Saturday, January 14, 2012

வியர்வை தொட்டு எழுதிய விடியல்!


கலைஞர் கவிதை

மார்கழி உச்சியில் மலர்ந்தது பொங்கல் என்று நமது
மனங் கவர் மகாகவி பாரதிதாசன் பாடினார் - மற்றும்
ரபு வழிக் கவிஞர் பல்லோர் தொடர்ந்து சொன்னதும் - தமிழ்
மண் மீது உழைக்கும் மாந்தர்தம் வியர்வை தொட்டு எழுதியதும் தான்
தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற நம்பிக்கை விடியலாகும்; அந்தத்
தகத்தகாய விடியலிலே தமிழரெல்லாம் கண் மலர்ந்து -
அகத்திலொரு அஞ்சாமைக் குணம் மலர்ந்து
அய்நூறு தமிழறிஞர் அய்யன் மறைமலையார் தலைமையிலே
ஆண்டுக் கணக்கு தமிழர்க்கு ஆரம்பமாவது
அட்டியின்றி சொல்வோம்; தை முதல் நாள் தான் என்று;
அறிவித்த தேதியாம்; அறிவு சேர் வரலாற்றை
அன்னையை மறப்பது போல் அருந்தமிழர் மறக்கலாமோ?
மறவாதிருக்கத் தான் மாண்புகொள்
மாத்தமிழ் மழலையர் கூட்டம் முதல்
மங்கையர் மணாளர் ஆடிப்பாடும் தோட்டம் வரை
மார்கழி உச்சியில் மலர்ந்திடும் தைப் பொங்கல் நாளை
மறவாமல் தமிழ்ப் புத்தாண்டு முதல் நாள் என - தமிழ்
மானமுள்ளோர் நாமென்று மாநிலம் அறிவதற்குப்
பறை சாற்றிப் பகுத்தறிவு வழி நடப்போம்!
துறைதோறும் செம்மொழிப் பயிர் வளர்ப்போம்!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...