Wednesday, January 18, 2012

கிறிஸ்தவரா வைகோ?


இந்தக் கேள்வியைப் படித்ததும் இன்னும் ஆர்வத் தோடு படிக்க ஆரம்பித்து விடுவார்கள். வைகோஅவர்கள் பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்ய முன் வரா விட்டாலும் தான் ஒரு பகுத்தறிவுவாதி என்று பல இடங்களில் கூறி வருபவர் தான். அவரைப்போய் கிறிஸ்தவரா என்று கேட்கலாமா என்று கேட்பது நியாயமான ஒன்றே.
13.1.2012 நாளிட்ட ஆர்.எஸ்.எஸ். வார ஏடான விஜயபாரதம் 20,21ஆம் பக்கத்தைப் புரட்டுங்கள்.
பரிமலை யாத் திரையை சீர்குலைக்க கிறிஸ்தவர்கள் சதி என்ற தலைப்பில் கட்டுரை ஒன்று வெளிவந்துள்ளது. தமிழ்நாட்டிலிருந்து செல் லும் அய்யப்பப் பக்தர்களில் 50 சதவிகிதத்தினர் குமுளி வழியாக சபரி மலைக்குச் செல்கிறார்கள். முல்லைப் பெரியாறு பிரச் சினை தொடர்பாக குமுளி பகுதியில் கொந்தளிப்பு ஏற்பட்டது. புதிய அணை கட்ட வேண்டும் என்று கேரளாவிலும், இப்போ துள்ள அணையே நீடிக்க வேண்டும் என்று தமிழ் நாட்டிலும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த இரண்டு போராட்டத்திற் கும் பின்னணியில் இருப் பது கிறிஸ்தவர்கள் தான்.
தமிழ்நாட்டில் இந்தப் போராட்டத்தை முன் னின்று நடத்தி வரும் வைகோ போன்றவர்கள் ஏறத்தாழ கிறிஸ்தவர்கள் தான். அய்யப்பனைத் தரிசிக்கச் சென்றால் உயிரோடு திரும்பி வர முடியாது என்ற அளவுக் குப் பீதி கிளப்பப்பட்டுள் ளது. இதனால் பல பக் தர்கள் தங்கள் இருப் பிடத்திற்குப் பக்கத்திலேயே உள்ள அய்யப்ப சுவாமி கோவில்களில் விரதத்தை நிறைவு செய்யும் நிலைக் குத் தள்ளப்பட்டுள்ளனர் என்று ஆர்.எஸ்.எஸ். விஜய பாரதம் மூக்கால் அழுகிறது.
இதன் நோக்கம் சபரி மலை சென்று அய்யப்பப் பக்தர்கள் வணங்க வேண் டும். அய்யப்பன் கோவிலுக் குள்ள மவுசு, விளம்பரம் எந்த வகையிலும் மங்கிப் போய் விடக் கூடாது.
அய்யப்பன் கோவில், திருப்பதி கோவில், குரு வாயூரப்பன் கோவில் என்று கோவில்கள்தான் பரவலாக அறியப்பட்டுள் ளன.
அதற்கு வில்லங்கம் வந்துவிட்டால் பக்தியின் மகிமை படுத்து விடும் - இந்துத்துவாவிற்கு ஹானி ஏற்பட்டுவிடும் என்பதால்தான் இப்படிப் படபடக்கிறார்கள்.
உள்ளூர் கோவிலுக்குச் சக்தியில்லை என்பதையும் மறைமுகமாக ஒப்புக் கொண்டு விட்டனர்.
வைகோ போன்றவர் கள் இதுபோன்ற பிரச் சினைகளில் மூக்கை நுழைப்பது இல்லையென் றாலும் அவாள் பார்வை யில் எப்படிப் பார்க்கப்படு கிறார் என்பதுதான் முக் கியம்.
என்னதான் அரசியல் கட்சி என்றாலும் திராவிட இயக்கத்தைச் சேர்ந்த வர்களுக்குப் பகுத்தறிவுப் பிரச்சாரம் மிகவும் தேவைப் பட்ட ஒன்று என்பதைப் புரிந்துகொண்டால் சரி!
- மயிலாடன்

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...