Monday, February 27, 2012

மத்திய அமைச்சருக்கு அழகல்ல!


மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக ஜெய்ராம் ரமேஷ் என்ற அய்யர் ஒருவர் இருக்கிறார். அதிகப்பிரசங்கித்தனமாக நடந்து கொள்வதில் அவரை அடித்திட வேறு நபர் எங்கும் கிடைக்க மாட்டார்கள்.
கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம், தாலிக்குளம்  ஊராட்சியில் புரா திட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசுகையில்,  இப்பொழுது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்தப் புரா திட்டம் அப்துல்கலாமின் திட்டத்திலிருந்து மாறுபட்டது. கலாமின் திட்டம் முழுத் தோல்வி அடைந்து விட்டது என்று  பேசியுள்ளார் கிறுக்குத் தனமாக. இவ்வளவுக்கும், மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷுக்கு முன்னதாகப் பேசிய கேரள மாநில மக்களவை உறுப்பினர் பி.சி. சாக்கோ, சட்டமன்ற உறுப்பினர் ஏ. பிரதாபன் ஆகியோர் இந்தத் திட்டத்தின்மூலம் முன்னாள் குடியரசுத் தலைவர் விஞ்ஞானி அப்துல்கலாம் அவர்களின் கனவு நனவாகிறது என்று பேசினர்.
அவர்களை அடுத்துப் பேசிய மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் என்ற பார்ப்பனர்தான், சற்றும் பொறுப்பின்றித் தான்தோன்றித்தனமாக கலாமின் திட்டம் முழு தோல்வி என்று முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைத்த கதையாகப் பேசி இருக்கிறார்.
புரா என்ற திட்டம் நகரங்களுக்கு நிகராகக் கிராமங்களை முன்னேற்றும் கருத்துருவை உள்ளடக்கிய மிகச் சிறப்பான திட்டமாகும்.
1944இல் கிராமச் சீர்திருத்தம் எனும் பொருளில் இக்கருத்தினை வெளியிட்டார். தந்தை பெரியார் இந்தியக் குடியரசுத் தலைவரான விஞ்ஞானி ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்கள், வல்லம் - பெரியார் மணியம்மை பல்கலை நிகழ்ச்சிக்கு வருகை தந்த போது, பல்கலைக் கழகத்தின் வேந்தர் டாக்டர் கி. வீரமணி அவர்கள் தந்தை பெரியார் அவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்னர் தெரிவித்த இந்தக் கருத்தை எடுத்துக் காட்டியபோது மிகவும் வியந்தார். காரணம், கலாம் அவர்களும் இத்தகைய திட்டத்தைக் கூறிக் கொண்டிருந்த நேரம்.
கலாம் அவர்கள் எங்கு சென்றாலும், வெளி நாடுகளுக்குச் சென்றாலும் புரா திட்டம் பற்றியும் தஞ்சை வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் இதன் அடிப்படையில் செயல்பட்டு வருவது குறித்தும் பேசி வருகிறார்.
அந்தத் திட்டத்தின் அருமையை - சிறப்பை உணர்ந்து நடுவண் அரசே செயல்படுத்திட முனைந் துள்ளது. கேரள மாநிலத்திலும், அத்திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்ற இடத்தில்தான் மத்திய அமைச்சர் துடுக்குத்தனமாகப் பேசியுள்ளார்.
கலாம் அவர்கள் அளித்த திட்டத்தில் மேலும் சிறு அம்சங்களைச் சேர்த்துச் செயல்படுத்துவதில் தவறு இல்லை.
அறிவியல் துறையில் பிற்காலத்தில் எத்தனையோ மாற்றங்கள் வந்தாலும் மின்சார ஒளி விளக்கைக் கண்டுபிடித்த எடிசனை மறக்க முடியாதே!
இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் கேரளாவில் நடைபெற்ற அந்தத் தொடக்க விழாவின் பின் திரையில் அப்துல்கலாமின் மிகப் பெரிய உருவப்படம் வைக்கப்பட்டு இருந்தது.
விழாவின் நோக்கத்தைப் புரிந்து கொள்ளாமலும், முன்னாள் குடியரசுத் தலைவரால் அறிமுகப்படுத்தப் பட்ட திட்டம் என்கிற மரியாதை இல்லாமலும் எதையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற போக்கில் ஒரு மத்திய அமைச்சர் பேசலாமா?
இதற்கு முன்பேகூட பட்டமளிப்பு விழா ஒன்றில் கலந்துகொண்ட இவர், மேலே அணிந்திருந்த அங்கியைக் கழற்றி எறிந்து விட்டு இது அந்நியனான வெள்ளைக்காரன் ஏற்படுத்திய கலாச்சாரம் அதனை ஏற்க மாட்டேன் என்று பேசினார். அப்பொழுது அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
முல்லைப் பெரியாறு  அணைக்குப் பதிலாக புதிதாக அணை கட்டுவதற்கான இடத்தை கேரள அரசு தேர்வு செய்வதற்கு சுற்றுச்சூழல் அமைச்சர் என்ற முறையில் தன்னிச்சையாக அனுமதியளித்தார். அப்பொழுது சர்ச்சை வெடித்தது. இப்படி சில பேர்களுக்குச் சர்ச்சைகள் மூலம் விளம்பரம் பெறுவதில் தனி ஆர்வம் உண்டு. அந்தப் பட்டியலில் உள்ளவர்தான் இவர் என்பது உண்மையே!
எந்த நிகழ்ச்சிக்குச் செல்லுகிறோம் என்பதைப் பற்றியும், அதன் நோக்கத்தைப் பற்றியும் புரிந்து கொள்ளாமல் முன்னாள் குடியரசுத் தலைவரை அவமதிக்கும் வகையில் ஒரு மத்திய அமைச்சர் பேசுவது அழகல்ல. வன்மையாகக் கண்டிக்கத்தக்க தாகும்.


.
 4

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...