அவையும் எதிர்வினையாற்றுகின்றன. அனைத்துக்கும் மேலாக, அவை வெகு விரைவில் இனப்பெருக்கம் செய்ய இயன்றவை. ஒரு பதினைந்து நாட்களுக்குள் ஒரு பெரும் படையையே அவை உருவாக்கிவிடமுடியும்.
விண்வெளி என்பது பூமியில் இருந்து 100 கி.மீ. (62 மைல்) உயரத்தில் தொடங்குவதாகும். பழ ஈக்களுக்குப் பிறகு, எலிகளையும், அதன் பின்னர் குரங்குகளையும் விண்ணில் அனுப்பினோம்.
முதன் முதலாக விண்வெளிக்கு அனுப்பப்பட்ட குரங்கு 1948இல் அனுப்பப்பட்ட இரண்டாம் ஆல்பர்ட்  ஆகும். அது 134 கி.மீ. (83 மைல்) உயரம் வானில் சென்றது. ஓராண்டுக்கு முன் விண்ணுக்கு அனுப்பப்பட்ட அதன் முன்னோடி முதல் ஆல்பர்ட், 100 கி.மீ. எல்லையை அடையும் முன்பே  மூச்சுத் திணறலினால் இறந்து போனது. இரண்டாம் ஆல்பர்ட் தரை இறங்கும்போது அதன் பாரசூட் விரிவடையாமல் போனதால் அதுவும் இறந்து போனது.
1951இல்தான் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட குரங்கு பத்திரமாக பூமிக்குத் திரும்பி வந்தது. ஆறாவது ஆல்பர்டும் அதனுடன் சென்ற 11 தோழர்களும் பாதுகாப்பாகத் திரும்பினர். என்றாலும் தரையிறங்கியதன் பின் இரண்டு மணி நேரம் கசித்து ஆறாம் ஆல்பர்ட்  இறந்துவிட்டது.
முதலில் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட குரங்குகள், அவை அதன்பின் எவ்வளவு காலம் உயிர் வாழ்கின்றன என்பது பற்றி வேறுபடுத்திப் பார்க்கப் படவில்லை.  ஆனால் 1959இல் அனுப்பப்பட்ட அணில்குரங்கு விண்வெளிப் பயணத்திற்குப் பின் 25 ஆண்டுகள் உயிர்வாழ்ந்து சாதனை படைத்தது.
விண்வெளிக்கு நாய்களை அனுப்புவதையே ரஷ்யர்கள் விரும்பினர். 1957இல் அனுப்பப்பட்ட  இரண்டாம் ஸ்புட்னிக்கில்  லைகா என்ற நாய் அனுப்பப்பட்டது. பயணத்தின்போது வெப்ப அழுத்தத்தால் அது இறந்துபோனது. முதன் முதலாக 1961இல் யூரி காகரின் என்ற மனிதர் விண்வெளிக்கு அனுப்பப்படுவதற்கு முன் குறைந்தது மேலும் 10 நாய்கள் விண்வெளிக்கு அனுப்பப்பட்டன. இவற்றில் ஆறு நாய்கள் உயிர் பிழைத்து வாழ்ந்தன.
1968இல் ரஷ்யர்கள் முதல் முதலாக ஒரு விலங்கை விண்வெளியில் வெகு தொலைவுக்கு அனுப்பினர்.  அது ஒரு ஆமை. நிலவைச் சுற்றி வட்டப்பாதையில் பயணம் செய்த முதல் உயிரினம் என்ற பெருமையையும், உலகிலேயே வேகமாகச் சென்ற ஆமை என்ற பெருமையையும் அது பெற்றது.
விண்வெளிக்கு அனுப்பப்பட்ட மற்ற விலங்குகளில் மனிதக் குரங்குகள் உயிர் பிழைத்தன. கினியா பன்றிகள், தவளைகள், எலிகள், பூனைகள், குளவிகள், சிலந்திகள், மம்மிசோக் என்று அழைக்கப்பட்ட கடினமான ஒரு மீன் ஆகியவையும் இப்பட்டியலில் அடங்கும். 1985இல் பத்து பல்லிகள் ஜப்பானால் முதன் முதலாக விண்வெளிக்கு அனுப்பப்பட்டன.
2003இல் விபத்துக்கு உள்ளான கொலம்பியா விண்வெளிக் கலத்தின் இடிபாடுகளில் அதன் சோதனைச் சாலையில் இருந்த சில புழுக்கள்தான் உயிர் பிழைத்திருந்தது காணப்பட்டது.
(நன்றி: ஜான் லாயிட் மற்றும் ஜான் மிச்சின்சன்  ‘The Book of General Ignorance’  பொதுவான அறியாமைகள் தமிழில் : த.க. பாலகிருட்டிணன்)


.
 1

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...