Saturday, January 14, 2012

இருளில் பார்க்க நமக்கு கேரட்டுகள் உதவுகின்றனவா?


இருளில் பார்க்க கேரட்டுகள் நமக்கு  உதவுகின்றன என்று கூறப்படுவதில் உண்மை ஏதுமில்லை. வைட்டமின் ஏ கேரட்டில் அதிகமாக உள்ளது என்பது உண்மைதான். இச்சத்துக் குறைபாட்டினால், இரவில் பார்க்க முடியாத மாலைக்கண் நோய் ஏற்படுகிறது. அப்போது வெளிச்சத்தில் ஏற்படும் மாறுதல்களை கண் மிக மெதுவாகத்தான் உணர்ந்து கொள்கின்றன.

கம்பிகள்  மற்றும் கூம்புகள் என்றழைக்கப்படும்  வெளிச்சத்தை உணரும் செல்களால் ஆனது நமது கண்ணின் விழித்திரை . கூம்புகள் விவரங்களையும் வண்ணங்களையும் எடுத்துக் கொள்கின்றன. ஆனால் அது செயல்பட மிகுந்த ஒளி தேவை. கம்பிகளால் வண்ணத்தை வேறுபடுத்திக் காணமுடியாது. ஆனால் அது செயல்படுவதற்கு குறைந்த அளவு வெளிச்சமே போதும். இரவில் பார்ப்பதற்கு இது பயன்படும். ரோடோஸ்பின் என்னும் ஒரு மெல்லிய உணர்வுள்ள வேதிப் பொருள் அதில் இருக்கிறது. இதில் இருக்கும் முக்கியமான பொருள் வைட்டமின் ஏ ஆகும்.

மாலைக் கண் நோயை குணப்படுத்தும் எளிய வழி வைட்டமின் ஏ யினை அதிக அளவில் எடுத்துக் கொள்வதுதான்.  கரோட்டினில் இது அதிக அளவில் காணப்படுகிறது. கேரட்டில் கரோட்டின் உள்ளது. ஆனால் ஆப்ரிகாட், ஸ்பினாக், பில்பெர்ரி போன்ற பச்சை நிறம் மிகுந்த இலைகளைக் கொண்ட காய்களில் வைடமின் ஏ இன்னும் அதிகமாக உள்ளது. சாதாரணமாக இரவில் பார்க்கும் ஆற்றலை மேம்படுத்துவதில் இருந்து மிகவும் மாறுபட்டது பழுதடைந்த இரவுப் பார்வையை சரிசெய்வது. அதிக அளவில் கேரட்டுகளை உண்பதால் மட்டுமே இருட்டில் நன்றாக பார்ப்பதற்கு அது உதவாது. அதனால் செய்ய இயன்றது எல்லாம் உங்கள் தோலை ஆரஞ்சு நிறமாக மாற்றுவதுதான்.

இரண்டாம் உலகப் போரின்போது போர்ப்படைக் குழுத் தலைவர் ஜான் கன்னிங்ஹாம் (1917-2002) பூனைக்கண் கன்னிங்ஹாம் என்ற பெயர் பெற்றிருந்தார். அவரது 604 ஆவது போர்ப்படை இரவில் செயல்படும். அவர் அதிக அளவில் கேரட் உண்டதால், அவரால் இருட்டிலும் பார்க்க முடியும் என்று பரவிய வதந்திகளை ஆங்கிலேய அரசு ஊக்குவித்தது. விமானங்களின் நடமாட்டங்களைக் கண்காணிக்கும் ரேடார் சிஸ்டத்தை ரகசியமாக  அவர் வடிவமைத்துக் கொண்டிருந்தார் என்ற செய்தியை மறைக்கவே இந்த வதந்தி வேண்டுமென்றே  உருவாக்கி பரப்பப்பட்டது.

இந்த வதந்தியை உண்மை என்று ஜெர்மானியர் நம்பிவிட்டார்கள் என்று கூறமுடியாது. ஆனால் போர்க் காலம் முழுவதிலும் தொடர்ந்து கிடைத்துக் கொண்டே இருந்த ஒரே ஒரு காயான கேரட்டை ஆங்கிலேயர்களின் குழந்தைகள் உண்பதற்கு ஊக்கம் அளிக்க அது உதவியது.
கேரட் பிரச்சாரத்தை அரசு அளவுக்கு அதிகமாகவே செய்யத் தொடங்கியது. நல்ல ஆங்கிலேய மண்ணில் இருந்து தோண்டி எடுக்கப்படும் ஒளிமிகுந்த செல்வம் கேரட் என்று ஆகிவிட்டது.

(நன்றி: ஜான் லாயிட் மற்றும் ஜான் மிச்சின்சன்  ‘The Book of General
Ignorance’  பொதுவான அறியாமைகள் தமிழில் : த.க. பாலகிருட்டிணன்)

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...