Sunday, February 5, 2012

ஆங்கிலத்திலும், இந்தியிலும் மட்டுமே நுழைவுத் தேர்வா?


தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் 6 லட்சம் மாணவர்கள் 12ஆம் வகுப்புத் தேர்வு எழுதுகின்றனர். இதில் 4.5 லட்சம் இருபால் மாணவர்கள் (75 விழுக்காடு) தமிழைப் பயிற்று மொழியாகக் கொண்டவர்கள். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நுழைவுத் தேர்வு ஒழிக்கப்பட்டு விட்டாலும் மத்திய அரசு நடத்தும் கல்வி நிறுவனங்களில் சேர வேண்டும் என்றால் கட்டாயம் நுழைவுத் தேர்வு எழுதித்தான் தீர வேண்டும் என்ற நிலை உள்ளது.
250-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் மத்திய அரசின் ஆளுகைக்குள் உள்ளன.
எடுத்துக்காட்டாக மத்திய அரசு நடத்தும் சில கல்வி நிறுவனங்கள் இதோ:
1. IIT-JEE (15 IIT -களில் B.E. படிப்பிற்கான நுழைவுத் தேர்வு, சுமார் 10,000 இருக்கைகள்).
2. AIEEE (30 NIT, 5IIIT மற்றும் 3SPA -க்களில் B.E.,  படிப்பிற்கான நுழைவுத் தேர்வு, சுமார் 25,000 இருக்கைகள்).
3. AIPMT   (மாநில அரசு மருத்துவக் கல்லூரிகளில் M.B.B.S. மற்றும் B.D.S. படிப்பிற்கு மத்திய அரசின் 15 விழுக் காடு இடத்தை நிரப்புவதற்கான நுழைவுத் தேர்வு, சுமார் 2500 இருக்கைகள்)
4. AIIMS Entrance (AIIMS) டில்லியில் M.B.B.S.  மற்றும் B.D.S.  படிப்பிற்கான நுழைவுத் தேர்வு, சுமார் 100 இருக் கைகள்)
5. JIPMER Entrance (JIPMER பாண்டிச்சேரியில் M.B.B.S. மற்றும் B.Sc. Nursing படிப்பிற்கான நுழைவுத் தேர்வு, சுமார் 500 இருக்கைகள்)
6. CLAT(இந்தியாவில் உள்ள 14 தேசியச் சட்டப் பல்கலைக் கழகங்களில் L.L.B.. படிப்பிற்கான நுழைவுத் தேர்வு, சுமார் 10,000 இருக்கைகள்)
7. CUCET (இந்தியாவில் உள்ள 42 மத்தியப் பல்கலைக் கழகங்களில்B.A., B.Sc., B.Com., படிப்பிற்கான நுழைவுத் தேர்வு, சுமார் 10,000 இருக்கைகள்)
8. ISAT (இந்திய விண்வெளித் துறையின் கீழ் இயங்கும் IIST திருவனந்தபுரத்தில் B.Tech படிப்பிற்கான நுழைவுத் தேர்வு, சுமார் 500 இருக்கைகள்).
9. IISER SAT (5 IISER களில் Dual B.S+M.S. படிப்பிற்கான நுழைவுத் தேர்வு, சுமார் 2,500 இருக்கைகள்)
10. IISC பெங்களூரில் B.S. படிப்பிற்கான நுழைவுத் தேர்வு, சுமார் 1000 இருக்கைகள்.
11. NATA (மாநிலக் கல்லூரிகளில் B.Arch படிப்பிற்கான நுழைவுத் தேர்வு, சுமார் 1000 இருக்கைகள்)
12. JEE (NCHMCT-யில் B.Sc படிப்பிற்கான நுழைவுத் தேர்வு, சுமார் 5,000 இருக்கைகள்)
13. GAT (NIFT-யில் B.Des மற்றும் B.F.Tech படிப்பிற்கான நுழைவுத் தேர்வு, சுமார் 5,000 இருக்கைகள்)
14. ICAI CPT (ICAI -யில் C.A.  படிப்பிற்கான நுழைவுத் தேர்வு, சுமார் 1000 இருக்கைகள்)
15. ICSI Entrance (ICSI-யில் A.C.S.   படிப்பிற்கான நுழைவுத் தேர்வு, சுமார் 1000 இருக்கைகள்)
16. DAT (NID இல் GDPDபடிப்பிற்கான நுழைவுத் தேர்வு, சுமார் 1000 இருக்கைகள்) மற்றும் பல நிறுவனங்கள் இன்னும் கணக்கெடுக்கப்பட வேண்டும்.
தமிழ்நாட்டில் உள்ள மத்தியக் கல்வியகங்கள்
Indian Institute of Technology (IIT), Chennai.
National Institute of Technology (NIT), Trichy.
Indian Institute of Information Technology, Desigh and Manufacturing (IIITD) Kancheepuram.
National Institute of Fashion Technology, (NIFT), Chennai.
Indian Maritime University (IMU), Chennai
Central University of Tamil Nadu, Thiruvarur.
Central Institute of Hotel Management (HIHM), Chennai...
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த உயர்தரக் கல்வி நிறு வனங்கள் அனைத்தும் மத்திய அரசுக்குச் சொந்தமானவை.
இந்நிறுவனங்களில் சேர வேண்டுமானால் நுழைவுத் தேர்வு எழுதி வெற்றி பெற வேண்டும்.
இந்த நுழைவுத் தேர்வை தாய் மொழியாகிய தமிழில் எழுத முடியுமா என்றால் அதுதான் நடக்காது. நுழைவுத் தேர்வுகள் அனைத்தும் ஆங்கிலத்திலும் இந்தியிலும் மட்டும்தான் எழுத வேண்டும். இது பெரும்பாலும் ஆங்கிலத்தை பயிற்று மொழி யாகக் கொண்ட உயர் தட்டு மக்களுக்கும், இந்தியைத் தாய் மொழியாகக் கொண்ட இந்தி வாலாக்களுக்கும்தான் அனுகூலம் என்பதைச் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதல்ல.
ஆங்கிலத்திலும், இந்தியிலும் மட்டுமே நுழைவுத் தேர்வு எழுத வேண்டும் என்று இருப்பதால், தமிழ்நாட்டில் தமிழ்ப் பயிற்று மொழியின் அடிப்படையில்  படித்த +2 மாணவர்கள் நான்கரை லட்சம் இருபால் மாணவர்களும் நுழைவுத் தேர்வு எழுதி வெற்றி பெற முடியவில்லை. தாய் மொழியான தமிழில் படித்தால் உயர் கல்வியைப் பெற முடியாது என்ற தடை சரியானதுதானா? நியாயமானது தானா?
மத்திய பொதுப்பணி தேர்வாணையம் (UPSC) நடத்தும் இந்தியக் குடிமைப் பணித் தேர்வுகளை (IAS, IPS, IFS முதலிய) அவரவர் தாய்மொழியில் எழுதலாம் (22 மொழிகளில்).
மத்தியப் பணியாளர் தேர்வாணையம் (Staff Selection Commission) பணிகளுக்குத் தமிழ்மொழி உள்பட மற்றவர் களின் தாய் மொழிகளிலும் நுழைவுத் தேர்வு எழுதலாம். மம்தா பானர்ஜி ரயில்வே அமைச்சராக வந்த நிலையில் ரயில்வேயில் உள்ள பணிகளுக்கு இந்தியாவில் அவரவர்கள் தாய் மொழியில் தேர்வு எழுதலாம் என்று ரயில்வே நிதி நிலை அறிக்கை யிலேயே அறிவிக்கப்பட்டதே!
இந்த நிலையில், மய்ய அரசு நடத்தும் உயர் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வை அவரவர்கள் தாய்மொழியில் எழுதுவதற்கு என்ன தடை?
ஆங்கிலத்திலும், இந்தியிலும் மட்டுமே எழுத முடியும் என்பது ஒரு குறிப்பிட்ட சிலருக்கும், இந்தியைத் தாய் மொழியாகக் கொண்ட மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கும்  சாதகமாக இருக்குமாறு செய்யப்பட்ட பிரத்தியேக ஏற்பாடா கவே இது கருதப்பட முடியும். இதனை எதிர்த்து நீதிமன்றங் களில் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. இதற்கு வேலை யில்லாமல் மத்திய அரசு அனைவருக்கும் பொதுவான வகையில் கொள்கை முடிவினை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...